惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
小众软件
小众软件
I
InfoQ
有赞技术团队
有赞技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
S
SegmentFault 最新的问题
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஒருவர் வாங்கிய கடனுக்காக குடும்பத்தினர், வாரிசுகள் பொறுப்...
2026-04-27 · via hindutamil

Updated on

2 min read

சாலை விபத்துக்களின்போது இழப்பீடு பெற எவ்வளவு காலத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும்?

சாலை விபத்துகளுக்கான இழப்பீடு Motor Vehicles Act, 1988 இன் கீழ் கோரப்படும். முன்னர் இந்த சட்டத்தின் பிரிவு 166(3) படி இழப்பீடு கோர 6 மாத காலவரையறை இருந்தது. ஆனால் தற்போது அந்த வரம்பு நீக்கப்பட்டுள்ளது. அதனால், தாமதமாக இருந்தாலும் சரியான காரணம் இருந்தால் இழப்பீடு கோருவதற்கு சட்டம் அதை அனுமதிக்கிறது.

இருப்பினும் நடைமுறையில், சம்பவம் நடந்ததும் விரைவாக மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான இழப்பீட்டு தீர்ப்பாயத்தி்ல் எப்ஐஆர், மருத்துவ ஆவணங்கள், மருத்துவ செலவுகள் போன்ற அனைத்து ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்வது நல்லது.

பொதுவாக இழப்பீடு கோர 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் மனு கொடுத்தால் அது வலுவானதாக கருதப்படும். எனவே, பாதிக்கப்பட்டவர் அல்லது அவரின் குடும்பத்தினர் உரிய சட்ட ஆலோசனை பெற்று இழப்பீடு கோர விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருவர் தவறுதலாகச் சிறைக்குச் சென்றால் அல்லது பொய்யான வழக்கில் சிக்க வைக்கப்பட்டால், அவர் இழப்பீடு கோர முடியுமா?

ஒருவர் தவறாக கைது செய்யப்பட்டாலோ அல்லது பொய்யான வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டாலோ, அவர் இழப்பீடு கோருவதற்கு முழு உரிமை உள்ளது. தவறான கைது என்பது அடிப்படை மனித உரிமை மீறலாகக் கருதப்படுகிறது.

இத்தகைய வழக்குகளில், நீதிமன்றம் இழப்பீடு வழங்குவதோடு, தவறு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடும். இது இந்திய அரசியலமைப்பின் அதிகாரம் 21இன் கீழ் அடிப்படை உரிமை மீறலாகும். இதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் அதிகாரம் 32இன் பிரகாரம் உச்ச நீதிமன்றத்திலும், அதிகாரம் 226 பிரகாரம் உயர் நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்து உரிய இழப்பீடு கோரலாம்.

மேலும், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் பிரிவு 250 அல்லது பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 227இன் படி தவறான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இழப்பீடு பெறலாம்.

இதற்கு கூடுதலாக, malicious prosecution என்ற அடிப்படையில் சிவில் வழக்கையும் தொடரலாம். மேலும் மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். இவ்வாறான வழக்குகளில், இழப்பீடு கோரும் போது தவறான கைது நடந்தது, என்று நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் உரிய இழப்பீட்டை வழங்கும்.

ஒருவர் வாங்கிய கடனுக்காக அவருடைய குடும்பத்தினர் அல்லது வாரிசுகள் சட்டப்படி பொறுப்பாவார்களா?

ஒருவர் வாங்கிய கடனுக்காக அவருடைய குடும்பத்தினர் அல்லது வாரிசுகள் தானாகவே சட்டப்படி பொறுப்பாவார்கள் என்ற புரிதல் பொதுமக்களிடையே அதிகமாக உள்ளது. ஆனால், சட்டத்தின் நிலைப்பாடு அதைவிட நுணுக்கமானதாகும்.

பொதுவாக, ஒருவர் வாங்கிய கடன் என்பது அவருடைய தனிப்பட்ட பொறுப்பாகும். அவர் உயிருடன் இருக்கும் வரை, அந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டியது அவருடைய கடமையாகும். ஆனால் அவர் இறந்த பிறகு, அந்தக் கடன் அவருடைய வாரிசுகளுக்கு நேரடியாக மாற்றப்படாது.

வாரிசுகள் தங்களது தனிப்பட்ட சொத்துக்களை பயன்படுத்தி அந்தக் கடனை அடைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. எனினும், மறைந்த நபரின் சொத்துகளை (estate) வாரிசுகள் பெற்றிருந்தால், அந்தச் சொத்துகளின் மதிப்பிற்குள் மட்டுமே கடனைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உண்டு.

இதுவே “estate liability” என்ற சட்டக் கோட்பாடு ஆகும். மேலும், வாரிசுகள் கடனுக்கு உத்தரவாதம் (guarantor) அளித்திருந்தால் அல்லது அவர்கள் கூட்டாக கடன் வாங்கியிருந்தால், அப்போது அவர்கள் தனிப்பட்ட முறையிலும் பொறுப்புக்குட்படுவார்கள்.

ஆகவே, வாரிசுகள் அனைத்து சூழ்நிலைகளிலும் கடனைச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை; அவர்கள் பெற்ற சொத்துகளின் வரம்புக்குள் மட்டுமே பொறுப்பு ஏற்படும் என்பது முக்கியமான சட்ட நிலைப்பாடாகும்.

வாடகைதாரர் ஒருவரை வீட்டைக் காலி செய்யச் சொல்லும்போது வீட்டு உரிமையாளர் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் யாவை?

ஒரு வாடகைதாரரை வீட்டை காலி செய்யச் சொல்லும்போது, வீட்டு உரிமையாளர் அவரை நேரடியாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ வெளியேற்ற முடியாது என்பது சட்டத்தின் தெளிவான நிலைப்பாடாகும். இது சட்டத்தால் பாதுகாக்கப்படும் உரிமையாகும்.

முதலில், வாடகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளின் அடிப்படையில் உரிய சட்ட நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். பொதுவாக, Transfer of Property Act, 1882-இன் பிரிவு 106 படி, குறைந்தது 15 நாட்கள் முன் நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும் (ஒப்பந்தத்தின் தன்மைக்கு ஏற்ப கால அவகாசம் மாறுபடலாம்).

அதன்பிறகும் வாடகைதாரர் வீட்டை காலி செய்ய மறுத்தால், உரிமையாளர் நீதிமன்றத்தில் eviction suit தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். மேலும், தமிழ்நாட்டில், தமிழ்நாடு நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் சட்டம், 2017 (TNRRRLT Act) அமலில் உள்ளது.

இச்சட்டத்தின் கீழ், landlord மற்றும் tenant ஆகியோரின் உரிமைகள் மற்றும் கடமைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் படி ரெண்ட் அதாரட்டி முன் மனு தாக்கல் செய்து eviction பெறலாம்.

குறிப்பாக, வாடகைதாரர் வாடகை செலுத்தாமல் இருப்பது, ஒப்பந்த விதிமுறைகளை மீறுவது, அல்லது landlord-க்கு சொந்த பயன்பாட்டிற்காக வீடு தேவையாக இருப்பது போன்ற காரணங்களின் அடிப்படையில் வெளியேற்றம் கோரலாம்.

மேலும், tenancy agreement பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சமாகும். ஆகவே, வாடகைதாரரை வெளியேற்றும் போது சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயமாகும்.

- ஆ.தாமோதரன், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்; தொடர்புக்கு: prosecutoradamodaran@gmail.com