惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Recent Announcements
Recent Announcements
V
Visual Studio Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Security Blog
Microsoft Security Blog
博客园 - 司徒正美
Y
Y Combinator Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
雷峰网
雷峰网
小众软件
小众软件
GbyAI
GbyAI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
aimingoo的专栏
aimingoo的专栏
MyScale Blog
MyScale Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
腾讯CDC
A
About on SuperTechFans
宝玉的分享
宝玉的分享
WordPress大学
WordPress大学
B
Blog RSS Feed
G
Google Developers Blog
量子位
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 三生石上(FineUI控件)

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தவெக அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இல்லையேல்....
தமிழினி · 2026-06-17 · via hindutamil

Updated on: 

சென்னை: "5 ஆண்டு காலம் தவெக ஆட்சி செய்தால் தமிழகத்தின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். திமுக ஆட்சியைவிட நீங்கள் குறைவாக கடன் வாங்கினால், நான் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்” என முன்னாள் நிதியமைச்சரும், திமுக மூத்த தலைவருமான தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தின் நிதித் துறை அமைச்சர் நேற்று வெள்ளை அறிக்கை வெளியிட்டார். தவெக அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்றுதான் சொல்ல வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்கள் இயலாமையை மூடிமறைக்க தவெக அரசு முயற்சி செய்கிறது.

தமிழகத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடுவது புதிதல்ல. அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது மூன்றாவது முறையாகும்.

அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில், அதற்கு முன்பிருந்த 1991 முதல் 2001 வரையிலான 10 ஆண்டு கால நிதிநிலை குறித்து விவரிக்கப்பட்டது. 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில், 15 ஆண்டு கால நிதிநிலையை கணக்கில் எடுத்துக்கொண்டு வெள்ளை அறிக்கை வெளியிட்டோம். ஆனால், இவர்கள் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை வெறும் 5 ஆண்டு காலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது.

திமுக ஆட்சியை மட்டும் சொல்ல வேண்டிய காரணம் என்ன? திமுக ஆட்சிக் காலத்தை மட்டும் மையமாக வைத்து வெள்ளை அறிக்கை வெளியிட்டது ஏன்? யாரை காப்பாற்றுவதற்காக இந்த வெள்ளை அறிக்கையில் முந்தைய ஆட்சிக் கால விவரங்கள் இடம்பெறவில்லை? தீர்ந்து போனதாக சொல்லப்படுபவர்களை கவருவதற்காகவே இதை செய்கிறார்களா?

ஆழம் தெரியாமல் காலை விட்டு, நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை மக்கள் மன்றத்தில் வழங்கி, மக்களை நம்ப வைத்து ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டார்கள். தற்போது அந்த தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

திமுக வெள்ளை அறிக்கை வெளியிட்டபோதும், நிதிநிலை எதுவாக இருந்தாலும் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை தெளிவாக தெரிவித்தோம். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய நோக்கமே, புதிய திட்டங்களை செயல்படுத்த நிதிப் பற்றாக்குறை உள்ளது என்பதை ஆரம்பத்திலேயே கூறுவதாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று தவெக அரசு கைவிரித்துள்ளது.

பொதுவாக, வெள்ளை அறிக்கையை பட்ஜெட்டுக்கு முன்னதாக வெளியிடுவார்கள். ஆனால் இவர்கள் பட்ஜெட் மற்றும் ஆளுநர் உரைக்கு முன்னதாக இதை வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம், நாளை ஆளுநர் உரையில் புதிய திட்டங்களை சொல்ல வேண்டும்; கொடுத்த வாக்குறுதிக்கான கொள்கைகளை சொல்லும்போது இந்த திட்டங்களை நாங்கள் செயல்படுத்துவதாக அவர்கள் சொல்ல வேண்டும். அதில் புதிய திட்டங்களை சொல்ல எங்களுக்கு வாய்ப்பில்லை என்பதை முன்னதாகவே தெரிவித்திருக்கிறார்கள் என கருதுகிறேன்.

தவெக அரசு தனது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தால், இந்த ஆட்சியின் முடிவில் மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ.20 லட்சம் கோடியை தொடும் என்பதை நான் சவாலாக சொல்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் திமுக ஆட்சியில் பெறப்பட்ட சராசரி கடனை விட, தற்போதைய அரசு குறைவாக கடன் வாங்கினால் நான் வகிக்கும் பொறுப்பில் இருந்து விலகத் தயாராக இருக்கிறேன்.

குஜராத்தை ஒப்பிட்டு பேசியிருக்கிறார்கள். தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டம், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட பல திட்டங்களை அவர்கள் செய்யவில்லை. ஆனால் தமிழகத்தில் இதுபோன்ற நலத்திட்டங்களை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

ஒன்றிய அரசின் நிதி குறைப்பு காரணமாகவே வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், வெள்ளை அறிக்கையில் ஒன்றிய அரசு பற்றி குறிப்பிடப்படவில்லை. நிதி மேலாண்மையை சரியாக செய்யாததால்தான் கடன் அதிகரித்தது என்ற பொய்யான தோற்றத்தை மக்கள் மத்தியில் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற சராசரியாக ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும். மூலதனச் செலவுகளுக்காக ரூ.50,000 கோடி செலவிட்டாலும், அரசின் மொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள். மக்களின் நலத் திட்டங்களுக்கான அதிகளவில் செலவு செய்துள்ளோம். உங்களுக்கும் இவ்வளவு பணம் தேவைப்படும்.

தமிழ்நாட்டின் சொந்த வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறுகிறார்கள். அப்படி, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி எப்படி வந்தது? டெல்லி சென்று 'தமிழ்நாடு 2-வது பெரிய பொருளாதாரம்' என்று முதல்வர் சொன்னாரே... இதெல்லாம் எப்படி சாத்தியமானது?

தமிழகத்தின் நிதி நிலையை முன்னதாகவே நாங்கள் தெளிவாக தெரிவித்துவிட்டோம். அதன் பிறகுதான் தவெக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியது. திமுக ஆட்சிக்கு வரும்போதும் இதுபோன்ற நெருக்கடி இருந்தது.

தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும் என்பதை, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலேயே எல்லோரும் பார்த்தோம். நிதிநிலையில் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும், கொடுத்த வாக்குறுதிகளை திமுக ஆட்சி நிறைவேற்றியது. ஆனால் தவெக ஆட்சியோ, நிதி நெருக்கடியை காரணம் காட்டி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என சொல்லாமலே சொல்கிறது.

ஆரம்பத்திலேயே அம்பேல் என தெரிவித்துவிட்டனர். ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நலத்திட்டங்கள், நீங்கள் அளித்த வாக்குறுதிகள் ஆகியவைகளை நிறைவேற்றிவிட்டு ஓர் அறிக்கையை கொடுத்தால் சரியாக இருக்கும்” என்று தங்கம் தென்னரசு தெரிவித்தார்.