惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
F
Fortinet All Blogs
量子位
G
Google Developers Blog
J
Java Code Geeks
N
Netflix TechBlog - Medium
博客园 - 聂微东
宝玉的分享
宝玉的分享
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
月光博客
月光博客
The Cloudflare Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
爱范儿
爱范儿
雷峰网
雷峰网
M
MIT News - Artificial intelligence
T
Tailwind CSS Blog
V
Visual Studio Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
aimingoo的专栏
aimingoo的专栏
Martin Fowler
Martin Fowler
有赞技术团队
有赞技术团队
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமையை பறிக்க முடியாது... ...
Guest Author · 2026-05-28 · via hindutamil

மேகேதாட்டு பகுதி.

Updated on: 

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அண்மையில் பேசுகையில், “மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மத்திய அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் பூமி பூஜை நடத்தப்படும். இதனை தமிழக அரசு எதிர்க்க எந்த உரிமையும் இல்லை” எனக் கூறினார்.

தமிழகத்துக்கு எதிர்க்கும் உரிமை இல்லை என்று டி.கே.சிவகுமார் கூறுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஜனநாயகத்திலும் கூட்டாட்சியிலும் இத்தகைய அணுகுமுறை விரும்பத்தக்கதல்ல. மேகேதாட்டு கர்நாடக மக்களுக்கு நியாயமான தேவையாக இருக்கலாம். ஆனால் அந்தத் தேவையை முன்னிறுத்தி, காவிரி பாயும் பிற மாநிலங்களின் நியாயமான உரிமைகளையும் நிராகரிக்க முடியாது.

தமிழ்நாட்டின் காவிரி உரிமைகள் என்பது கர்நாடகா வழங்கிய கருணையோ அல்லது அரசியல் சலுகையோ அல்ல. தமிழ்நாட்டின் உரிமைகள் என்பது உச்ச நீதிமன்றத்தாலும் சட்டத்தாலும் உறுதி செய்யப்பட்ட உரிமைகள். இதனை டி.கே.சிவகுமார் போன்றவர்கள் மறந்துவிடக் கூடாது.

கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தி ஆவதாலே, அதன் முழுமையான உரிமையை அம்மாநிலம் மட்டும் கோர முடியாது. அப்படி ஒவ்வொரு மாநிலமும் பேச ஆரம்பித்தால் இந்தியாவில் மாநிலங்களிடையேயான ஒற்றுமை என்ன ஆகும்? டி.கே.சிவகுமாரின் கருத்து கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையை கேள்விக்குள்ளாக்குவதாக உள்ளது. உச்ச நீதிமன்றம் இதுவரை மேகேதாட்டு திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை.

தமிழ்நாட்டின் மனுவை நிராகரித்தபோது, திட்டம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், அதனை எதிர்ப்பது தற்போதைக்கு உகந்ததல்ல என தெரிவித்தது. இதனை திட்டத்திற்கு முழுமையான அனுமதி கிடைத்துவிட்டது என சொல்வது சரியானதல்ல. மேகேதாட்டு திட்டம் இன்னும் தொழில்நுட்ப, சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகளுக்காக காத்திருக்கிறது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் திட்டத்தின் பல அம்சங்கள் இன்னும் ஆய்வில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. எனவே, இந்தத் திட்டம் இன்னும் பரிசீலனை நிலையில் உள்ளது என்பதே உண்மை.

இந்த திட்டம் தொடர்பாக தமிழகத்தின் மிகப்பெரிய கவலை நீரின் அளவைப் பற்றியது மட்டும் அல்ல. அது நீர் திறக்கப்படும் காலத்தைப் பற்றியது. காவிரி டெல்டா விவசாயம் ஒரு கால அட்டவணையைச் சார்ந்துள்ளது. குறுவை, சம்பா, தாளடி போன்ற சாகுபடிகள் குறிப்பிட்ட மாதங்களில் நீர் கிடைக்கும்போது மட்டுமே வெற்றிகரமாக நடைபெற முடியும். விவசாயிக்கு ஆண்டு முடிவில் மொத்தமாக எவ்வளவு நீர் கிடைத்தது என்பது முக்கியமல்ல. பயிர் நட்ட நேரத்தில் நீர் கிடைத்ததா என்பதே முக்கியம். நீர் வெளியீட்டில் சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டால்கூட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படலாம்.

கடந்த பல ஆண்டுகளில் காவிரி நீர் தாமதமாக திறக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் அதன் தாக்கத்தை முதலில் சந்தித்தவர்கள் டெல்டா விவசாயிகள்தான். விதைப்பு தாமதமானது, சாகுபடி பரப்பளவு குறைந்தது, விளைச்சல் பாதிக்கப்பட்டது, விவசாயக் கடன்கள் அதிகரித்தன. குறுவை சாகுபடி முற்றிலுமாக கைவிடப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. விவசாயிகள் நீதிமன்ற தீர்ப்புகளுக்காகவும், நீர் திறப்புக்காகவும் காத்திருந்த சூழல்கள் தமிழ்நாட்டின் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளன.

டெல்டா விவசாயிகள் சந்தித்த பொருளாதார இழப்புகள் மிகப் பெரியவை. பயிர் சேதங்கள், கடன் சுமைகள், வாழ்வாதார நெருக்கடிகள் மற்றும் சமூக பாதிப்புகள் அனைத்தும் பதிவாகியுள்ளன. இந்த வரலாற்றுப் பின்னணியில்தான் தமிழ்நாடு இன்று கூடுதல் நீர்த்தேக்கத் திட்டங்களை எச்சரிக்கையுடன் அணுகுகிறது. ஒரு பெரிய நீர்த்தேக்கம் உருவாக்கப்படும்போது அது வெறும் நீரை சேமிப்பதற்கான வசதியாக மட்டுமல்லாமல், நீரின் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் அதிகாரமாகவும் மாறுகிறது. அந்த அதிகாரம் இன்று எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது

மட்டுமல்ல, எதிர்காலத்தில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதையும் தமிழ்நாடு கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும், மேகேதாட்டு திட்டம் அமைக்கப்பட உள்ள பகுதி சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். காடுகள், வனவிலங்குகள், உயிரினப் பன்மை மற்றும் இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியில் இத்தகைய பெரிய கட்டுமானம் மேற்கொள்ளப்படும்போது அதன் நீண்டகால சுற்றுச்சூழல் விளைவுகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் பங்கும் மிக முக்கியமானது. மத்திய அரசு ஒரு நடுநிலை அமைப்பாக செயல்பட்டு, எந்த மாநிலத்தின் அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தொழில்நுட்ப உண்மைகள் மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளின் அடிப்படையில் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் நியாயமான அச்சங்கள் முழுமையாக பரிசீலிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் காவிரி தீர்ப்பாயமும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய உரிமைகள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. அத‌ற்கான உறுதியான சட்ட,தொழில்நுட்ப மற்றும் நிர்வாக உத்தரவாதங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழகம் எதிர்ப்பார்க்கிறது. அது கிடைக்கும் வரை தமிழகம் தனது எதிர்ப்பைத் தொடர்வது நியாயமானதும், சட்டபூர்வமானதும் ஆகும்.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசு மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். எந்த ஒரு மாநிலத்தின் அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தொழில்நுட்ப மற்றும் சட்ட அடிப்படைகளின் பேரில் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். “நதி எங்கள் மாநிலத்தில் உருவாகிறது; எனவே எங்களுக்கே முழு உரிமை” என்ற கொள்கை இந்தியாவின் நீர்வள நிர்வாகத்தை குழப்பத்திற்கு உள்ளாக்கும்.

அதனால் இந்த விவகாரம் காவிரியைத் தாண்டி, இந்திய கூட்டாட்சியின் எதிர்காலத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும்.

- எஸ்.வி.ரமணி