

























Updated on:
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாம் கேள்விப்படாத அல்லது அப்போது அறிமுகமான பல புதிய துறைகள் இன்றைக்கு வேலைவாய்ப்பில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன. அவற்றில் சில:
செயற்கை நுண்ணறிவுப் பயிற்சியாளர் (AI Trainer)
செயற்கை நுண்ணறிவுக் (ஏ.ஐ.) கருவிகள் இயங்குவதற்கு முறையான பயிற்சியை வழங்கி, தரவுகளைச் சரிபார்த்து, மேம்படுத்துவதுதான் ஏ.ஐ. பயிற்சியாளரின் பணி. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால், இத்துறைக்கான வேலைவாய்ப்பு அதிகரித்துவருகிறது.
கிரியேட்டர் மேலாளர் (Creator Manager)
சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்கள், கிரியேட்டர்களின் பிராண்ட் ஒப்பந்தங்கள், நிகழ்ச்சிப் பங்கேற்பு, நிதி மேலாண்மை, தொழில் வளர்ச்சியை நிர்வகிப்பதுதான் இவர்களின் வேலை. உலக அளவில் ‘கிரியேட்டர் எகானமி' வளர்ந்த பிறகு, இந்தப்பணி பெரும் முக்கியத் துவம் பெற்றுள்ளது.
யூடியூப் அலைவரிசை மேலாளர் (YouTube Channel Manager)
யூடியூப் அலைவரிசையின் உள்ளடக்கத் திட்டமிடல், எஸ்இஓ (SEO - Search Engine Optimization), வருவாய் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் திறம்படச் செய்வது யூடியூப் அலைவரிசை மேலாளரின் முக்கியப் பொறுப்பு.
ட்ரோன் பைலட் (Drone Pilot)
விவசாயம், திரைத்துறை, கட்டுமானம், பேரிடர் மேலாண்மை போன்ற துறைகளில் ட்ரோன்களைத் திறம்பட இயக்கி, தேவையான தரவுகளையும் காட்சிகளையும் சேகரிக்க ட்ரோன் பைலட்டுகள் தேவைப்படுகிறார்கள்.
பாட்காஸ்ட் தயாரிப்பாளர் (Podcast Producer)
பாட்காஸ்ட் நிகழ்ச்சிகளுக்கான உள்ளடக் கத்தைத் திட்டமிடுதல், ஒலிப்பதிவு செய்தல், எடிட்டிங் போன்ற வேலைகளுக்கான பொறுப்பை இவர்கள் ஏற்க வேண்டும்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆலோசகர் (Sustainability Consultant)
சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை நடைமுறை களை நிறுவனங்கள் எப்படிப் பின்பற்ற வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளை வழங்குவதே இவர்களின் முக்கிய வேலை.
ESG பகுப்பாய்வாளர் (Environmental, Social and Governance Analyst)
பெருநிறுவனம் ஒன்று சுற்றுச் சூழல், சமூகம், நிர்வாகம் என இந்த மூன்று விஷயங்களை எப்படிப் பொறுப்போடு அணுகுகிறது என்பதை மதிப்பிடுவது தான் இவர்களின் பணி. நிறுவனங்களின் ‘ESG’ மதிப்பீட்டை அலசி ஆராய்ந்ததற்குப் பிறகே முதலீட்டாளர்கள் ஒப்பந்தம் செய்கிறார்களாம்!
சைபர் தடயவியல் நிபுணர் (Cyber Forensics Expert)
டிஜிட்டல் குற்றங்கள் தொடர்பான ஆதாரங் களை அறிவியல் பூர்வமாக ஆய்வுசெய்து தகவல் சேகரிக்க சைபர் தடயவியல் நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.
பிராம்ப்ட் இன்ஜினீயர் (Prompt Engineer)
ஏ.ஐ. கருவிகளிடம் இருந்து மிகத் துல்லிய மான, தரமான பதில்களைப் பெறுவதற்குச் சரியான கட்டளைகளை (Prompts) வடிவமைப்பதில் இவர்கள் நிபுணத்துவம் பெற்றவர் கள். ஏ.ஐ. புரட்சியால் உருவான ட்ரெண்டிங் வேலைகளில் இதுவும் ஒன்று!
கிளவுட் கட்டமைப்பு நிபுணர் (Cloud Architect)
இன்று பெரும் பாலான நிறுவனங் கள் தங்களின் தரவுகளையும் மென்பொருள் களையும் கிளவுட் தளங்களுக்கு மாற்றி வருகின்றன. அவ்வாறு மாற்றப்படும் தரவுகளைப் பாதுகாப்பாக வடிவ மைத்து, நிர்வகிக்கும் பொறுப்பை இவர்கள் ஏற்கிறார்கள்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。