惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
The GitHub Blog
The GitHub Blog
博客园 - Franky
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Recent Announcements
Recent Announcements
量子位
aimingoo的专栏
aimingoo的专栏
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Martin Fowler
Martin Fowler
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
A
About on SuperTechFans
T
Tailwind CSS Blog
V
V2EX
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
B
Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அன்றாடம் பயன்படுத்தப்படும் Gகள்! - வேலைன்னு வந்துட்டா... ...
நெடுஞ்செழியன்.தா · 2026-06-17 · via hindutamil

Updated on: 

கூகுள் மேப்பில் வழி தேடுவது, ட்ரோன் மூலம் நிலங்களை அளவிடுவது, வெள்ள அபாயப் பகுதிகளைக் கணிப்பது, செயற்கைக்கோள் படங்களை ஆய்வுசெய்வது எனப் புவியியல் சார்ந்த தொழில்நுட்பங்கள் இன்று நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்டன.

இவற்றைப் பற்றிப் பேசும்போது ஜியோடசி, ஜியோ மேட்டிக்ஸ், ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ், ஜிஐஎஸ் போன்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருப்போம். இவை அனைத்தும் ஒரே பொருளைக் குறிக்கின்றனவா? இல்லை. ஒன்றுக்கு மற்றொன்று தொடர்புடையவை என்றாலும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பங்கு உண்டு.

அடித்தளம் – ஜியோடசி ஒரு கட்டிடத்துக்கு எப்படித் தளம் முக்கியமோ, அதுபோல இந்தத் துறைகள் அனைத்துக்கும் அடித் தளமாக இருப்பது ஜியோடசி. பூமியின் வடிவம், அளவு, சுழற்சி, ஈர்ப்பு விசை ஆகியவற்றை மிகத் துல்லியமாக ஆய்வு செய்யும் அடிப்படை அறிவியல் தான் ஜியோடசி. ஜிபிஎஸ் (GPS), ஜிஎன்எஸ்எஸ் (GNSS) போன்ற இடம் காணும் அமைப்புகள் துல்லியமாகச் செயல்படுவதற்கும் உலகம் முழுவ தும் ஒரே அளவீட்டு முறையைப் பின்பற்றுவதற்கும் இந்த அறிவியலே அடித்தளமாக உள்ளது.

கோட்பாட்டை ஜியோடசி வழங்கு கிறது எனில், அந்தக் கோட்பாட்டைக் களத்தில் செயல்படுத்துவது ஜியோமேட் டிக்ஸ். நிலப்பரப்பை நேரடியாக அளவிடுதல், ட்ரோன்கள் மூலம் படம் பிடித்தல், ‘LiDAR’ தொழில்நுட்பத்தின் மூலம் தகவலைப் பதிவுசெய்தல், செயற்கைக்கோள் தரவைப் பெறுதல் போன்ற அனைத்தும் ஜியோமேட்டிக்ஸ் துறையின் பணிகளாகும்.

சென்னை வெள்ள வடிகால் திட்டங்கள், நில அளவீடுகள், காட்டுப் பகுதி கண்காணிப்பு போன்ற பல பணிகளில் இந்தத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் சேகரிக்கப்படும் தரவுகள் தான், அடுத்ததாக ஜியோ இன்ஃபர் மேட்டிக்ஸ் மூலம் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

தரவுகளைச் சேகரிப்பது மட்டுமே போதாது. அவற்றைப் பகுப்பாய்வு செய்து பயனுள்ள தகவல் களாக மாற்ற வேண்டும். அதைத்தான் ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் செய்கிறது.

செயற்கைக்கோள்கள், ட்ரோன்கள், நில அளவீடுகள் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான தரவுகளைக் கணினி அறிவியல், தரவு இயல், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஆய்வுசெய்து திட்டமிடலுக்கும் முடிவெடுப்பதற்கும் உதவும் முக்கியத் தகவலாக மாற்றுகிறது.

ஒரு பகுதியில் காட்டுப்பரப்பு குறைந்துள்ளதா, எந்தெந்த இடங்களில் வெள்ள அபாயம் அதிகம், நகர வளர்ச்சி எந்தத் திசையில் நடை பெறுகிறது, எந்தெந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர் வளம் குறைகிறது என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிப்பது இந்தத் துறையின் முக்கியப் பணி யாகும்.

ஜிஐஎஸ் (GIS) என்பது ஜியோ இன்ஃபர் மேட்டிக்ஸ் துறையின் மிக முக்கியமான கருவி அல்லது அமைப்பு எனலாம். தரவுகளைச் சேமித்து, பகுப்பாய்வு செய்து, வரைபடமாகக் காட்சிப்படுத்தி முடிவெடுக்க உதவும் ஒரு தொழில்நுட்ப அமைப்பே ஜிஐஎஸ். அது தனி அறிவியல் துறை அல்ல. அதனால்தான் ஒரே வரைபடத்தில் மருத்துவமனைகள், சாலைகள், மக்கள்தொகை, மழைப் பொழிவு, வெள்ள அபாயம், நிலப் பயன் பாடு போன்ற பல்வேறு தகவல்களை ஒருங்கிணைத்து ஆய்வுசெய்ய முடி கிறது.

அன்றாட வாழ்க்கையில்

இந்தத் தொழில்நுட்பங்கள் நமக்குத் தெரியாமலேயே இன்றைக்கு நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாகி விட்டன. கூகுள் மேப்ஸ், ஊபர் போன்ற செயலிகள் போக்குவரத்து நெரிசலைக் கணித்து விரைவான பாதையைத் தேர்வு செய்கின்றன.

ஸ்விகி, ஸொமேட்டோ போன்ற செயலிகள் அருகிலுள்ள விநியோக மையத்தி லிருந்து உணவை விரைவாக விநியோகிக்கின்றன. அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் முகவரிகளைப் புவியியல் இடங்களாக மாற்றி விநியோகத் திட்டமிடலை மேம்படுத்துகின்றன. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல டிஜிட்டல் சேவைகளின் பின்னணியில் இந்தத் தொழில் நுட்பங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு அமைதியாக இயங்கிக் கொண்டி ருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐஆர்எஸ்

தமிழ்நாட்டில் இந்தத் துறையின் வளர்ச்சிக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் ரிமோட் சென்சிங் நிறுவனம் (IRS) குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் மு.ஆனந்த கிருஷ்ணனின் முன்னெடுப்பினால் வளர்ச்சியடைந்த இந்த நிறுவனம் இந்தியாவின் தலைசிறந்த ஜிஐஎஸ், ஜியோமேட்டிக்ஸ் ஆய்வு மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) வரைபடங்கள், பேரிடர் மேலாண்மை, நகரத் திட்டமிடல், நிலத்தடி நீர் ஆதாரங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட பல தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பப் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது.

இந்நிறுவ னத்தின் பங்களிப்பு ஆய்வகங்களோடும் வகுப்பறைகளோடும் நின்றுவிடவில்லை. இங்கு பயின்ற முன்னாள் மாணவர்கள் இஸ்ரோ, இந்திய நில அளவை நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசு அமைப்புகளிலும், முன்னணி விண் வெளி, புவியிடத் தொழில்நுட்பம், இடப்பெயர்ச்சி (லாஜிஸ்டிக்ஸ்) நிறுவனங்களிலும் முக்கியப் பொறுப்பு களை வகித்துவருகின்றனர்.

உலகளாவிய வேலைவாய்ப்புகளை வழங்கும் இந்தத் துறைகளை ஒரே வரியில் சுருக்கிச் சொன்னால், பூமியைப் புரிந்துகொள்வது ஜியோடசி; பூமியை அளவிடுவது ஜியோமேட்டிக்ஸ்; சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்வது ஜியோ இன்ஃபர் மேட்டிக்ஸ்; அவற்றை வரைபடமாகக் காட்சிப்படுத்தி முடிவெடுக்க உதவுவது ஜிஐஎஸ். எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்தப் புவியிடத் தொழில்நுட்பத் துறைகளை மாணவர்கள் தவறவிட்டு விடாதீர்கள்!

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org