惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

量子位
Stack Overflow Blog
Stack Overflow Blog
人人都是产品经理
人人都是产品经理
The GitHub Blog
The GitHub Blog
Engineering at Meta
Engineering at Meta
Vercel News
Vercel News
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Y
Y Combinator Blog
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
B
Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
V
Visual Studio Blog
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件
Google DeepMind News
Google DeepMind News
D
DataBreaches.Net
博客园 - 司徒正美
B
Blog RSS Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
罗磊的独立博客
Hugging Face - Blog
Hugging Face - Blog
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருமாவளவனின் 35 ஆண்டு போராட்டம்: அதிகாரத்தை பிடித்த விசி...
2026-05-22 · via hindutamil
வீரமணி சுந்தரசோழன்

Updated on

2 min read

விடுதலை சிறுத்தைகள் கட்சி உருவாக்கப்பட்டு 35 ஆண்டுகள் கழித்து இப்போது, முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது. விசிக மற்றும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடந்து வந்த பாதையை பார்ப்போம்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் 1967-ஆம் ஆண்டு ஆகஸ்டு 17-ஆம் தேதி பிறந்தவர் திருமாவளவன். சொந்த ஊரில் பள்ளிப்படிப்பும், சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை படிப்பும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் படிப்பும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்த திருமாவளவனுக்கு தடயவியல் துறையில் பணி கிடைத்தது.

மதுரையில் பணியில் இருந்தபோது, ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் மலைச்சாமியுடன் இணைந்து செயல்பட தொடங்கினார். அப்போது ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார் திருமாவளவன்.

1990-ல் மலைச்சாமி படுகொலை செய்யப்பட, 1990-ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் அமைப்பின் மாநில அமைப்பாளராக திருமாவளவன் தேர்வானார். அமைப்புக்கு புதிய கொடியை அறிமுகப்படுத்திய அவர், 1991-ல் அந்த அமைப்பின் பெயரை ‘விடுதலை சிறுத்தைகள்’ என மாற்றினார்.

தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு போராட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் இருந்த 90-களில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு பல்வேறு போராட்டங்களையும், மாநாடுகளையும் நடத்தியது. சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம் என்ற கொள்கையோடு தொடக்க காலங்களில் தமிழகம் முழுவதும் இந்த அமைப்பு பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

ஒரு கட்டத்தில் சாதி, மத அடையாளம் இல்லாமல் அனைவரும் தமிழில் பெயரிட வேண்டும் என்பதை ஒரு இயக்கமாகவே மாற்றினார் திருமாவளவன். இதனால் ஆயிரக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தூயத் தமிழ் பெயர்களை சூட்டிக்கொண்டனர். தன் தந்தையின் பெயரையும் இராமசாமி என்பதிலிருந்து, தொல்காப்பியன் என்று தமிழில் மாற்றினார். இதனால் இரா.திருமாவளவனாக இருந்தவர் தொல்.திருமாவளவன் ஆனார். தொடக்க காலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் இணைந்து பல முன்னெடுப்புகளையும் இவர் செய்துள்ளார்.

அரசியல் இயக்கமாக இருந்த விடுதலை சிறுத்தைகளை, தேர்தல் பாதைக்கு கொண்டு வந்தவர் ஜி.கே.மூப்பனார். 1999 மக்களவைத் தேர்தலில் அவரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தது விசிக. அந்த ஆண்டுதான் தனது அரசுப் பணியையும் திருமாவளவன் ராஜினாமா செய்தார். அதன்பின்னர் 2001-ல் திமுக - பாஜக கூட்டணியில் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது விசிக. இதில் காட்டுமன்னார்கோவிலில் போட்டியிட்ட திருமாவளவன் மட்டும் வென்றார். அவர் 2004ல் தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

2004 மக்களவைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இணைந்து 8 தொகுதிகளில் அம்பு சின்னத்தில் போட்டியிட்ட விசிக, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கோயில் மணி சின்னத்தில் 9 இடங்களில் விசிக போட்டியிட்டு இரு இடங்களில் வென்றது.

2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரு தொகுதிகளில் நட்சத்திரம் சின்னத்தில் போட்டியிட்டது விசிக. அப்போது சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றிபெற்று முதன்முறையாக நாடாளுமன்றம் சென்றார்.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 10 தொகுதிகளில், தொலைக்காட்சி பெட்டி மற்றும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னங்களில் போட்டியிட்ட விசிக அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. இதன்பின்னர் 2014 மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் 2 தொகுதிகளில் மோதிரம் சின்னத்தில் போட்டியிட்ட விசிக, இரண்டிலும் தோற்றது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்க முக்கிய பங்காற்றினார் திருமாவளவன். இதில் இடதுசாரிகள், மதிமுக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அப்போது மோதிரம் சின்னத்தில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக, அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது. அப்போது காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன், அதிமுக வேட்பாளரிடம் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

அதன்பின்னர் 2019-ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிகவுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் பானை சின்னத்தில் சிதம்பரத்தில் போட்டியிட்ட திருமாவளவனும், விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமாரும் வென்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அணியில் பானை சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது.

2024 மக்களவைத் தேர்தலில் இரு தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு விசிக வெற்றிபெற்றது. இதன் காரணமாக விசிகவுக்கு அந்த தேர்தலில் மாநிலக் கட்சிக்கான அங்கீகாரம் கிடைத்தது.

1991-ல் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை உருவாக்கிய திருமாவளவன், கிட்டத்திட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றார். அக்கட்சியின் நிரந்தர சின்னமாக பானை மாறியது.

அதன்பின்னர் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை எதிர்பார்த்தது விசிக. ஆனால் நீண்ட இழுபறிக்கு பின்னர் 8 தொகுதிகளை ஒதுக்கியது திமுக, அதில் இரு இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்றது. இந்தத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து, தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியானது. இதனையடுத்து தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிப்பதாக முதலில் அறிவித்த விசிக, இப்போது அமைச்சரவையில் இணைந்துள்ளது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான வன்னி அரசு இப்போது சமூக நீதித் துறை அமைச்சராகியுள்ளார்.

1999-ல் மூப்பனார் தலைமையில் முதன்முதலில் தேர்தலை சந்தித்த திருமாவளவன், அப்போதே ‘ஆட்சியில் பங்கு - அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை முன்வைத்தார். திருமாவளவனின் அந்த முழக்கம், கால் நூற்றாண்டு கழித்து இப்போது முதல்வர் விஜய் தலைமையிலான அரசில் நிஜமாகியுள்ளது.

மாண்புமிகு அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் பணிகளை தொடங்கினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்! pic.twitter.com/EaqHh863Ap

— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 22, 2026