惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
GbyAI
GbyAI
C
Check Point Blog
腾讯CDC
Stack Overflow Blog
Stack Overflow Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
Recent Announcements
Recent Announcements
L
LangChain Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
小众软件
小众软件
J
Java Code Geeks
博客园_首页
Jina AI
Jina AI
美团技术团队
H
Help Net Security
MyScale Blog
MyScale Blog
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்காவில் ஸ்கை டைவிங் விமானம் நொறுங்கி விபத்து: 12 பே...
வெற்றி மயிலோன் · 2026-06-15 · via hindutamil

Updated on: 

மிசூரி: மத்திய அமெரிக்க மாகாணமான மிசூரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) சாகசத்தில் ஈடுபட்ட ஒரு ஸ்கை டைவிங் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 12 பேர் உயிரிழந்தனர்.

மிசூரியில் ஸ்கை டைவிங் சாகசத்துக்காக விமானி மற்றும் 11 பயணிகளுடன் சென்ற விமானம், ஞாயிற்றுக்கிழமை அன்று வயலில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததில், அதில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர். ஞாயிறு காலை 11:30 மணியளவில் பட்லர் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்தது.

உயிரிழந்த அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களின் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் பணியில் அதிகாரிகள் உடனடியாக ஈடுபட்டனர்.

அந்தத் தனியார் விமானத்தை ஸ்கை டைவ் கான்சஸ் சிட்டி நிறுவனம் இயக்கியதாக விமான நிலைய மேலாளரும், பேட்ஸ் கவுண்டி அவசரகால மேலாண்மை முகமையின் இயக்குநருமான டென்னிஸ் ஜேக்கப்ஸ் கூறினார். அது ஒற்றை எஞ்சின் டர்போப்ராப் விமானம் என அடையாளம் காணப்பட்டது.

விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, விமானத்தின் சிதைவுகளில் ஏற்பட்ட தீயை அவசரகால மீட்புப் பணியாளர்கள் அணைத்ததாக ஜேக்கப்ஸ் கூறினார்.

ஸ்கை டைவிங் நிறுவனங்கள் இப்பகுதியில் வருடத்திற்கு எட்டு முதல் ஒன்பது மாதங்கள் செயல்படுகின்றன. பொதுவாக மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் தொடங்கி அக்டோபர் அல்லது நவம்பர் வரை ஸ்கை டைவிங் சாகசம் நீடிக்கும்.