惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

P
Proofpoint News Feed
Blog — PlanetScale
Blog — PlanetScale
GbyAI
GbyAI
C
Check Point Blog
腾讯CDC
Stack Overflow Blog
Stack Overflow Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
The GitHub Blog
The GitHub Blog
A
About on SuperTechFans
Recent Announcements
Recent Announcements
L
LangChain Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
小众软件
小众软件
J
Java Code Geeks
博客园_首页
Jina AI
Jina AI
美团技术团队
H
Help Net Security
MyScale Blog
MyScale Blog
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன்...
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் · 2026-06-25 · via hindutamil

Updated on: 

பலன்கள்: இந்த வாரம் சுக ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பால் ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்து கொள்வது மனதிற்கு திருப்தியை தரும். கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள்.

கலைத் துறையினருக்கு இருந்த போட்டிகள் அகலும். அரசியல் துறையினருக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும்.

அஸ்வினி: இந்த வாரம் தைரியம் அதிகரிக்கும். ஜீரண கோளாறுகள் ஏற்படலாம். பணம் பல வழிகளிலும் செலவாகும். காரிய தாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வீண் மனக் கவலை நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் அவசியம். நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்.

பரணி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலைப் பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை. அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.

பரிகாரம்: மாரியம்மனை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன நிம்மதி உண்டாகும்.

பலன்கள்: இந்த வாரம் ராசியில் செவ்வாய் இருப்பதால் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பர பொருட்கள் சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள்.

மேலிடத்தில் இருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். கலைத் துறையினருக்கு எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமை அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக் கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சோம்பேறிதனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். அறிவு திறன் அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவது போல் இருக்கும். ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள்.

ரோகிணி: இந்த வாரம் உங்கள் வளர்ச்சிக்காக சில திட்டங்களை செயல்படுத்த முடிவெடுப்பீர்கள். பண வரத்து திருப்தி தரும். செயல் திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மனதில் நிம்மதி ஏற்படும். சுற்றத்தினர் வருகை இருக்கும். நண்பர்கள் மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். இனிமையான வார்த்தைகளால் சிக்கலான காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். பகைகளில் வெற்றி கிடைக்கும். பண வரத்து தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும். மனதில் தைரியம் பிறக்கும். சுக்கிரன் சஞ்சாரம் வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.

பரிகாரம்: முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

பலன்கள்: இந்த வாரம் தன வாக்கு ஸ்தானத்தில் இரு குருமார்களின் சஞ்சாரத்தால் சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்க பெறுவீர்கள். பண வரத்து அதிகரிக்கும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைகளில் ஆர்வம் பிறக்கும். மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் மன நிறைவு உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சக ஊழியர்களுடன் எளிதில் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

திறமையுடன் செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு நீண்ட நாட்களாக இருந்த பழைய பகைகள் மாறும். அரசியல் துறையினர் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். மாணவர்களுக்கு சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.

மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

திருவாதிரை: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள். எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடா முயற்சியுடன் காரியங்களை செய்யுங்கள். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. உப தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும்.

பரிகாரம்: கிராம தெய்வத்தை பூஜித்து வணங்கி வர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் அமைதி ஏற்படும்.

பலன்கள்: இந்த வாரம் ராசி நாதன் சந்திரன் சஞ்சாரத்தால் எதையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். செலவு அதிகரிக்கும். தடை தாமதம் விலகும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும். எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். சரக்குகளை கையாளும் போது கவனம் தேவை.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க பெறலாம். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மன மகிழ்ச்சியை தரும்.

பெண்கள் எந்த காரியத்தை செய்து முடிப்பதிலும் வேகத்தை காண்பீர்கள். கலைத் துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றிய எண்ணம் மேலோங்கும். அது தொடர்பான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். உங்கள் வசம் உள்ள ஆவணங்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவு உண்டாகும். நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

பூசம்: இந்த வாரம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

ஆயில்யம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். மனத் துணிவு அதிகரிக்கும். பண வரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீ ஆஞ்சனேயரை வழிபட காரிய வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும் மனோ தைரியம் கூடும்.

பலன்கள்: இந்த வாரம் சப்தம ஸ்தானத்தில் இருக்கும் ராகு சஞ்சாரத்தால் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஆக்கபூர்வமான செயல்களை மேற்கொண்டு வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.

வருமானம் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சகஜ நிலை நீடிக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும்.

கலைத் துறையினர் நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். அரசியல் துறையினருக்கு எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற திட்டமிட்டு செயல்படுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும்.

மகம்: இந்த வாரம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பூரம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலக பணிகள் மூலம் டென்ஷன் உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கு இடையில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் உடைத்து வழிபட்டு வர காரிய தடைகள் நீங்கும். மன குழப்பம் தீரும்.

பலன்கள்: இந்த வாரம் தொழில் ஸ்தானம் மிக வலுவாக காணப்படுகிறது. தொழில் வியாபாரம் மிதமாக இருக்கும். எதிர்பார்த்த பண வரத்து தாமதப் பட்டாலும் கைக்கு வந்து சேரும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். உங்களது பேச்சு திறமையால் மேலிடத்தில் இருப்பவர்களிடம் நல்ல பெயர் பெறுவீர்கள்.

சக ஊழியர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை ஏதாவது குறை கூறுவார்கள். அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன் மனைவிக்கு இடையே தேவையில்லாத விஷயத்தால் மன வருத்தம் ஏற்படலாம் கவனம் தேவை. பெண்களது செயல்களுக்கு பக்க பலமாக யாராவது இருப்பார்கள்.

கலைத் துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப் பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

அஸ்தம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். ஆர்டர்கள் கிடைத்தாலும் சரக்குகள் அனுப்புவது தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம்.

பரிகாரம்: ஸ்ரீ பைரவரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். மன அமைதி கிடைக்கும்.

பலன்கள்: இந்த வாரம் ராசி நாதன் சுக்கிரன் கேந்திரம் பெற கோச்சார சந்திரன் சஞ்சாரத்தால் எடுத்த காரியத்தில் ஏற்பட்ட தடை, தாமதம் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வழக்குகள், தகராறுகளில் சாதகமான பலன் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் மிகவும் அக்கறை காட்டுவீர்கள். அதே வேளையில் கடுமையான முயற்சிகளும் தேவை.

தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் உற்சாகமாக காணப்படுவார்கள். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன், மனைவிக்கு இடையில் இருந்த மனக் கசப்பு மாறும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.

பெண்கள் எந்த ஒரு செயலையும் மிகவும் அக்கறையுடன் செய்து முடிப்பீர்கள். கலைத் துறையினருக்கு பணிகளில் கவலைகள் இருந்தாலும் நிறைவாக முடியும். அரசியல் துறையினருக்கு மனோதிடம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பதில் வேகம் காட்டுவீர்கள். எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும்.

சுவாதி: இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின் போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்த நோய் உண்டாகலாம். வீண் கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கி வர குடும்ப பிரச்சனை தீரும். காரிய வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரம் சிறக்கும்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் சப்தம ஸ்தானத்தில் இருந்து ராசியைப் பார்ப்பதால் புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்க பெறுவீர்கள். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்ள நேரலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும்.

எதிர்பார்த்தபடி பொருட்களை அனுப்புவதில் இருந்த தாமதம் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திடீர் பயணத்தை சந்திக்க நேரலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆனாலும் கவனமாக எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் உண்டாகும்.

கலைத் துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். அரசியல் துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெரியோர், ஆசிரியர் அரவணைப்பு இருக்கும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கு இடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

அனுஷம்: இந்த வாரம் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மன கஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கேட்டை: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கு இடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவுத் திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். வீண் கவலை இருக்கும்.

பரிகாரம்: லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகா லட்சுமியை வணங்க செல்வம் சேரும். செல்வாக்கு உயரும்.

பலன்கள்: இந்த வாரம் தன வாக்கு ஸ்தானத்தை ராசிநாதன் குரு - சுக்கிரன் பார்ப்பதால் எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும்.

ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை அதி கரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்ல படியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

வாகனங்கள் சேர்க்கை இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அரசியல் துறையினருக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்ல படியாக நடக்கும்.

மூலம்: இந்த வாரம் வீண் செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.

பூராடம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் பண வரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். மன மகிழ்ச்சி ஏற்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.

பலன்கள்: இந்த வாரம் ரண ருண ஸ்தானாதிபதி புதன் ஆட்சி பெறுவதால் உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண் செலவு குறையும். நல்லதா ? கெட்டதா ? என்று யோசிக்க தோன்றாத மனநிலை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூரியம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும்.

குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும். பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். கலைத் துறையினருக்கு வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். அரசியல் துறையினருக்கு வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பண வரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

திருவோணம்: இந்த வாரம் உங்களது செயல்களில் மற்றவர்கள் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். செயல் திறமை அதிகரிக்கும். வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். பண வரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

பரிகாரம்: அருணாச்சலேஸ்வரரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.

பலன்கள்: இந்த வாரம் தனஸ்தானத்தை அதன் அதிபதி குரு பார்ப்பதால் பண வரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக் கட்டாயமாக பேசுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு பண வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத் துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

அரசியல் துறையினருக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம்.

சதயம்: இந்த வாரம் வீண் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள்.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.

பலன்கள்: இந்த வாரம் லாப ஸ்தானத்தை குரு சுக்கிரன் பார்ப்பதால் எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும்.

அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள்.

கலைத் துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசியல் துறையினருக்கு ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கு இடையே வெளியில் சொல்ல முடியாத மனக் குறைகள் வரலாம். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர் காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை.

உத்திரட்டாதி: இந்த வாரம் குறிக்கோளற்ற பயணங்கள் அதன் மூலம் அலைச்சல், உடல்நலக் கேடு போன்றவை ஏற்படலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. மனதில் வீண் கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுப செலவுகள் ஏற்படும்.

ரேவதி: இந்த வாரம் தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலை பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள்.

பரிகாரம்: நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரிய தடை நீங்கும். குடும் பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

<div class="paragraphs"><p><em>இந்த வார கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.