惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
DataBreaches.Net
罗磊的独立博客
M
MIT News - Artificial intelligence
G
Google Developers Blog
V
V2EX
D
Docker
博客园_首页
The Cloudflare Blog
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
博客园 - 司徒正美
J
Java Code Geeks
L
LangChain Blog
博客园 - 三生石上(FineUI控件)
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
小众软件
小众软件
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
大猫的无限游戏
大猫的无限游戏
P
Proofpoint News Feed
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“நீட் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது” - மத்திய...
டெக்ஸ்டர் · 2026-05-29 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: நீட் மறுதேர்வை எவ்வித முறைகேடுகளும் இன்றி, நியாயமாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகள் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் மிகவும் துரதிர்ஷ்டவசமானவை என்று தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தவறுகளுக்குத் தார்மீகப் பொறுப்பேற்பதாகவும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

கடந்த காலக் குளறுபடிகளைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட கே.ராதாகிருஷ்ணன் குழுவின் 102 பரிந்துரைகளில், 70-க்கும் மேற்பட்ட குறுகிய காலப் பரிந்துரைகளை அரசு ஏற்கனவே அமல்படுத்தியிருந்த போதிலும் இந்தத் தவறுகள் நடந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்காக மாணவர்களிடம் மன்னிப்புக் கேட்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 அன்று நடைபெறுகிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒட்டுமொத்த அரசாங்க அமைப்பாக வினாத்தாள் தயாரிப்பு முதல் தேர்வு முடிந்து விடைத்தாள்களைப் பாதுகாப்பாகத் திருப்புவது வரையிலான ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்கவுள்ளன. நாடு முழுவதும் சுமார் 5,400 தேர்வு மையங்கள் மற்றும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வகுப்பறைகளில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க, இந்த மையங்கள் பெரும்பாலும் அரசு நிறுவனங்களிலேயே அமையுமாறு கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட அளவிலும் இதற்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொடர் குளறுபடிகளால் மாணவர்கள் சந்தித்துள்ள மன அழுத்தத்தைக் குறைப்பதே அரசின் முக்கிய நோக்கம் என்று கூறிய அமைச்சர், ரத்து செய்யப்பட்ட தேர்வுக்காக மாணவர்கள் செலுத்திய கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என்றும், மறுதேர்வுக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் அறிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் தங்களின் தேர்வு மையங்களை மாற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டதில், 2.5 லட்சம் முதல் 3 லட்சம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மையங்களை மாற்றியுள்ளனர்.

இந்த ஒட்டுமொத்த மறுதேர்வு தயாரிப்புப் பணிகளையும் பிரதமரின் அலுவலகம் நேரடியாகக் கண்காணித்து வருவதாகவும், மாநில அரசுகளின் கூட்டு முயற்சியோடு தேர்வு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் உறுதியளித்துள்ளார்.