惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
B
Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
量子位
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
T
Tailwind CSS Blog
MongoDB | Blog
MongoDB | Blog
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
Recent Announcements
Recent Announcements
U
Unit 42
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
腾讯CDC
D
DataBreaches.Net
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
P
Proofpoint News Feed
罗磊的独立博客
L
LangChain Blog
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
宝玉的分享
宝玉的分享

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தாம்பரத்தில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்
2026-04-16 · via hindutamil

அதிமுக வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன்  பீர்க்கன்காரணை பகுதியில் வாக்கு சேகரித்தார்.

Updated on

1 min read

தாம்பரம்: ​தாம்​பரம் தொகுதி அதி​முக வேட்​பாளர் சிட்​லப்​பாக்​கம் ராஜேந்​திரன் தொகுதி முழு​வதும் சுட்​டெரிக்​கும் வெயிலை​யும் பொருட்​படுத்​தாமல் சூறாவளி பிரச்சாரம் செய்து வரு​கி​றார்.

நேற்று பீர்க்​கன்​காரணை, மேற்கு தாம்​பரம் பகு​தி​களில் தீவிர வாக்கு சேகரித்​தார். அப்​போது, அவர் கூறிய​தாவது: தாம்​பரத்​தின் அடை​யாள​மான முத்​துரங்​கம் பூங்கா பரா​மரிப்​பின்றி மோச​மான நிலை​யில் உள்​ளது.

வெற்றி பெற்​றதும், பூங்​காவை நவீனப்​படுத்தி பல்​வேறு வசதி​களு​டன் மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​படும். 50 ஆண்​டு​களுக்கு மேலாக சாலை வசதி இல்​லாத புலிகொரடு பகு​திக்கு சாலை, மின் விளக்கு வசதி ஏற்​படுத்தி தரப்​படும்.

பீர்க்​கன்​காரணை​யில் உள்ள அரசு பள்​ளியை மேம்​படுத்​தி, மாண​வர்​களின் கல்​வித் தரம் உயர்த்​தப்​படும். சுகா​தா​ர​மான சூழ்​நிலை​யில் மக்​கள் வாழக்​கூடிய தொகு​தி​யாக தாம்​பரத்தை மாற்​று​வேன். வெற்றி பெற்​றதும் அனைத்து பூங்​காக்​களை​யும் சீரமைத்து பரா​மரிக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

தாம்​பரம் தொகு​தி​யில் போட்​டி​யிடும் திமுக வேட்பாளர் டாக்​டர் கிருத்​திகா தேவி, முன்​னாள் எம்​எல்ஏ ராஜா, மேயர் வசந்​தகு​மாரி கூட்​டணி கட்​சி​யினருடன் இணைந்​து, தொகுதி முழு​வதும் சூறாவளி பிரச்​சா​ரம் செய்து வரு​கி​றார்.

முடிச்​சூர், அகரம்​தென், திரு​வஞ்​சேரி, மதுரப்​பாக்​கம் ஊராட்​சிகளுக்கு பாதாள சாக்​கடை திட்​டம் மற்​றும் பாது​காக்​கப்​பட்ட குடிநீர் வசதி கொண்​டு​வரப்​படும். தாம்​பரம் மாநக​ராட்சி மார்க்​கெட் வியா​பாரி​களுக்கு பாதிப்பு ஏற்​ப​டாத வகை​யில், நவீன வசதி​களு​டன் புதிய மார்க்​கெட் மாற்​றியமைக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

<div class="paragraphs"><p>கிரீம்ஸ் சாலை பகுதியில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.களஞ்சியம்</p></div>

கிரீம்ஸ் சாலை பகுதியில் ஓட்டு வேட்டையில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.களஞ்சியம்

தாம்​பரம் தொகு​தி​யில் தவெக சார்​பில் போட்​டி​யிடும் டி.சரத்​கு​மார் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்​டார். அவருக்கு தவெக நிர்​வாகி​கள் சார்​பில் பெண்​கள் ஆரத்தி எடுத்​தும் மலர்​கள் தூவி​யும் வரவேற்பு அளித்​தனர்.

செம்​பாக்​கம், பெருங்​களத்​தூர் போன்ற பகு​தி​யில் பாதாள சாக்​கடை பணி​கள் தொடங்​கப்​படும் தொகு​திக்கு உட்​பட்ட ஏரி​களில் கழிவு நீர் கலப்​பதை தடுத்து தூர்​வாரி சீரமைக்​கப்​படும், வெள்ள பாதிப்பை தடுக்க முறை​யான மழை நீர் வடி கால்​வாய்​கள் அமைக்​கப்​படும்.

இளைஞர்​களின் விளை​யாட்டு ஆர்​வத்தை ஊக்​குவிக்​கும் வகை​யில் செம்​பாக்​கம் மண்டல அலு​வல​கத்​தின் அருகே உள்ள கால்​பந்து மைதானத்தை எம்​எல்ஏ மேம்​பாட்டு நீதி​யில் மேம்​படுத்​தப்​படும் என தெரி​வித்து விசில் சின்​னத்​துக்கு வாக்கு சேகரித்​தார்.