惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Engineering at Meta
Engineering at Meta
博客园_首页
J
Java Code Geeks
Jina AI
Jina AI
B
Blog RSS Feed
量子位
有赞技术团队
有赞技术团队
M
MIT News - Artificial intelligence
L
LangChain Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
小众软件
小众软件
博客园 - 聂微东
月光博客
月光博客
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
Last Week in AI
Last Week in AI
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
罗磊的独立博客
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
爱范儿
爱范儿
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘மனிதாபிமானம் மிக்கதாக வங்கி நிர்வாகத்தை மாற்றுங்கள்’ - ந...
2026-05-02 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: சகோதரியின் எலும்புக் கூடுடன் வந்ததை அடுத்து வங்கி நிர்வாகம் பணம் வழங்கிய நிலையில், மனிதாபிமானத்துடன் கூடியதாக வங்கி நிர்வாகத்தை மாற்றுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒடிசா எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஜீத்து முண்டா என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் தனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக தனது சகோதரியின் மரணத்துக்கான ஆதாரமாக அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்கு எடுத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். வங்கிக்கு அவர் பலமுறை சென்றும், அதிகாரிகளிடம் இருந்து எந்த உதவியோ அல்லது தெளிவோ கிடைக்காத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதைவிட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகக் கூறி இந்த மனிதாபிமானமற்ற நடத்தையை வங்கி நிாயயப்படுத்த முயன்றதுதான். வங்கி அதிகாரிகள் நடைமுறைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, தாங்கள் சேவை செய்ய வேண்டிய மக்களையே கைவிடும் போக்கையே இது காட்டுகிறது.

ஜனநாயகத்தில் விதிகள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தவிர, அவர்களை அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்தத் தேவையில்லை. இந்த கொடுமையான சம்பவம் ஒடிசா முழுவதும் மக்களின் உணர்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. அதோடு, இந்த சம்பவம் நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தச் சம்பவம் தனிப்பட்டதாக இருந்தாலும், வங்கி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு புரிதலை இது நமக்கு அளிக்கிறது. முதலில், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்துக்கு தெளிவான பொறுப்புக்கூறல் நிர்ணயிக்கப்படுவதை உடனடியாக உறுதி செய்யுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இது, மனிதாபிமானம், பரிவு, இரக்கத்துடன் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவையை வழங்குவதை உறுதி செய்ய ஒரு தெளிவான சமிங்ஞையை அனுப்பும். உங்களின் இரக்கமுள்ள தலையீட்டால், குடிமக்களிடம் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடத்தை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் மீண்டும் நிகழாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: ஒடிசா மாநிலம் கேந்​துஜார் மாவட்​டம் தியானாலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜீத்து முண்​டா. இவரது சகோ​தரி கக்ரா முண்டா இரண்டு மாதங்​களுக்கு முன்பு கால​மா​னார். மல்​லி​பாசி பகு​தி​யில் உள்ள ஒடிசா கிராமின் வங்​கிக் கிளை​யில் கக்ரா கணக்கு வைத்திருந்தார். அதில் இருந்த ரூ.19,400-ஐ எடுப்​ப​தற்​காக ஜீத்து முண்டா வங்​கிக்​குச் சென்​றுள்​ளார்.

கல்​வியறிவு இல்​லாத பழங்​குடி​யின​ரான ஜீத்து முண்டாவிடம், அவரது சகோ​தரி​யின் இறப்​புச் சான்​றிதழ் அல்​லது வாரிசுச் சான்றிதழ் இல்​லை. இதனால், கணக்கு வைத்​திருப்​பவர் நேரில் வர வேண்​டும் அல்​லது உரிய ஆவணங்​களைச் சமர்ப்​பிக்க வேண்டும் என்று வங்கி மேலா​ளர் கூறி​யுள்​ளார்.

சட்ட நடை​முறை​களைப் புரிந்து கொள்ள முடி​யாத நிலையில் விரக்​தி​யடைந்த ஜீத்து முண்​டா, கடந்த திங்கள்கிழமை மயானத்திற்​குச் சென்று தனது சகோ​தரியின் உடலைத் தோண்டி எடுத்​து, எலும்​புக்​கூடை துணியால் சுற்றி தோளில் சுமந்​த​படி 3 கிலோ மீட்​டர் தூரம் நடந்து வங்​கிக்கு வந்​தார்.

இந்​தக் காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி நாடு முழுவதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தின. இது வங்கி​யின் மனிதாபி​மானமற்ற செயல் எனப் பலரும் கண்​டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி​யும் விசா​ரணைக்கு உத்​தர​விட்​டார்.

இந்நிலை​யில் ஒடிசா கிராமின் வங்கி தனது எக்ஸ் தளத்தில், ‘‘இறந்​தவர் நேரில் வர வேண்​டும் என்று வங்கி அதி​காரி​கள் தெரிவித்​தாகக் கூறப்​படும் தகவல் தவறானது. சட்​டப்​படி​யான ஆவணங்​கள் இல்​லாத​தால் பணத்தை வழங்க முடிய​வில்​லை. அந்த நபர் மது​போதை​யில் இருந்​த​தால் நடை​முறை​களை விளக்கிக் கூறி​யும் அவர் ஏற்​க​வில்​லை. தற்​போது அரசு அதிகாரிகள் வழங்​கிய வாரிசுச் சான்​றிதழின் அடிப்​படை​யில், ரூ.19,402 தொகை 3 வாரிசு​தா​ரர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது’’ என தெரிவிக்​கப்​பட்​டது.