惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - 司徒正美
博客园 - 聂微东
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
宝玉的分享
宝玉的分享
量子位
V
Visual Studio Blog
罗磊的独立博客
Vercel News
Vercel News
B
Blog
J
Java Code Geeks
S
SegmentFault 最新的问题
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
P
Proofpoint News Feed
GbyAI
GbyAI
G
Google Developers Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘தொகுதி மறுவரையறையில் வெளிப்படைத் தன்மை இல்லை’ - பிரதமர் ...
மோகன் கணபதி · 2026-04-16 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: தொகுதி மறுவரையறை தொடர்பான எதிர்க்கட்சிகளின் கவலைகளுக்கு எவ்வித தீர்வையும் பிரதமர் மோடி முன்வைக்கவில்லை என்றும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை அவர் நிராகரித்துவிட்டர் என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக மக்களவையில் நடைபற்ற விவாதத்தில் பங்ககேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அவரது உரையை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “வழக்கத்துக்கு மாறாக பிரதமர் மோடி இன்று மக்களவையில் வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே உரையாற்றினார். அதோடு, தனது இயல்புக்கு ஏற்றவாறு, இந்தச் சிறப்பு அமர்வின் மையப் பிரச்சினையான 'தொகுதி மறுவரையறை' (Delimitation) என்பதைத் தவிர்த்து, மற்ற அனைத்துத் தலைப்புகளைப் பற்றியும் அவர் பேசினார். தொகுதி மறுவரையறை தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய கவலைகளை அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும், இந்த மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும் என பிரதமர் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்க அவரது அரசாங்கம் எதையும் செய்யவில்லை. இப்பிரச்சினை தொடர்பாக அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்ததாகப் பிரதமர் கூறினார். ஆனால், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் முடிவடைந்த பிறகு (ஏப்ரல் 29) இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் விடுத்த தொடர் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துவிட்டது.

மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்கள் ஆகிய இரு நிலைகளிலும் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக எந்தவொரு மாநில அரசாங்கத்துடனும் முறையாகவோ அல்லது முறைசாராமலோ அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை. தொகுதி மறுவரையறை எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பதைச் சட்டத்தில் வெளிப்படையாகக் குறிப்பிடவும் அரசாங்கம் மறுத்துவிட்டது. மாறாக, மக்களவையின் அமைப்பையே மாற்றியமைக்கும் அபாயம் கொண்ட மசோதாக்களை அது அறிமுகப்படுத்தியுள்ளது.

பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட தீவிரமான கவலைகளை வெறும் எளிதாக நிராகரிப்பதன் மூலம், தெற்கு, கிழக்கு, வடகிழக்கு மற்றும் வட இந்தியப் பகுதிகளில் உள்ள பல மாநிலங்களின் அச்சங்களைப் பிரதமர் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளார். இப்பகுதிகளில் வாழும் மக்களின் நியாயமான கவலைகள், முற்றிலும் உணர்வற்ற முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மக்களின் இந்த அவமதிப்புக்கு, இம்மாதம் நடைபெறவுள்ள தேர்தலின் மூலம் அவர்கள் அளிக்கும் வாக்குகளின் வாயிலாக நிச்சயமாகப் பதிலடி கொடுப்பார்கள்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் (OBC) சேர்ந்த பெண்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க நாம் வழிவகை செய்ய வேண்டும். எனினும், இந்தப் கோரிக்கையைப் பிரதமர் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள பெண்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பதை பிரதமர் மறைமுகமாக ஒப்புக்கொண்டார். ஆனால், அடித்தள அளவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றதுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தொலைநோக்குப் பார்வையே காரணம் என்பதை அவர் குறிப்பிடத் தவறிவிட்டார்.

பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள அர்ப்பணிப்பு கேள்விக்கு அப்பாற்பட்டது. ஆனால், இன்றைய சூழலில் அதுவல்ல உண்மையான பிரச்சினை. உண்மையான பிரச்சினை இந்தியாவின் அரசியலமைப்புதான். அரசியலமைப்பை பலவீனப்படுத்தி, ஆட்சி அமைப்பின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதற்கான இந்த இரட்டை வேட முயற்சிக்கு எதிராக, நாளை மாலை 4 மணிக்கு மக்களவையில் மோடி அரசு நிச்சயமாகத் தோல்வியைச் சந்திக்கும். மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது நடைபெற்ற வாக்கெடுப்பு, இதற்கு ஒரு முன்னோட்டமாகவே அமைந்தது” என தெரிவித்துள்ளார்.