惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
V2EX
小众软件
小众软件
GbyAI
GbyAI
B
Blog RSS Feed
月光博客
月光博客
A
About on SuperTechFans
Microsoft Security Blog
Microsoft Security Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
U
Unit 42
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
Recent Announcements
Recent Announcements
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
F
Fortinet All Blogs
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
雷峰网
雷峰网
Google DeepMind News
Google DeepMind News
MongoDB | Blog
MongoDB | Blog
Engineering at Meta
Engineering at Meta
aimingoo的专栏
aimingoo的专栏
博客园_首页
G
Google Developers Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய...
2026-04-23 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்​ற​மான வாக்​குச்​சாவடிகளில் கூடு​தல் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 234 தொகு​திகளி​லும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இவர்களில் 14.59 லட்​சம் பேர் முதல்​முறை வாக்​காளர்​கள்.

தமிழகம் முழு​வதும் 249 மாதிரி வாக்​குச்​சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்​குச்​சாவடிகள், 71 மாற்​றுத் திற​னாளி​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள், 79 இளம் பணி​யாளர்​கள் பணி​யாற்​றும் வாக்​குச்​சாவடிகள் என மொத்​தம் 33,211 இடங்​களில் 75,064 வாக்​குச்​சாவடிகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

5,949 வாக்​குச்​சாவடிகள் பதற்​ற​மானவை என்று அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளன. இங்கு நுண்​பார்​வை​யாளர்​கள், துப்​பாக்​கிய ஏந்திய போலீ​ஸார் அல்​லது துணை ராணுவப் படை​யினர் நிறுத்தப்பட்​டுள்​ளனர்.

அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் குடிநீர், கழி​வறை, தடையற்ற மின்​சா​ரம், அவசர மருத்​து​வம், கைப்​பிடி​யுடன் கூடிய சாய்​வுதளம், மாற்​றுத் திற​னாளி​களுக்கு சக்கர நாற்​காலி, நிழற்​பந்​தல், வாக்காளர்​களுக்கு உதவ தன்​னார்​வலர்​கள் ஏற்​பாடு என அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

வாக்​குச்​சாவடிக்​குள் செல்​போன் கொண்​டு​செல்ல அனு​மதி இல்லை என்​ப​தால், நுழைவு​வாயி​லில் செல்​போனை பாது​காப்​பாக வைக்​க​வும் முதல்​முறை​யாக வசதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இத்​தேர்​தலில் 1,06,408 வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தலா 75,064 கட்டுப்​பாட்டு இயந்​திரங்​கள் மற்​றும் விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்படுத்​தப்​படு​கின்​றன. கூடு​தலாக 20 சதவீத இயந்​திரங்​கள் தயார் நிலை​யில் உள்​ளன.

துணை ராணுவம் ரோந்து: பாது​காப்பு பணி​யில் துப்​பாக்கி ஏந்​திய 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்கள் 24 மணி நேர​மும் தீவிர ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்டு வருகின்​றனர்.

மேலும் 83,875 காவல் துறை பணி​யாளர்​கள், 40,427 காவல் துறை அல்​லாத முன்​னாள் ராணுவத்​தினர் உள்​ளிட்ட பணி​யாளர்​களும் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.

வாக்​குச்​சாவடி பணி​யில் சுமார் 3.40 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அரசு ஊழியர்​கள் ஈடு​பட்​டுள்​ளனர். தேர்​தல் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளவர்களில் நேற்று வரை 4.18 லட்​சம் பேர் தபால் வாக்​கு​களை பதிவு செய்​துள்​ளனர். வாக்​குச்​சாவடிகளுக்கு வாக்​குப்​ப​திவு இயந்திரங்​களை அனுப்​பும் பணி நேற்று காலை 11 மணி முதல் தொடங்​கியது.

அதனுடன் உரிய படிவங்​கள், சீல் வைக்க தேவை​யான அரக்​கு, மெழுகு​வத்​தி, அழி​யாத அடை​யாள மை உள்​ளிட்ட பொருட்​களும் அனுப்பி வைக்​கப்​பட்​டன. சென்னையில் தேர்தல் ​பணி​களை, 10 நாடு​களைச் சேர்ந்த 20 பிர​தி​நி​தி​கள் கொண்ட சர்​வ​தேசக் குழு​வினர் நேற்று பார்​வை​யிட்​டனர்.

வாக்​குப்​ப​திவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்​குச்​சாவடிகளின் உள்ளே மற்​றும் வெளியே தலா ஒரு கண்​காணிப்பு கேமரா என மொத்​தம் 1.50 லட்சம் கேம​ராக்​கள் பொருத்​தப்​பட்​டுள்​ளன.

தமிழகம் முழு​வதும் பதி​வாகும் கேமரா காட்​சிப் பதிவு​களை, சென்​னை​யில் உள்ள தலை​மைத் தேர்​தல் அதி​காரி அலு​வல​கத்​தில் இருந்து மாவட்ட வரு​வாய் அலு​வலர் நிலை​யில் உள்ள 18 அதிகாரி​கள் கொண்ட குழு​வினர் கண்​காணிப்​பார்​கள் என்று தலைமைத் தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​தார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று மேலும் கூறியபோது, ‘‘தேர்​தல் பறக்​கும் படைகள், நிலைக் கண்​காணிப்பு குழுக்​கள் மூலம் இது​வரை ரூ.1,262 கோடி பறி​முதல் செய்யப்பட்டுள்​ளது. வாக்​குச்​சாவடி அமை​விடம் உள்​ளிட்ட பல்​வேறு தகவல்​களை https://votervazhikatti.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். மாலை 6 மணி வரை வாக்​குப்​ப​திவு தொடர்ந்து நடை​பெறும்.

வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், தமிழகம் முழு​வதும் 63 இடங்​களில் அமைக்​கப்​பட்​டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்​களில் பாது​காப்​பாக வைக்​கப்​படும்’’ என்​றார்.

தேர்​தலை​யொட்​டி, தமிழகம் முழு​வதும் அரசு, தனி​யார், பொதுத் துறை நிறு​வனங்​களுக்கு இன்று பொது விடு​முறை விடப்பட்டுள்ளது.