惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
G
Google Developers Blog
S
SegmentFault 最新的问题
Microsoft Security Blog
Microsoft Security Blog
J
Java Code Geeks
罗磊的独立博客
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
P
Proofpoint News Feed
博客园 - 【当耐特】
MongoDB | Blog
MongoDB | Blog
L
LangChain Blog
F
Fortinet All Blogs
C
Check Point Blog
博客园_首页
I
InfoQ
Jina AI
Jina AI
Blog — PlanetScale
Blog — PlanetScale
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Engineering at Meta
Engineering at Meta
美团技术团队
Vercel News
Vercel News
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மனமகிழ் மன்றங்களில் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் ‘ரீல்ஸ்’...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

மதுரை: தமிழகத்​தில் மனமகிழ் மன்​றங்​களில் தவெக​வினர் ஆய்வு என்ற பெயரில் ரீல்ஸ் எடுத்து சமூக வலை தளங்​களில் பதி​விடு​வதைத் தடுக்​கக்​கோரிய வழக்​கில் எம்​.பி., எம்​எல்ஏக்கள், கவுன்​சிலர்​களுக்கு ஆய்வு நடத்த அதி​காரம் உண்டா என்​பதை தெரிவிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

தமிழ்​நாடு மனமகிழ் மன்ற உரிமை​யாளர் சங்​கத் தலை​வர் வீர​பாண்​டியன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: எங்​கள் சங்க உறுப்​பினர்​கள் தமிழ்​நாடு முழு​வதும் அரசிடம் முறை​யாக எப்​எல்-2 உரிமம் பெற்று மனமகிழ் மன்​றங்​களை நடத்தி வரு​கிறார்​கள். மன்ற உறுப்​பினர்​களுக்கு மது விற்​பனை செய்து வரு​கிறோம். மனமகிழ் மன்​றங்​களின் நடவடிக்​கையை அதி​காரி​கள் கண்​காணிக்​கின்​றனர்.

ஆனால், ஆளும் கட்சி எம்​எல்​ஏக்​கள், ஆளும் கட்சி நிர்​வாகி​கள், சமூக ஆர்​வலர்​கள், யூடியூப் செயற்​பாட்​டாளர் என்ற பெயரில் மனமகிழ் மன்​றங்​களுக்​குள் அத்​து​மீறி நுழைந்து செல்​போனில் வீடியோ பதிவு செய்​கின்​றனர். பின்​னர் சட்​ட​விரோத​மாக மது விற்​பனை நடை​பெறு​வ​தாக சித்​தரித்து சமூகவலை தளங்​களில் வீடியோக்​களை பதிவேற்​றம் செய்​கின்​றனர்.

இவர்​கள் மனமகிழ் மன்​றங்​களில் மது அருந்​தும் உறுப்​பினர்​களின் அடை​யாளம் தெரி​யு​மாறு வீடியோ ரீல்​ஸ்​கள் எடுத்​துப் பரப்​பு​கின்​றனர். மது அருந்​து​வோர், ஊழியர்​களு​டன் தகராறு செய்​கின்​றனர். வீடியோக்​களை காட்டி மனமகிழ் மன்ற உரிமை​யாளர்​களிடம் பணம் கேட்டு மிரட்​டு​கின்​றனர். விருதுநகர் மாவட்​டம் கூமாபட்டி மற்​றும் திருச்சி மாவட்​டங்​களில் மனமகிழ் மன்​றங்​களில் ஆளும் கட்சி நிர்​வாகி​கள் ஆய்வு என்ற பெயரில் நுழைந்து தேவையற்ற பிரச்​சினை​களைச் செய்​துள்​ளனர். மனமகிழ் மன்​றத்​துக்​குள் அத்​து​மீறி நுழைந்து ரீல்ஸ் எடுத்து சமூக வலை​தளங்​களில் பரப்​புவ​தால் தொழில் பாதிக்​கப்​படு​கிறது.

எனவே, தமிழகம் முழு​வதும் மனமகிழ் மன்​றங்​களின் உரிமை​களைப் பாது​காக்க உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்வை ஆணை​யருக்கு உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு அந்த மனு​வில் கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிபதி பரதசக்​கர​வர்த்தி விசா​ரித்​தார். மனு​தா​ரர் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் வீர.க​திர​வன், வழக்​கறிஞர் பாஷி​யம் வாதிட்​டனர். பின்​னர் நீதிப​தி, மனமகிழ் மன்​றங்​களில் சோதனை நடத்த எம்​.பி. எம்​எல்​ஏக்​கள், கவுன்​சிலர்​களுக்கு அதி​காரம் உண்டா என்​ப​தைத் தெரிவிக்க வேண்​டும். மனமகிழ் மன்​றங்​களில் ரீல்ஸ் எடுக்​கக் கூடாது என உத்​தர​விட்டு விசா​ரணையை தள்​ளி​வைத்​தார்.