惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
P
Proofpoint News Feed
F
Fortinet All Blogs
H
Help Net Security
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
Visual Studio Blog
Jina AI
Jina AI
J
Java Code Geeks
Blog — PlanetScale
Blog — PlanetScale
S
SegmentFault 最新的问题
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
美团技术团队
博客园 - 司徒正美
宝玉的分享
宝玉的分享
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் ...
பெ.மாரிமுத்து · 2026-04-11 · via hindutamil

Updated on: 

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான சென்னை சூப்​பர் கிங்​ஸ், டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யுடன் மோதுகிறது. தொடக்க வீரர்​களான சஞ்சு சாம்​சன், ருதுராஜ் கெய்க்​வாட் ஆகியோர் நெருக்​கடி​யுடன் களமிறங்​கு​கின்​றனர்.

ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்​சி​யாக 3 ஆட்​டங்​களில் தோல்​வியடைந்​துள்​ளது. தொடக்க ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி​யிடம் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தி​லும், 2-வது ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்தியாசத்​தி​லும், கடைசி​யாக நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி​யிடம் 43 ரன்​கள் வித்​தி​யாசத்​தி​லும் சிஎஸ்கே அணி தோல்வி கண்​டிருந்​தது.

இந்த3 ஆட்​டங்​களை​யும் சிஎஸ்கே வெவ்​வேறு மைதானங்களில் (கு​வாஹாட்​டி, சேப்​பாக்​கம், எம்.சின்னசாமி) விளை​யாடி இருந்​தது. இந்த சீசனை உற்​சாகமற்ற தொடக்​கத்​துடன் ஆரம்​பித்​துள்ள சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்ப வேண்​டுமென்​றால் பேட்​டிங், பந்​து​வீச்சு என இரண்​டிலும் குறிப்​பிடத்​தக்க முன்​னேற்​றம் காண வேண்​டியது அவசி​யம்.

தென் ஆப்​பிரிக்​கா​வின் டெவால்ட் பிரெ​விஸ் இல்​லாததும் அணி​யின் சமநிலை​யைப் வெகு​வாக பாதித்​துள்​ளது. அதிரடி வீர​ரான பிரெ​விஸ் காயத்​தில் இருந்து மீண்டுள்ளதால் இன்​றைய ஆட்​டத்​தில் களமிறங்​கக்​கூடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இருப்​பினும், கணுக்​கால் தசைப்​பிடிப்பு காரண​மாக இந்த சீசனில் இன்​னும் ஒரு போட்​டி​யில் கூட விளை​யா​டாத எம்​.எஸ். தோனி எப்​போது திரும்​பு​வார் என்​பது இன்​னும் தெளிவு படுத்தப்படவில்லை.

பேட்​டிங்​கில் சஞ்சு சாம்​சன், ருது​ராஜ் கெய்க்​வாட் ஜோடி வலு​வான தொடக்​கத்தை அளிப்​பது அவசி​யம். நடப்பு தொடரில் இவர்​களிடம் இருந்து இது​வரை பெரிய அளவிலான ஆட்​டம் வெளிப்​பட​வில்​லை. சஞ்சு சாம்​சன் 6,7,9 ரன்​களில் நடையை கட்​டி​யிருந்​தார். அதேவேளை​யில் ருது​ராஜ் கெய்க்​வாட் 6,28,7 ரன்​கள் சேர்த்​திருந்​தார்.

இந்த ஜோடி முதல் 6 ஓவர்​களில் விக்​கெட்​டு​களை இழக்காமல் அதிரடி​யாக ரன் சேர்த்​தால் மட்​டுமே, அடுத்து வரும் ஆயுஷ் மாத்​ரே, ஷிவம் துபே போன்​றவர்​கள் பயமின்றி விளை​யாட முடி​யும். ஜடேஜாவுக்கு பதிலாக அணிக்​குள் வந்​திருக்​கும் சாம்​சன், அதிரடி ஆட்​டத்​தின் வாயி​லாக மட்​டுமே தனது டிரேடிங்கை நியாயப்​படுத்த முடி​யும். கேப்​ட​னாக ருது​ராஜ் கெய்க்​வாட் மற்​றொரு தோல்​வியை சந்​தித்​தால் அவர் மீது கூடு​தல் அழுத்​தம் உரு​வாகக்​கூடும். இதனால் அவர், கூடு​தல் பொறுப்​புடன் விளை​யாடக்​கூடும்.

மிடில் ஆர்​டரில் கார்த்​திக் சர்​மா​வும் தனது ஆட்​டத்தை மேம்​படுத்த வேண்​டியது அவசி​யம். அதேவேளை​யில் கீழ் வரிசை​யில் பிர​சாந்த் வீர் நம்​பிக்கை அளித்து வரு​கிறார். இது ஒரு​புறம் இருக்க இந்த சீசனில் தன்னை நிரூபிக்க வேண்​டிய கட்​டா​யத்​தில் இருக்​கும் சர்ஃப​ராஸ் கான் மட்டுமே இது​வரை பேட்​டிங்​கில் சீராக ரன்​கள் சேர்த்து வருகிறார். ஒரு அரை சதம் உட்பட 99 ரன்​கள் சேர்த்​துள்ள அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும்.

ஆர்​சிபி அணிக்கு எதி​ரான போட்​டி​யில் சிஎஸ்கே பந்​து​வீச்சாளர்​கள் 250 ரன்​களை வாரி வழங்​கினர். இந்த இமாலய இலக்கு சிஎஸ்கே பேட்​டர்​களுக்கு எட்ட முடி​யாத ஒன்​றாக அமைந்​தது. அந்த ஆட்​டத்​தில் சிஎஸ்கே அணியின் பந்​து​வீச்​சில் கலீல் அகமது​வைத் தவிர, மற்ற அனைத்து பந்​து​வீச்​சாளர்​களும் ஓவருக்கு 12 ரன்​களுக்​கும் மேல் விட்​டுக்​கொடுத்து ஏமாற்​றமளித்​தனர். இதனால் இன்​றைய ஆட்​டத்​தில் பந்​து​வீச்​சில் சில மாற்​றங்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது.

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி தனது இரு ஆட்​டங்​களில் லக்​னோ, மும்பை அணிகளை தலா 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வென்றிருந்​தது. இந்த இரு ஆட்​டங்​களி​லும் சமீர் ரிஸ்வி அதிரடி​யாக விளை​யாடி அணிக்கு வெற்றி தேடிக்​கொடுத்​திருந்​தார். கடைசி​யாக டெல்லி அணி, குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யிடம் ஒரு ரன் வித்​தி​யாசத்​தில் அதிர்ச்சி தோல்வி அடைந்​திருந்​தது. இதில் இருந்து மீண்டு வெற்றி பெறுதவற்கான முயற்​சியை டெல்லி அணி எடுக்​கக்​கூடும்.

குஜ​ராத் அணிக்கு எதி​ரான போட்​டி​யில் ஆட்​டத்தை ‘டை’ செய்​வதற்கு வாய்ப்பு இருந்​தும், 5-வது பந்​தில் டேவிட் மில்லர் ஒரு ரன் எடுக்க மறுத்​தது இந்த சீசன் முழு​வதும் ஒரு விவாதப் பொருளாகவே இருக்​கக்​கூடும். இருப்​பினும், தனது அணிக்​காக ஆட்​டத்தை வெற்​றிகர​மாக முடித்​து​வைக்க முடி​யும் என்று தன்​னைத்​தானே நம்​பி, இறு​தி​யில் மிகச்​சிறிய இடைவெளி​யில் அந்த வாய்ப்​பைத் தவற​விட்ட டேவிட் மில்​லர், தனது மீது விழுந்​துள்ள பிம்​பத்தை மாற்றும் வகை​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​தக்​கூடிய அளவிலான மட்டை வீச்சை வெளிப்​படுத்த முயற்​சிக்​கக்​கூடும்.

இது ஒரு​புறம் இருக்க முதல் 2 ஆட்​டங்​களி​லும் உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்​தத் தவறிய கே.எல்​.​ராகுல் கடந்த ஆட்​டத்​தில் 92 ரன்​கள் விளாசி கவனம் ஈர்த்​தார். அவரிடம் இருந்து மீண்​டும் ஒரு உயர்​மட்ட செயல் திறன் வெளிப்​படக்​கூடும். மற்​றொரு தொடக்க வீர​ரான பதும் நிசங்கா​வும் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வ​ராக திகழ்கிறார். 3-வது இடத்​தில் களமிறங்​கும் நிதிஷ் ராணாவும் பார்​முக்கு திரும்​பி​னால் அணி​யின் பேட்​டிங் கூடு​தல் வலுப்​பெறும்.

பந்​து​வீச்சை பொறுத்​தவரை​யில் கடந்த ஆட்​டத்​தில் வேகப்​பந்​து​வீச்​சாளர் முகேஷ் குமார் 4 ஓவர்​களை வீசி 55 ரன்​களை வாரி வழங்​கி​னார். இதனால், பவர்​பிளே​வில் அவர், தனது திட்​டங்​களை மாற்றி அமைக்​கக்​கூடும். மிட்செல் ஸ்டார்க் இல்​லாத நிலை​யில், டி20 உலகக்​கோப்​பையி​லிருந்து தனது சிக்​க​ன​மான பந்​து​வீச்​சைத் தொடர்ந்து வரும் லுங்​கி நிகிடி இன்​றைய ஆட்​டத்​தில்​ சிஎஸ்​கே வீரர்​களுக்​கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும்.

பஞ்சாப் ஹைதரா​பாத் மோதல்

​முன்​ன​தாக பிற்​பகல் 3.30 மணிக்கு முலான்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் - சன்​ரைசர்ஸ் ஹைதரா​பாத் அணி​கள் மோதுகின்​றன. பஞ்​சாப் அணி 3 ஆட்​டத்​தில் விளை​யாடி 2 வெற்​றி, ஒரு முடிவு இல்​லாத ஆட்டம் என 5 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. ஹைத​ரா​பாத் அணி 3 ஆட்​டத்​தில் விளை​யாடி 1 வெற்​றி, 2 தோல்​வி​யுடன் 2 புள்​ளி​களை பெற்​றுள்​ளது.

நேருக்கு நேர்

31 ஆட்​டங்​கள்

19 சிஎஸ்கே - வெற்றி

12 டெல்லி கேப்பிடல்ஸ் - வெற்றி