



























Updated on:
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்கின்றன. இதனால், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொகுதி மறுவரையறையை நாடாளுமன்றத்தில் அவசர, அவசரமாக கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்கிறது.
தென்னிந்தியாவின் குரல்வளையை நசுக்குவதற்கு அவசரம் காட்டும் மத்திய அரசின் ஜனநாயக விரோதப்போக்கு கடும் கண்டனத்துக்குரியது.
2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், வடமாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும்.
தென்மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை 24 விழுக்காடாக தேங்கிவிடும். இத்தகைய முயற்சியை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。