惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Cloudbric
Cloudbric
Y
Y Combinator Blog
N
Netflix TechBlog - Medium
D
DataBreaches.Net
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recorded Future
Recorded Future
Martin Fowler
Martin Fowler
M
MIT News - Artificial intelligence
U
Unit 42
爱范儿
爱范儿
F
Full Disclosure
Google Online Security Blog
Google Online Security Blog
腾讯CDC
小众软件
小众软件
A
Arctic Wolf
云风的 BLOG
云风的 BLOG
Webroot Blog
Webroot Blog
B
Blog RSS Feed
Project Zero
Project Zero
Hacker News - Newest:
Hacker News - Newest: "LLM"
博客园 - 聂微东
K
KPMG report finds enterprise disconnect between AI and its ROI | CIO
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
SecWiki News
SecWiki News
S
Schneier on Security
Recent Commits to openclaw:main
Recent Commits to openclaw:main
H
Help Net Security
W
WeLiveSecurity
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
WordPress大学
WordPress大学
MongoDB | Blog
MongoDB | Blog
G
Google Developers Blog
雷峰网
雷峰网
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
I
Intezer
V
V2EX
宝玉的分享
宝玉的分享
H
Hacker News: Front Page
aimingoo的专栏
aimingoo的专栏
L
LangChain Blog
C
Check Point Blog
O
OpenAI News
博客园 - Franky
大猫的无限游戏
大猫的无限游戏
C
CERT Recently Published Vulnerability Notes
Exploit-DB.com RSS Feed
Exploit-DB.com RSS Feed
K
Kaspersky official blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Know Your Adversary
Know Your Adversary

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
“என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின்
வெற்றி மயிலோன் · 2026-04-11 · via hindutamil

Updated on: 

புதுக்கோட்டை: “என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டது என்றால், தமிழ்நாட்டை மீண்டும் இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவார்கள். தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பாஜக.வின் வழக்கம். அதற்குத் துணை போவதுதான் அ.தி.மு.க.வின் பழக்கம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் இன்று (ஏப்ரல் 11) நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம்: புதுக்கோட்டைக்கு என்று பெரிய வரலாறு இருக்கிறது. இங்கு இரண்டு இளைஞர்கள் இருந்தார்கள். கீரனூர் முத்து மற்றும் விராலிமலை சண்முகம். 1965-இல் தாய்த்தமிழைக் காப்பதற்காக தங்களின் உயிரையே தந்த இளைஞர்கள் அவர்கள். தமிழுக்கு மீண்டும் ஒன்றிய பா.ஜ.க. அரசால் ஆபத்து வந்திருக்கிறது. அந்த பா.ஜ.க.வையும் – அவர்களை தூக்கி சுமக்கும் அடிமை அ.தி.மு.க.வையும் வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த உங்கள் ஆதரவைக் கேட்டு வந்திருக்கிறேன்.

இந்தத் தேர்தல் என்பது, எதற்கான தேர்தல்? இந்தத் தேர்தலில் வெல்லப்போவது யார், தமிழ்நாடா? டெல்லியா? தமிழ்நாட்டுக்கு எது தேவை? மக்களாட்சியா? சர்வாதிகாரமா? இதை நீங்கள், ஏப்ரல் 23 அன்றைக்கு ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காட்ட வேண்டும்; நிரூபிக்க வேண்டும். கிரிக்கெட்டில் பல பிளேயர்ஸ், பல ரெக்கார்டுகளை வைத்திருப்பார்கள். ஆனால், சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தீர்கள் என்றால், அவரிடம் அனைத்து ரெக்கார்டுமே இருக்கும்! அரசியலில் அப்படிப்பட்ட முறியடிக்க முடியாத அனைத்து ரெக்கார்டும் தி.மு.க.தான் செய்திருக்கிறது என்பதை பெருமையோடு சொல்கிறேன். இனியும் தொடர்ந்து நாம்தான் ரெக்கார்டு பிரேக் செய்யவும் போகிறோம்.

நம்முடைய திட்டங்களைப் பார்த்துதான், இன்றைக்கு பல்வேறு மாநிலங்கள் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன், ஒன்றிய அரசே காப்பி அடித்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான முன்னோடி திட்டங்களை செயல்படுத்துவதில், தி.மு.க.தான் ஒரிஜினல். ஆனால், இத்தனையும் செய்து கொண்டிருக்கும் இந்த ஸ்டாலின், கொரோனாவில் போயிருக்க வேண்டும் என்று பழனிசாமி வன்மத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த ஸ்டாலின் இருந்து, என்னுடைய மக்களுக்கு இன்னும் ஏராளமான திட்டங்களை செய்யத்தான் போகிறேன்; அதையும் நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

தமிழ்நாட்டை இன்றைக்கு இந்தியாவிலேயே டபுள் டிஜிட் வளர்ச்சி பெற்ற மாநிலமாக, நம்முடைய திராவிட மாடல் உயர்த்தியிருக்கிறது. இந்த அடித்தளத்தில் இருந்து, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் புதிய உயரங்களுக்கான பயணத்தை தொடங்கப் போகிறோம். அதற்கான திட்டமாகத்தான் ‘சூப்பர்ஸ்டார்’ வந்திருக்கிறார். “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா… சின்னக் குழந்தைகள்கூட சொல்லும்”. அதுதான் நம்முடைய தேர்தல் அறிக்கை. இந்த ஸ்டாலின் சொன்னால், சொன்னதை செய்வான். நான் கலைஞரின் மகன். சொன்னதை மறக்கவும் மாட்டேன்; மறுக்கவும் மாட்டேன். ஆனால், பா.ஜ.க.வின் கிளைக் கழகச் செயலாளராக இருக்கும் பழனிசாமி அவர்களால், இப்படி ஏதாவது சாதனைகளை சொல்லி, வாக்கு கேட்க முடியுமா?

எங்கேயாவது, அவர் சாதனைகளை சொல்லி, பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, கொள்கைகளைப் பற்றி பேசி பார்த்திருக்கிறீர்களா? எங்கேயாவது, மாநில உரிமைகளுக்கு பழனிசாமி குரல் கொடுத்து பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள். ஏன் என்றால், பாதம்தாங்கி பழனிசாமியிடம் கொள்கைகளும் இல்லை; சாதனைகளும் இல்லை. அதனால்தான், சாக்கடைக்கு சமமான சொற்களையும், அவதூறுகளையும் பேசி, அவர் ஒரு தரமற்றவர் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

என்டிஏ எனும் பேரிடரை, தமிழ்நாட்டுக்குள் பின்வாசல் வழியாக கொண்டு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதன்மை அடிமைதான், பழனிசாமி அவர் பழனிசாமி இல்லை. ஆமாம்சாமி அடிமைசாமி. அ.தி.மு.க. எந்தக் கூட்டணியில் அடிமை சாசனம் எழுதி கொடுத்து சேர்ந்திருக்கிறது. அன்னைத் தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்யும் என்டிஏ கூட்டணியில் சேர்ந்திருக்கிறது. அந்தக் கூட்டணி டெல்லியில் வைத்து முடிவு செய்யப்பட்ட கூட்டணி! அனைவருக்கும் தெரியும். ஊழல்வாதிகளும் - தேர்ந்த துரோகிகளும், காவி கும்பலை தோளில் சுமந்து கொண்டு வருகிறார்கள்.

நேற்றுகூட, பா.ஜ.க.வில் இருக்கும் ஒன்றிய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அவர்கள் என்ன சொல்லியிருக்கிறார்? தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணி ஆட்சியை அமைப்போம் என்று பேசியிருக்கிறார். அடிமைசாமியான பழனிசாமி இதற்கு ஏதாவது பதில் சொன்னாரா? என்ன சொல்வார்? ஒன்றும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டுக்கு வரும் பா.ஜ.க. அமைச்சர்கள் எல்லாம் என்னவெல்லாம் பேசிவிட்டு போகிறார்கள் என்று பத்திரிகைகளில், டி.வி.யில், செய்திகளில் வருகிறது. அனைத்தையும் பார்க்கிறீர்கள். அமைச்சராக இருக்கக்கூடிய பியுஷ் கோயல் – அமைச்சராக இருக்கக்கூடிய தர்மேந்திர பிரதான் என்று இங்கு வருபவர்கள் எல்லாம், இந்தித் திணிப்புக்கு ஆதரவாக மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்த்து அடிமைசாமி ஏதாவது குரல் கொடுத்திருக்கிறாரா?

ஒன்றிய கல்வி அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதானின் வேலை என்ன? கல்வியை வளர்ப்பதில்லை; கல்வியை காவிமயமாக்கினார்! இந்தியைத் திணிக்க மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பேசிவிட்டு செல்கிறார். இந்தித் திணிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்று நம்முடைய குழந்தைகளின் படிப்புக்கு கொடுக்க வேண்டிய, இரண்டாயிரம் கோடி ரூபாய் கல்வி நிதியை கொடுக்காமல் தடுப்பது! இதெல்லாம்தான், அவரது வேலை.

மும்மொழித் திட்டத்தை செயல்படுத்துங்கள், இரண்டாயிரம் கோடியை தருகிறோம் என்று அமைச்சர் பிரதான் சொன்னார். இரண்டாயிரம் கோடி இல்லை; பத்தாயிரம் கோடியே கொடுத்தாலும், இந்தியைத் திணிக்க அனுமதிக்க மாட்டேன். எங்கள் குழந்தைகளின் படிப்புச் செலவையும், ஆசிரியர்களுக்கான சம்பளத்தையும் நானே கொடுத்துக் கொள்கிறேன் என்று உறுதியாக சொன்னவன் தான், இங்கே உங்கள் முன்னால் நிற்கின்ற ஸ்டாலின். இதுவே அடிமைசாமியாக இருந்தால், எதிர்த்து குரல் கொடுத்திருப்பாரா? இதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்ட கால செயல்திட்டங்களின் ஒரு பகுதி.

எதற்காக இதையெல்லாம் செய்கிறார்கள் என்றால், நம்முடைய குழந்தைகள் கல்வி நிலையங்களைவிட்டு வெளியேற வேண்டும்; அறிவியல்பூர்வமாக சிந்திப்பதை நிறுத்த வேண்டும்; வாட்ஸ்அப் வதந்திகளையும், பிற்போக்குத் தனங்களையும் நம்ப வேண்டும்; அப்போதுதான் அந்தக் காலம் போன்றே நாம் முன்னேறாமல் முடங்கிக் கிடப்போம்; ஒரு சிலர் மட்டும் வாய்ப்புகளை தட்டிப் பறித்து, முன்னேறுவார்கள். இதுதான், அவர்களின் திட்டம்; அவர்களின் எண்ணம். இதற்கான செயல்திட்டங்களுக்கு எல்லாம் ஆமாம்சாமி போடும் முரட்டு அடிமையாக வாய்த்திருப்பவர்தான், இந்த அடிமைசாமி! அடுத்தடுத்த துரோகங்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் பெயர்தான், என்டிஏ கூட்டணி.

பழனிசாமிக்கு உண்மையிலேயே தமிழ்நாட்டு மேல் அக்கறை இருந்தால், தர்மேந்திர பிரதான் தொடங்கி, அமித் ஷா - மோடி வரைக்கும் மேடையில் உட்கார வைத்து, “இது தமிழ்நாடு! இங்கு அண்ணா வகுத்துக் கொடுத்த இருமொழிக் கொள்கை மட்டும்தான் இருக்கும்” என்று ஆணித்தரமாக பேச முடியுமா அவரால்? ஒரு அடிமையால் ஓனரை எதிர்த்து பேச முடியாது. பிரதமர் மோடியை பார்த்து, “தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் - ‘வணக்கம்’, ‘நன்றி’ என்று மட்டும் சொல்லி, தமிழில் பேச முடியவில்லை என்று வருத்தப்படுவதாக” சொல்கிறீர்களே, பிறகு ஏன், தமிழைவிட சமஸ்கிருதத்திற்கு 17 மடங்கு அதிகமாக நிதி வழங்குகிறீர்கள் என்று கேள்வி கேட்பாரா, இந்த அடிமை பழனிசாமி?.

அமித்ஷா அவர்களைப் பார்த்து, “சமஸ்கிருதம்தான், அனைத்துக்கும் மூலமொழி” என்று நீங்கள் சொல்வது தவறு என்று பழனிசாமியால் வாதிட முடியுமா? அதற்கான முதுகெலும்பு பழனிசாமிக்கு இருக்கிறதா? அவரை சும்மா ஒன்றும் ஆமாம்சாமி, அடிமைசாமி என்று சொல்லவில்லை. எதற்கெல்லாம் ஆமாம்சாமி போடுகிறார்?. குடியுரிமைத் திருத்தச் சட்டம்! அவர் நினைத்திருந்தால் அவர்கள் எம்.பி.க்கள் ஆதரிக்காமல், அதை தடுத்திருக்க முடியும். ஆனால், ஆமாம்சாமி போட்டு இசுலாமியர்களுக்கு துரோகம் செய்தார். அதேபோன்று, வக்பு திருத்தச் சட்டத்தையும் ஆதரித்து, சிறுபான்மையினருக்கு துரோகம் செய்தார் அடிமைசாமி. அடுத்து, கிறிஸ்தவர்களுக்கு எதிராக F.C.R.A. சட்டம் கொண்டுவரப் போகிறார்கள். கூட்டணியில் இருக்கும் பழனிசாமி, தேர்தலுக்காகவாவது அதை எதிர்த்து பேசியிருக்கிறாரா?.

அடுத்து, நீட் தேர்வை பற்றி பேசுகிறார். நீட் தீர்மானத்தை ஒன்றிய அரசுதான் நிறுத்தி வைத்திருக்கிறது என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், அதை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியதையே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாலமாக மறைத்து வைத்தவர்தான் பழனிசாமி. அந்த மாதிரி துரோகம் எல்லாம் யாரும் பண்ணவில்லை. உடனே, நாங்கள் என்ன பண்ணோம் என்று கேட்பார்… நான் ஏற்கெனவே பல முறை சொல்லியிருக்கிறேன். நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் நிலைப்பாடு. ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நீட் தேர்வு தமிழ்நாட்டில் இருந்திருக்காது. அதற்கான உறுதியை பிரதமர் வேட்பாளராக இருந்த ராகுல் காந்தியே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

ஆனால், கூட்டணிக் கட்சிகளின் தயவுடன் ஆட்சி அமைத்திருக்கும் பிரதமர் மோடியை பார்த்து, “தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு தாருங்கள்” என்று அடிமைசாமியால் கேட்க முடியுமா?. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டப்பூர்வமாக நாங்கள் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். கொள்கையை விற்று பிழைக்கும் அடிமைசாமி கூட்டத்துக்கு சுயமரியாதை உணர்வும் இருக்காது; மாநில உரிமைகளும் புரியாது.

இப்போதுகூட, நாடு முழுவதும் மக்கள், “மோடி ஜி, Where is L.P.G.” என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பல ஹோட்டல்களை இழுத்து மூடிவிட்டார்கள். பல ஹோட்டல்களில் மெனுவை குறைத்துவிட்டார்கள். பல ஹோட்டல்களில் விலையை ஏற்றிவிட்டார்கள். இதனால், உணவுக்காக ஹோட்டல்களை நம்பியிருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் முழுவீச்சில் சரிசெய்ய முயற்சிக்காமல், சிலிண்டர் விலையை 200 ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள். அதுவும் சரியாக வழங்கப்படுவதில்லை. இதையெல்லாம் எதிர்த்து பழனிசாமி குரல் கொடுத்திருக்கிறாரா? அதனால்தான், அவரை அடிமைசாமி என்று சொல்கிறோம். துரோகத்தில் டாக்டரேட் வாங்கும் அளவுக்கு அனைவருக்கும் இவ்வளவு துரோகம் செய்துவிட்டு, வாய் கூசாமல் பொய்யாய் பேசிக் கொண்டிருக்கிறீர்களே பழனிசாமி.

தமிழ்நாட்டு மக்கள் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழுக்கும் - தமிழினத்துக்கும் - தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்வது பா.ஜ.க.வின் வழக்கம்! அதற்குத் துணை போவதுதான் அ.தி.மு.க.வின் பழக்கம்! இவர்களின் அத்தனை துரோகங்களையும் கடந்துதான், நாம் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள். டபுள் எஞ்சின், டப்பா எஞ்சின் என்று சொல்லிக் கொண்டு வரும் என்டிஏ கூட்டணி தமிழ்நாட்டுக்குள் வந்துவிட்டது என்றால், தமிழ்நாட்டை மீண்டும் இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.