惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

C
Check Point Blog
GbyAI
GbyAI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
U
Unit 42
Engineering at Meta
Engineering at Meta
aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
Google DeepMind News
Google DeepMind News
Vercel News
Vercel News
美团技术团队
雷峰网
雷峰网
Recent Announcements
Recent Announcements
有赞技术团队
有赞技术团队
D
DataBreaches.Net
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks
罗磊的独立博客
MyScale Blog
MyScale Blog
博客园_首页
IT之家
IT之家
F
Fortinet All Blogs
博客园 - Franky

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-04-11 · via hindutamil

Updated on: 

அனுபவம் ஒருவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்... ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றும் என்பதை உணர்ந்து செயல்படும் ரிஷப ராசிக்காரர்களே!

உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புது எண்ணங்களால் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க பொறுப்பிருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவர்- மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர் மத்தியில் பெருமையடைவீர்கள்.

குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பேச்சில் முதிர்ச்சி தெரியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு கட்டும் பணி முழுமையடையும். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு பகவான் குரு 3ம் வீட்டுக்கு செல்வதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். அரசு காரியங்கள் முழுமையடையும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குருபகவான் 4-ம் வீட்டுக்கு செல்வதால் தாயாருடன் மனஸ்தா பங்கள் வந்து போகும். வீண் விமர்சனங்கள் வேண்டாம்.

ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 10-ம் வீட்டிலும், கேது 4ம் வீட்டிலும் தொடர்வதால் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலைப்பளு அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் மனக் கசப்புகள் அதிகரிக்கும். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 9ம் வீட்டுக்கும், கேது 3ம் வீட்டுக்கும் வருவதால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் தள்ளிப் போன சுப காரியங்கள் ஏற்பாடாகும்.

சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: உங்களின் லாப வீடான 11ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கடனை அடைக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பாதியிலேயே நின்று போன கட்டிட வேலைகளை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு பிள்ளைகளால் நிம்மதி கிட்டும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். பழைய சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். கணவருக்கு இருந்து வந்த ஒற்றைத் தலைவலி, வாயுக் கோளாறு நீங்கும்.

கன்னிப் பெண்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கசந்த காதல் இனிக்கும். பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். அலட்சியமாக இருந்தவர்கள் உற்சாகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. கடையை நவீன மயமாக்குவீர்கள். புது வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். இரும்பு, ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள்.

அனுபவம் மிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்துவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வரும். கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி பாராட்டுவார். வெகு நாட்களாக கேட்டும் கிடைக்காமல் இருந்த சலுகைகள், சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

கணினி துறையில் இருப்பவர்களுக்கு பணிச் சுமை அதிகமானாலும் அதற்குத் தகுந்தாற்போல் சம்பள உயர்வும் உண்டு. கலைத் துறையினருக்கு இழந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும். புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர்களின் ஆதரவு உண்டு. இந்த புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும் வசதி வாய்ப்புகளை தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அருள்பாலிக்கும் சமயபுரம் மாரியம்மனை அர்ச்சனை செய்து, எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வணங்குங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.