



















Updated on:
சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபோதையில் நிலை தடுமாறி 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்த ஆட்டோ ஓட்டுநர். அருகில் இருந்த கோயில் சுற்றுச்சுவர் கம்பியில் குத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னை, நுங்கம்பாக்கம், அகத்தீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் தேவநாதன் (60). ஆட்டோ ஓட் டுநரான இவர், நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது, அவர் மதுபோதை யில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டின் 2-வது மாடி யில் உள்ள பால்கனியில் தேவநாதன் நின்று கொண்டிருந் தபோது, எதிர்பாராதவிதமாக நிலைத் தடுமாறியுள்ளார்.
இதில் பால்கனியிலிருந்து தலைகுப்புற கீழே விழுந்த அவர். வீட்டை ஒட்டி அமைந்திருக்கும் தெப்பக்குளம் கோயில் சுற்றுச்சுவரின் இரும்பு கம்பி மீது விழுந்தார். கூர்மையான இரும்பு கம்பி தேவநாதனின் உடலில் பலமாக குத்தியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த நுங்கம்பாக்கம் காவல்துறையினர். இரும்பு கம்பியில் சிக்கியிருந்த தேவநாதனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。