惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
T
The Blog of Author Tim Ferriss
J
Java Code Geeks
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
B
Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
Microsoft Security Blog
Microsoft Security Blog
N
Netflix TechBlog - Medium
G
Google Developers Blog
L
LangChain Blog
腾讯CDC
大猫的无限游戏
大猫的无限游戏
U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
罗磊的独立博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
小众软件
小众软件
The GitHub Blog
The GitHub Blog
博客园_首页
GbyAI
GbyAI

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம....
செய்திப்பிரிவு · 2026-04-12 · via hindutamil

Updated on: 

போபால்: மத்​திய பிரதேசத்​தின் பர்​ஹான்​பூர் மாவட்​டம் போர்​சர் கிராமத்​தில் தரக்​குறை​வான வார்த்​தைகளைப் பேசி​னால் ரூ.500 அபராதம் அல்​லது ஒரு மணி நேரம் கட்​டா​யத் துப்​புர​வுப் பணி என்ற விதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கான முடிவு கிராம பஞ்​சா​யத்​தால் ஒரு​மன​தாக எடுக்​கப்​படுள்​ளது.

இந்த விதி​முறை தொடர்​பான சுவரொட்​டிகள் கிராமம் முழு​வதும் ஒட்​டப்​பட்​டுள்​ளன. பொது நடத்​தையை ஒழுங்​குபடுத்​த​வும், தரக்​குறை​வான வார்த்தை பயன்​பாட்​டால் ஏற்​படும் மோதல்​களைக் குறைக்​க​வும் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கிராமத் துணைத் தலை​வர் வினோத் ஷிண்டே கூறுகை​யில், “குழந்​தைகள், பெரிய​வர்​கள் ஆகிய இரு தரப்​பினர் மத்​தி​யிலும் பரவலாக இழி​வான சொற்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. அவற்​றைக் கட்​டுப்​படுத்​தும் நோக்​கில் இந்த முயற்சி எடுக்​கப்​பட்​டுள்​ளது.

முன்பு தாய் மற்​றும் சகோ​தரி​களுக்கு எதி​ரான இழி​வான சொற்​களை அடிக்​கடி பயன்​படுத்​தினர். இப்​போது, அவ்​வாறு செய்​பவர்​கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்​டும் அல்​லது கிராமத்​தில் ஒரு மணி நேரம் துப்​புர​வுப் பணி செய்ய வேண்​டும்.

இந்த முயற்சி நேர்​மறை​யான விளைவு​களை ஏற்​படுத்​தி​யுள்​ளது. கிராம மக்​கள் தங்​கள் வார்த்​தைகளில் அதிக கவனத்​துடன் இருக்​கின்​றனர். இந்த முயற்​சிக்கு அண்டை கிராமங்​களில் இருந்​தும் பாராட்​டு​கள் கிடைத்​துள்​ளன" என்​றார்.

இந்த கிராமத்து இளைஞன் அஷ்​வின் பாட்​டீல் கூறுகை​யில், “ம.பி.​யில் இத்​தகைய ஒரு முயற்சி எடுக்​கப்​பட்​டது இதுவே முதல்​முறை. கிராமத்​தில் 12, 13 வயதுக்​குட்​பட்ட சிறு​வர்​கள் பயன்​படுத்​தும் தகாத வார்த்​தைகள் சில சமயம் பெரிய தகராறில் சென்று முடிகின்​றன.

இந்​தப் பிரச்​சினையைத் தீர்க்க எனக்கு இந்த யோசனை தோன்​றியது. பிறகு ஊராட்​சித் தலை​வர், துணைத் தலை​வர் மற்​றும் பிறருடன் விவா​திக்​கப்​பட்​டது. இதையடுத்து ‘வசைமொழி இல்லா கிராமத்​தை’ நிறு​வும் முடிவு முறைப்​படி ஏற்​றுக்​கொள்​ளப்​பட்​டது. நாங்​கள் அனை​வரும் இதற்​கான உறு​தி​மொழியை ஏற்​றுள்​ளோம், மேலும் இந்த முயற்சி குறித்த முறை​யான சுற்​றறிக்​கை​யும் பஞ்​சா​யத்​தால்​ வெளி​யிடப்​பட்​டுள்​ளது” என்​றார்​.