惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 司徒正美
M
MIT News - Artificial intelligence
博客园_首页
IT之家
IT之家
L
LangChain Blog
D
DataBreaches.Net
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Google DeepMind News
Google DeepMind News
Blog — PlanetScale
Blog — PlanetScale
人人都是产品经理
人人都是产品经理
博客园 - Franky
云风的 BLOG
云风的 BLOG
罗磊的独立博客
量子位
G
Google Developers Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 【当耐特】
博客园 - 叶小钗
S
SegmentFault 最新的问题
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog
T
Tailwind CSS Blog
A
About on SuperTechFans
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை ...
பாரதி ஆனந்த் · 2026-04-10 · via hindutamil

Updated on: 

காதல், லிவ்-இன், திருமணம், மறுமணம் என காதலின் எந்த வடிவமாக இருந்தாலும், அது முழுமை பெற அந்தப் பிணைப்பின் பின்னால், இவனோ / இவளோ தான், நாம் பற்றிக்கொள்ள கிடைத்த ஆன்மா, இவனுடையது அல்லது இவளுடையது தான், நம்மை அரவணைத்து இதமாக வைத்திருக்கக் கூடிய உடல், இவனோ / இவளோ தான் நாம் இளைப்பாறவும், நம்பிக்கையுடன் நம்மை ஒப்படைக்கவும் கிடைத்துள்ள நபர் என்ற உணர்வுகள் ஒருசேர இருப்பது அவசியம்.

இந்த விவரிப்பு காதலை புனிதப்படுத்த, காதல் ஒருமுறை தான் பூக்கும் என்று நிறுவும் முயற்சி அல்ல. ஆனால், காதல் உறவாளர்களுக்கு மத்தியில் இந்த உணர்வுகள் மறைந்து ‘நான் தான்...’ என்ற அகந்தை மேலோங்கினால், அதைத் தவிர அந்த உறவை ‘டாக்ஸிக்’ என்ற பிராண்டுக்குள் அடக்க வேறொன்றும் தேவையில்லை.

இந்திய சினிமாவில் சம காலத்தில் ராஷ்மிகா நடித்த ‘தி கேர்ள் ஃப்ரெண்ட்’, மணிகண்டன் நடித்த ‘லவ்வர்’ போன்ற திரைப்படங்கள் கல்லூரிக் கால, அதற்குப் பிந்தைய கரியர் பில்டிங் காலக்கட்டத்தில் வரும் காதலில் காணக்கூடிய டாக்ஸிக் பார்ட்னர்கள் பற்றிய மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவை என்றே சொல்லலாம்.

அந்த வரிசையில் அமெரிக்க படமான ‘Fair Play’ அலுவலகக் காதலில் ஒரு பெண் எதிர்கொள்ளக் கூடிய டாக்சிஸிட்டியின் உச்சத்தை தோலுரித்துக் காட்டுகிறது. 2023-ல் வெளியான இந்தத் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி ப்ளாட்ஃபார்மில் ஸ்ட்ரீம் ஆகிறது. ரொமான்டிக் த்ரில்லர் அல்லது எராடிக் த்ரில்லர் ஜானரில் இதை உள்ளடக்கலாம்.

அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரில், பங்குச்சந்தை நிறுவனத்தில் ஸ்டாக் அனலிஸ்ட்களாக வேலை செய்கின்றனர் எமிலி - லூக். அலுவலகத்தில் இவர்கள், யாராலும் இமியளவும்கூட கணிக்க முடியாத சக ஊழியர்கள். ஆனால், அந்தரங்க வாழ்வில் காதலும் காமமும் பீறிடும் உறவாளர்கள்.

‘ரகசியமான உறவு போதும், திருமணம் செய்து கொள்ளலாம்’ என்று லூக் மோதிரத்தை நீட்ட, அங்கேயே காதலின் உச்சமான காமமும் அரங்கேறுகிறது. அதில் கிறங்கிப்போய் அடடே என்று நீங்கள் சிலிர்க்கும்போது, அடுத்தடுத்த நகர்வுகள் ஏற்பட்டு படம் திசைமாறி அதிரவைக்கும் படலத்துக்குள் சென்றுவிடும்.

கொஞ்சித் திரிந்த இருவருக்கும் இடையே ஓர் அலுவலகப் பதவி உயர்வு என்ன செய்கிறது? லூக் எப்படியெல்லாம் தன் குரூர சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக கட்டவிழ்க்கிறான்? ஆரம்பத்தில் திணறிப் போகும் எமிலி, அதை எப்படிக் கையாள்கிறாள்? இறுதியில் என்ன முடிவு எடுக்கிறாள்? - இதுவே கதைச் சுருக்கம்.

ஒரு பரபரப்பான அலுவலகத்தில் கணினித் திரைகளில் பச்சை, சிவப்புக் கோடுகள் இசிஜி போல் ஏறி, இறங்கிக் கொண்டிருக்க அதைவைத்து கல்லாகட்டும் நிறுவனத்தில், பங்குச் சந்தையில் பட்டியலான நிறுவனங்களின் நிலைமையை எமிலியும், லூக்கும் பகுப்பாய்வு செய்து கொடுக்க வேண்டும். அவர்களைப் போல் இன்னும் சில அனலிஸ்ட்கள் அலுவலக மையத்தில் இருக்க, அவர்களுக்கு மேலதிகரியாக இருக்கக் கூடிய பிஎம் (PM) எனப்படும் ‘போர்ட்ஃபோலியோ மேனேஜர்கள்’ தனி அறைகளில் இருந்து குழுவை இயக்குகின்றனர்.

அந்த நிறுவனத்துக்கு பணமே பிரதானம். முதலீட்டில் லாபம் ஈட்டினால் பெர்க்ஸ், ப்ரோமோஷன் உண்டு. நட்டம் வந்தால் ‘ஃபயர் அண்ட் ஹயர்’ என்று கடந்துவிடுவார்கள். அப்படியொரு பிஎம் தூக்கி எறியப்படும் நாளில் தான் அந்த காலியிடத்துக்கு பதவி உயர்த்தப்படுகிறாள் எமிலி. அதுவரை பச்சையில் இருந்த எமிலி - லூக் காதல் கிராஃப், அதன்பின்னர் பாதாளத்தில் பாய்கிறது.

அதிகாலை 2 மணியளவில் எமிலிக்கு, அவளுடைய பிஎம் ரோரியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. பலமுறை தவிர்த்தும் மீண்டும் மீண்டும் அழைப்பு வர, லூக் தடுத்தும், எமிலி புறப்பட்டுச் செல்கிறாள். நீண்ட நேரம் கழித்து சற்று தயங்கித் தயங்கி வந்து நிற்கிறாள் எமிலி.

“நான் தான் போகாதே என்று சொன்னேனே!” எனும் லூக், “ஏதேனும் நடந்ததா? அவன் உன்னை துன்புறுத்தினானா? பாலுறவுக்கு முயன்றானா?” என்றெல்லாம் பதற்ற தொனி கேள்விகளால் அவளைத் துளைக்கிறான். அவள் எல்லாவற்றையும் மறுத்துவிட்டு மிகுந்த தயக்கத்துடன் “நான் ‘பிஎம்’ ஆக ப்ரோமோட் செய்யப்பட்டுள்ளேன்” என்கிறாள்.

நமக்கானவர் என்று நாம் நம்பும் நபரிடம் நம்முடைய வெற்றியைப் பகிர முடியவில்லை என்றால், அந்த நபர் ‘நாம் நம்மை ஒப்படைக்க கிடைத்துள்ள நபர்’ ஆக இருக்க முடியாது. சிட்டிகை தர்மசங்கடமும் டாக்சிஸிட்டி தான்.

அந்த விநாடி பின்னங்களில் லூக் பொறாமையில் தகித்து, இயலாமையில் துவண்டு, அவற்றை அதீத மெனக்கிடலோடு மறைத்து, எமிலிக்கு முத்தமிட்டு வாழ்த்துவான். அந்த முத்தமும் வாழ்த்தும் பூரணமாக இல்லை என்பதை புத்திசாலியான எமிலி புரிந்து கொள்வாள்.

முன்பு அலுவலகத்தின் லிஃப்டில் சந்திக்கையில், அப்போதுதான் பார்ப்பதுபோல் குட் மார்னிங் க்ரீட் செய்து, கண்களில் காதலை பரிமாறிக் கொள்வார்கள். ஆனால் எமிலியை கம்பெனி கார் வந்து அழைத்துச் செல்ல, லிஃப்டில் சந்திக்கையில், எமிலியின் கண்ணை நேருக்கு நேர் பார்க்கத் திராணியற்றவனாக மாறியிருப்பான் லூக். ப்ளாஸ்டிக் சிரிப்பு, சம்பிரதாய மெசேஜ்கள் வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டிருக்கும்.

நீங்கள் ஓர் உறவில் இருக்கிறீர்கள். ஆனால், ஒருவர் இன்னொருவருக்கு, மனதில் தோன்றியதை அப்படியே ஒரு குறுஞ்செய்தியாக, முன்னும் பின்னுமாக நகர்ந்து ஏதும் டெலீட், எடிட் செய்யாமல் அனுப்ப இயலவில்லை என்றால் அங்கே உறவுச் சிக்கல் இருக்கிறது என்றே அர்த்தம். அப்படித்தான், அடித்த மெசேஜை அனுப்பாமலும், அதில் திருத்தம் செய்து அனுப்பியும் பேட்ச் ஒர்க் பார்ப்பாள் எமிலி.

நிமிடத்துக்கு நிமிடம் வன்மும், பொறாமையும் ரேபீஸ் போல் மூளைக்குள் பரவ, எமிலியை எப்படி அந்தப் பதவியிலிருந்து காலி செய்வது என்று விரியும் லூக்கின் எண்ணங்கள். அவன் காதுபடவே அவனது சகாக்கள் “எமிலி பாஸுடன் அட்ஜெஸ்ட் செய்து பதவியை வாங்கியிருப்பாள்,” என்று பேசும்போது கூட அமைதி காக்கிறான். உண்மையில் உள்ளூர அவன் அதை ரசிப்பான்.

ஆனாலும், எமிலி அவனிடம் நயந்து பேசுவாள். நிலைமையை சரிசெய்ய முயற்சிப்பாள். நெருக்கமாக இருக்கலாம் என்று கேட்பாள். எதுவுமே அவனிடம் எடுபடாது.

மாறாக, “உன்னுடைய ஆடை சரியில்லை. ஆண்கள் கவனத்தை ஈர்க்கும்படி ஆடை அணிகிறாய்,” என்பான். அந்த நிமிடம் எமிலி எரிமலையாகி அவனுக்குக் குட்டி ஷாக் தருவாள். ஆனாலும் அது நீடிக்காது. அடுத்த நாள் தன் உடை அலங்காரத்தை மாற்றிக் கொள்வாள், ஒருவேளை லூக் அதில் சமாதானமடையலாம் என்ற ஆசையில்.

ஒருபுறம் லூக் வன்மத்தை வளர்க்க, மறுபுறம் “நான் என்ன செய்ய வேண்டும், நாங்கள் எப்படி பழைய மாதிரியே இருக்கலாம்” என்று தீர்வை நோக்கி தன்னை வதைப்பவளாவாள் எமிலி.

உண்மையில் கல்வி, பொருளாதார சுதந்திரம் பெற்ற நவநாகரிக பெண்கள் பலரும் டபுள் விக்டிம்களாகவே இருக்கின்றனர். ஒன்று, தங்கள் வாழ்க்கையை யாருடைய கதை, வசனம், இயக்கம் இல்லாமலும் தாங்களாகவே வாழ முற்படுவதால் குடும்ப வட்டத்திலிருந்து எழும் இன்னல்கள்... இன்னொன்று, பணியிடத்தில் ஆண்களும் அரிதாக பெண்களும் தரும் சவால்கள்.

எமிலியை மட்டுமல்ல, பதவி உயர்வு பெறும் எந்தவொரு பெண்ணையும், மேலதிகாரியைப் பார்த்து சினேகப் புன்னகை உதிர்த்து, அவருடன் ஒருவேளை உணவருந்தும் சூழலை எதிர்கொள்ளும் பெண்ணையும் அலுவலக சகாக்கள், ‘அட்ஜெஸ்ட் செய்பவளாகவே’ பார்க்கிறார்கள்.

ஓர் ஆணின் வெற்றி என்பது கொண்டாட்டத்துக்கு உரியது; ஒரு பெண்ணின் வெற்றி விவாதத்துக்கும், விமர்சனத்துக்கும் உரியதாகவே இன்றளவும் இருப்பது வேதனையான உண்மை!

அந்த உண்மையின் சாட்சிதான் எமிலி. அவளுடைய வாழ்க்கையை ஸ்க்ரிப்ட் செய்கிறான் லூக், அவளுடைய அலுவலக வெற்றியானது சகாக்களால் கிசுகிசுக்கப்படுகிறது.

பதவி உயர்வை அவள் முழுமையாக சுவைப்பதற்கு முன்னரே ஆண் ஈகோவின் சதியால் பெரிய இழப்பு நிறுவனத்துக்கு ஏற்படுகிறது. லூக்கின் நெருக்கடியால் மட்டுமே அவன் பரிந்துரைத்த நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பாள் எமிலி. அது சதி என்றுகூட தெரியாமல் அவள் தவிக்க, அதை தூரத்திலிருந்து ரசிப்பவனாக இருப்பான் லூக்.

ஓர் உறவு டாக்ஸிக்கானதாக இருந்தால், அங்கே பொறாமை, நேர்மையின்மை, துரோகம், ஆதரவின்மை இருக்கும்.

இவை எல்லாவற்றையுமே எமிலி எதிர்கொள்வாள். எமிலியைப் போல் பிஎம் ஆக வேண்டும் என்பது மட்டுமே லூக்கின் இலக்காக இருக்கும். அதற்காக ஒருமுறை எமிலியின் ஆலோசனையையும் தாண்டி, நிறுவன முதலாளியிடம் சென்று மண்டியிட்டு, தான் அந்த நிறுவனத்தையும், முதலாளியையும் எவ்வளவு நேசிக்கிறேன் என்றும், எத்தனை கடின உழைப்பை அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்றும் பேசுவான்.

கார்ப்பரேட் இறுக்க முகத்தோடு, உதட்டு ரேகையாக அடக்கிவைக்கப்பட்ட ஆணவச் சிரிப்போடு, அவன் கேட்கும் 60 விநாடிகளைக் கொடுத்து, அவன் சொல்வதை எல்லாம் கேட்டுவிட்டு ஏற்கெனவே பிஎம் நியமிக்கப்பட்டாகிவிட்டது என்று நகர்ந்துவிடுவான்.

அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு தன்னை ஓர் அறையில் அடைத்துக் கொண்டு மதுவில் மிதப்பவனை ஆசுவாசப்படுத்த முயற்சிப்பாள். எமிலியால் அவனை நெருங்கவே முடியாது. அடுத்த சில நாட்களுக்கு அவனைத் தொடர்பு கொள்ளவும் முடியாது. சில நாட்கள் கழித்து அலுவலகத்தில் எமிலி முக்கியமான ஆலோசனையில் இருக்கும்போது குடிபோதையில், அழுக்கு உடையில் வந்து ரகளையில் ஈடுபடுவான் லூக்.

நிறுவனத்தை, முதலாளியை வசைபாடுவதோடு, உங்கள் நிறுவன விதிகளை மீறி எமிலி, அனலிஸ்டான என்னுடன் பாலுறவில் இருந்தாள் என்பான். எமிலி அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் உறைந்து உடைந்து போவாள்.

அந்தக் காட்சியின்போது, ‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படத்தில், ராஷ்மிகா தன்னைவிட்டு விலகியதைப் பொறுக்க முடியாமல், அவளது விடுதி அறை வாசலில் அவளை நிர்வாணமாக தனது எக்ஸ் வரைந்து வைத்ததைப் பார்த்து உறைந்து நின்ற ராஷ்மிகா நினைவுக்கு வருவார். எமிலியும், ராஷ்மிகாவும் நடித்ததாகவே தெரியாது.

‘தி கேர்ள்ஃப்ரெண்ட்’ படத்தில் ராஷ்மிகா கல்லூரி விழாவில் மைக்கில் எல்லோரும் கேட்கும்படி, “உன்னுடன் உறவில் இருந்ததை வெளியில் சொல்லி என்னை முடக்கிவிடலாம் என்று நீ நினைத்தால். உன் வேலையை சுலபமாக்க நானே அதைச் செய்கிறேன். ஆம். நான் உன்னுடன் ஒன்றல்ல, இரண்டல்ல பலமுறை பாலுறவில் இருந்திருக்கிறேன்” என்று சொல்லிச் செல்வாள். பின்னர் படிப்பில் கவனம் செலுத்தி, தனது தொழில் வாழ்க்கையை நிர்ணயிப்பாள்.

ஆனால், எமிலி வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், நிறுவனத் தலைவரிடம் லூக் தன்னை ஸ்டாக் செய்தான். தன்னை நெருங்க முடியாததால் இப்படி அவதூறு பேசுகிறான் என்று சொல்லி தனது வேலையைக் காப்பாற்றிக் கொள்வாள்.

மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பவர் டைனமிக்ஸ் போட்டியென்று தோன்றிவிடும். ஆனால், ஆழ்ந்து கவனிக்க வைக்கும்படி காட்சிகளையும், வசனங்களையும் கட்டமைத்து டாக்ஸிக் உறவை ஆவணப்படுத்தியிருக்கிறார் பெண் இயக்குநர் கோல் டோமாண்ட்.

எல்லா துரோகத்தையும் செய்துவிட்டு, எமிலியின் தாயார் ஏற்பாடு செய்த சர்ப்ரைஸ் பார்ட்டிக்கு வந்திருக்கும் லூக்கை அனைவரின் முன்னிலையிலும் பீர் பாட்டிலைக் கொண்டு அடித்துவிடுவாள் எமிலி.

குட் பை சொல்லிவிட்டு செல்லும் அவளை பின்தொடர்ந்து செல்வான் லூக். பார்ட்டி ஹால் பாத்ரூமில் வாய்த்தகராறு உக்கிரமான உதட்டு முத்தமாகி, பின்னர் லூக்கால் எமிலி பாலியல் வன்புணர்வு செய்யப்படுவாள்.

கண்ணாடியில் பிம்பமாய் தெரியும் லூக், ஓர் ஆணால் என்ன முடியும் என்பதை அழுத்தமாக நான் நிரூபித்துக் கொண்டிருக்கிறேன் பார் என்பதை கொடூரமாகக் காட்டுபவனாக நம் மனதில் பதிந்து பயமுறுத்துவான்.

அங்கிருந்து அமைதியான வெளியேறி வீடு வருவாள் எமிலி. தனக்குத் தேவை தனது வேலையும், நலமும் என்பதை தீர்மானிப்பாள்.

தன் நிறுவனத் தலைவர், “காலில் அசுத்தம் ஒட்டிக் கொண்டால், அதைத் துடைத்துவிட்டு கடந்து செல்வதுபோல், லூக்கின் அவதூறுகளைக் கடந்து செல்,” என்று சொல்லியிருப்பார். அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டவளாய் லூக்கை கடந்து சென்று விட முடிவு செய்துவிடுவாள்.

ஆனால், ஒருநாள் மாலை வீடு திரும்பும்போது லூக் அங்கிருப்பான். வீட்டின் குத்தகையை முறித்துவிட்டதாகவும், பொருட்களை பங்கு பிரித்துக் கொள்ளலாம், பணமும் பிரித்துக் கொள்ளலாம் என்று எந்த சலனமுமே இல்லாமல் சொல்வான்.

‘என் வெற்றி ஏன் உனக்கு மகிழ்ச்சி தரவில்லை? என்னை ஏன் உயர்ந்த பதவியில் உன்னால் பார்க்க முடியவில்லை? எனக்கு ஏன் துரோகம் செய்தாய்? என்னை ஏன் ரேப் செய்தாய்? என்னை ஏன் அவமானப்படுத்தினாய்?’ என்று அடுக்கடுக்காக கேள்விகளை கேட்கும் எமிலி, அங்கே ‘தரமான சம்பவம்’ ஒன்றை நிகழ்த்தி லூக்குக்கு பாடம் புகட்டுவாள்.

தன் காதலன் / காதலி முழுக்க முழுக்க டாக்ஸிக் குடோன் எனத் தெரிய வரும்போது, அந்த நபரை அவர்களுக்குப் புரியும் ‘மொழி’யில் கையாளுவது எப்படி என்பதை நம் அனைவருக்குமே கற்றுக்கொடுப்பாள் எமிலி.

'‘The GirlFriend’ பூமாவாக இருக்கட்டும், ’Lover’ திவ்யாவாக இருக்கட்டும், ‘Fair Play’ எமிலியாக இருக்கட்டும்... டாக்ஸிக் உறவில் இருப்பதை விட, அதை பக்குவமாகவும் பகிரங்கரமாகவும் உதறித் தள்ளிவிட்டு, கடந்து செல்வதே சிறந்தது என்பதை அனுபவித்து புரிந்துகொள்வர்.

எந்த நல்ல உறவும் உங்கள் கனவுகளை, நட்புகளை, மாண்பை காவு கேட்காது. அதேபோல், தங்கள் செயல்களில் தவறு இருப்பதை உணராதவர்களைத் திருத்த முடியாது. அவர்கள்தான் டாக்ஸிக்.

அத்தகைய டாக்ஸிக் உறவாளரான லூக்கை கச்சிதமாகக் கையாண்டிருப்பாள் எமிலி. அந்தக் கச்சிதக் காட்சியை நீங்கள் பார்க்கும்போது இது எத்தகைய பொருத்தமான ‘Fair Play’ என்று உங்களுக்குப் புரியும்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in