惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
Intezer
Google DeepMind News
Google DeepMind News
有赞技术团队
有赞技术团队
博客园 - Franky
Jina AI
Jina AI
博客园_首页
大猫的无限游戏
大猫的无限游戏
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
A
About on SuperTechFans
J
Java Code Geeks
WordPress大学
WordPress大学
GbyAI
GbyAI
N
News | PayPal Newsroom
C
Cybersecurity and Infrastructure Security Agency CISA
博客园 - 聂微东
Stack Overflow Blog
Stack Overflow Blog
T
The Exploit Database - CXSecurity.com
CTFtime.org: upcoming CTF events
CTFtime.org: upcoming CTF events
N
Netflix TechBlog - Medium
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
P
Palo Alto Networks Blog
U
Unit 42
Vercel News
Vercel News
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Know Your Adversary
Know Your Adversary
博客园 - 三生石上(FineUI控件)
AWS News Blog
AWS News Blog
Latest news
Latest news
V
V2EX
Y
Y Combinator Blog
Scott Helme
Scott Helme
博客园 - 叶小钗
美团技术团队
A
Arctic Wolf
S
Secure Thoughts
H
Help Net Security
L
LangChain Blog
博客园 - 司徒正美
V2EX - 技术
V2EX - 技术
P
Proofpoint News Feed
M
MIT News - Artificial intelligence
I
InfoQ
Cyberwarzone
Cyberwarzone
S
SegmentFault 最新的问题
Hacker News - Newest:
Hacker News - Newest: "LLM"

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி ஒரு மாதத்தில் 40%-லிருந்து 60% ஆக உயர்வு விஜய் தனிக்கட்சி தொடங்கியிருப்பது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம் “இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டே பழகிவிட்டேன்” - செங்கோட்டையன் ஒப்புதல் “ஸ்டாலினும், உதயநிதியும் டெல்டாக்காரர்கள் அல்ல...உல்டாக்காரர்கள்” - டிடிவி.தினகரன் நக்கல் “திமுக இனி ஜென்மத்துக்கும் ஆட்சிக்கு வராது” - அண்ணாமலை கருத்து “மக்களவைத் தேர்தல் என ஸ்டாலின் நினைக்கிறார்” - அன்புமணி கிண்டல் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 ஏப்ரல் 2026 ஜோதிட நாள்காட்டி 12.04.2026 | பங்குனி 29 - ஞாயிற்றுக்கிழமை திமுக கூட்டணியை ஆதரித்து ஏப். 17 முதல் கமல் பிரச்சாரம் ‘ஜனநாயகன்’ படத்தை கசிய விட்டது யார்? - சைபர் க்ரைம் போலீஸார் விசாரணை தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்? பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: ஐசியூ-வில் தீவிர சிகிச்சை திருப்பத்தூர் தொகுதியில் திருப்பம் யாருக்கு? “பாஜகவுடன் சேர்ந்து ஜேடியு தலைவர்கள் நிதிஷ் குமாருக்கு எதிராக சதி செய்தனர்” - தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு பிடிஆர் Vs சுந்தர்.சி: வெடித்த வார்த்தைப் போர் - மதுரை மத்திய தொகுதியில் நடப்பது என்ன? “என்டிஏ வந்தால் மீண்டும் தமிழகத்தை இருண்ட காலத்துக்குள் தள்ளிவிடுவர்” - முதல்வர் ஸ்டாலின் “திமுக ஆட்சியில் கனிமவள கொள்ளை தீவிரம்” - பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு The Voice of Hind Rajab: எல்லாரும் கேட்க வேண்டிய குரல் | சினிமாவும் அரசியலும் 26 தூத்துக்குடி தொகுதியில் கெத்து காட்டப்போவது யார்? திருத்துறைப்பூண்டி தொகுதியில் ‘திக் திக்’ வெற்றி யாருக்கு? உத்திரமேரூர் உக்கிரம் எடுக்கும் தேர்தல் பிரச்சாரம் காக்கி சர்க்கஸ்: நகைச்சுவை வெடிப்பும் காதலின் துடிப்பும் | ஓடிடி திரைப் பார்வை “ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கட்டணம் விதிக்க அமெரிக்கா அனுமதிக்காது” - ட்ரம்ப் உறுதி சங்கராபுரம் தொகுதியில் வெல்லப்போவது யார்? “மேற்கு வங்கத்தை கூட்டாக கொள்ளையடிப்பவர்களுக்கு தண்டனை உறுதி” - அமித் ஷா “தேதி குறித்து கள் இறக்குவேன்; என்னை சுடுங்கள் பார்க்கலாம்...” - சீமான் சவால் மடத்துக்குளம் தொகுதியில் மகுடம் சூடப்போவது யார்? திருப்பத்தூர் தொகுதியில் தவெகவின் மாற்று வேட்பாளர் சுயேட்சையாக போட்டி! ஆயிரம் விளக்கு தொகுதியில் அனல் பறக்கும் ஓட்டு வேட்டையில் வேட்பாளர்கள் கூடலூரில் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டுமா திமுக? தி.நகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள் “திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” - பிரதமர் மோடி மேஷம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் “இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதற்கான நிதி குறித்து விளக்க வேண்டும்” - வெங்கய்ய நாயுடு ஆர்.கே.நகர் தொகுதியில் வீதிகளில் வலம்வரும் வேட்பாளர்கள் “மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது” - குஷ்பு ‘ஜனநாயகன்’ இணையத்தில் வெளியானது பற்றி சிபிஐ விசாரணை கோர விஜய் தயாரா? - பாஜக கேள்வி “அடுத்த 10 நாட்களுக்கு...” - தவெகவினருக்கு விஜய் வைத்த கோரிக்கை அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஜே.டி. வேன்ஸ், முகம்மது பாகர் கலிபா இஸ்லாமாபாத் வருகை தலைமைச் செயலர் மாற்றம், சந்தீப் மிட்டல் நியமனத்தை திரும்பப்பெறுக - தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம் “234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” - முதல்வர் ஸ்டாலின் மதுபாலா பயோபிக்​கில் சாரா அர்ஜுன் ரிஷபம் ராசியினருக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் LiK - விமர்சனம்: பிரதீப் ரங்கநாதனின் சயின்ஸ் ஃபிக்‌ஷன் காதல் கதை எப்படி? பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பட்டையை கிளப்பப்போவது யார்? மோச​மான வதந்​தி​களை பரப்பிய ஹீரோ: சோமி அலி புகார் 7 உண்​மைச் சம்​பவங்​களை மையப்படுத்​திய ‘மிஸ்டர் எக்ஸ்’ - இயக்​குநர் தகவல் மலையாள இயக்குநர் ரஞ்சித்துக்கு நிபந்தனை ஜாமீன் தமிழகத்தில் வணிக ரீதியான எல்பிஜி ஒதுக்கீட்டை 70% அதிகரிக்க நடவடிக்கை: இந்திய எண்ணெய் கழகத் தலைவர் தகவல் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக முதல்வரின் தனிச்செயலர் மீது நடவடிக்கை கோரி வழக்கு சினி​மா​வில் 21 வருடங்கள்: நடிகை தமன்னா நெகிழ்ச்சி “முன்மாதிரி தொகுதியாக தாம்பரம் மாற்றப்படும்” - அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் உறுதி தொகுதி மறுவரையறை திட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம் புதுச்சேரியில் ஏப்.19-ல் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி! இந்​தி​யில் மீண்டும் நிமிஷா சஜயன் மத்திய பார்வையாளர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை: தேர்தலை சுதந்திரமாக நடத்த அறிவுறுத்தல் வட அமெரிக்கா​வில் இளையராஜா இசை சுற்றுப்பயணம் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவி நீக்கம்: செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஹன்சிகா வழக்கு “பயிற்சியில் 150 சிக்ஸர்கள் வரை விளாசுவேன்” - லக்னோ அணியின் புதிய ஹீரோ முகுல் சவுத்ரி ‘காசி’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி “பேட்ஸ்மேன்களின் சாதுர்யத்தால் டி20 மாறிவிட்டது” - மனம் திறக்கும் நடராஜன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில் 100 டம்மி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பறிமுதல் “நடுவர் செய்த தவறால் லக்னோவிடம் தோற்றோம்” - கொல்கத்தா அணியின் ரோவ்மன் பாவல் ஆதங்கம் வெற்றி பாதைக்கு திரும்புமா சிஎஸ்கே? - டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இன்று மோதல் இரு முனை போட்டியாக மாறி வரும் தமிழக தேர்தல் களம்! மாதவிடாய் குறித்து சர்ச்சைக் கருத்து: ஸ்ரீலீலாவுக்கு எதி​ராக விமர்​சனம் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியாக உதயநிதி, எல்.முருகன் தான் காரணம்: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு நாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு ஆதரவு இல்லை: கிருஷ்ணசாமி அறிவிப்பு Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13
நறுமணத்தில் மறைந்திருக்கும் தொழில் உலகம்! - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 31
2026-05-06 · via hindutamil

Updated on

2 min read

ஒரு கேள்வியுடன் தொடங்கலாம். காலையில் குளிக்கும் சோப்பின் நறுமணம் உங்களைப் புத்துணர்வாக உணர வைக்கிறது. சாப்பிடும் பிஸ்கட்டில் வெண்ணெய் சுவை நாவில் கரைகிறது. ஷாம்புவில் மல்லிகை வாசம் வீசுகிறது.

இவை எல்லாம் தானாக வருவதில்லை. நம் கவனத்துக்கு வராத ஒரு தனிப்பட்ட அறிவியல் துறையே இவற்றை உருவாக்குகிறது. அதுதான் பெர்ஃபியூமெரி - ஃபிளேவர் டெக்னாலஜி (Perfumery & Flavour Technology).

இந்தத் துறையில் பயிற்சி பெற்ற வர்கள்தான் நம் அன்றாட வாழ்க்கையை வாசனையாகவும் சுவையாகவும் மாற்றுகிறார்கள். ஆனால், இவ்வளவு முக்கியமான இந்தத் துறையைப் பற்றி தமிழ்நாட்டு மாணவர்களிடம் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

வாசனை விஞ்ஞானி யார்?

நறுமணங்களை உருவாக்கும் அறிவியலாளர் ‘பெர்ஃபியூமர்’ (Perfumer) என்றும் சுவைகளை உருவாக்குபவர் ‘ஃபிளேவரிஸ்ட்’ (Flavourist) என்றும் அழைக்கப் படுகிறார்கள். இவர்கள் ‘தி நோஸ்’ (The Nose) என்று மரியாதையுடன் குறிப்பிடப்படுகிறார்கள். ஏனெனில், இவர்களின் முக்கிய ஆயுதம் மூக்கு.

ஒரு திறமையான பெர்ஃபியூம ரால் 2,000 முதல் 3,000 வரையிலான வாசனை மூலப்பொருள்களை மூக்கின் உதவியால் மட்டுமே அடையாளம் காண முடியும். இந்தத் திறனைப் பெற பல ஆண்டுகள் கடுமை யான பயிற்சி தேவைப்படுகிறது. நாம் அனுபவிக்கும் வாசனைகளும் சுவைகளும் எளிமையானவை அல்ல.

ஒரு சாக்லெட்டின் மணம் 600க்கும் மேற்பட்ட வேதிப்பொருள்களின் கலவை. அதேநேரம் புதினா சுவை ‘மென்தால்’ என்கிற ஒரே மூலப் பொருளால் உருவாகிறது. ரோஜாவாசம் இயற்கையில் இருந்து எடுக்கப்படும் ‘ரோஸ் ஆட்டோ’ எண்ணெய்யிலிருந்து கிடைக்கிறது. இதனால், இது ஒரு கலை மட்டுமல்ல; அறிவியலால் உருவாக்கப்பட்ட கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில் துறையும்கூட.

என்ன படிக்கலாம்?

பெர்ஃபியூமெரி - ஃபிளேவர் டெக்னாலஜி படிப்பு வேதியியல், உயிரியல், உணவு அறிவியல், சந்தைப் படுத்துதல் ஆகிய பல துறைகளை ஒருங்கிணைக்கும் சிறப்புப் படிப்பாகும். இந்தத் துறை, நறுமணங்களையும் சுவைகளையும் அறிவியல்ரீதியாக உருவாக்கும் திறனை வளர்க்கிறது.

புதிய வாசனை உருவாக்குதல் (Fragrance Creation & Formulation), சுவைத் தொழில்நுட்பம் (Flavour Technology), மூக்கு - நாக்கின் அறிவியல் மதிப்பீடு (Sensory Evaluation), அழகுசாதன வேதியியல் (Cosmetics Chemistry), இயற்கை எண்ணெய்கள் அறிவியல் (Essential Oils Technology), சந்தைப்படுத்துதல் (Marketing Management), மருந்தியல் துறையில் (Pharmaceutical Industry) சுவைகளின் பயன்பாடு போன்றவை இந்தப் படிப்பில் கற்பிக்கப்படும் முக்கிய அம்சங்கள்.

மருந்து என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அதன் கசப்பான சுவைதான். குறிப்பாகக் குழந்தைகளை மருந்து குடிக்கச் சொல்வது சவாலான காரியம். இதை எளிதாக்குவதற்காகவே மருந்தியல் துறையில் ‘சுவைகள்’ முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பல மருந்துகள் இயல்பாகவே கசப்பாக இருக்கும். ஆனால், அவற்றில் ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, மாம்பழம் போன்ற பழச்சுவைகள் சேர்க்கப்பட்டால் அந்தக் கசப்பு குறைந்து, மருந்தை எளிதாக உட்கொள்ள முடியும். இதனால் குழந்தைகள்கூட மருந் தைத் தயக்கமின்றி உட்கொள் வார்கள்.

மருத்துவர் கூறியபடி மருந்து களை முறையாக உட்கொள்வது அவசியம். ஆனால், சுவை மோசமாக இருந்தால் பலர் அதைத் தவிர்க்க முயல்வார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்கச் சில சுவைகள் உதவுகின்றன.

இரும்புச்சத்து, கால்சியம் போன்ற நீண்ட காலமருந்துகளிலும் நல்ல சுவையைச் சேர்ப்பதால், நோயாளிகள் அவற்றைத் தொடர்ந்து உட்கொள் வார்கள். மென்று சாப்பிடும் மாத்திரைகள், தொண்டைக்கான மாத்திரைகள் போன்ற பல மருந்துகளிலும் சுவைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தியாவின் நிறுவனம்

1933ஆம் ஆண்டு மும்பையில் இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜி (ICT) தொடங்கப்பட்டது. ஆசியாவிலேயே வேதியியல் தொழில் நுட்பக் கல்வியில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனம், பல தசாப்தங்களாகத் திறமையான அறிவியலாளர் களையும் தொழில்துறைத் தலைவர் களையும் உருவாக்கி வருகிறது.

1990–91ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட எம்.டெக். பெர்ஃபியூமெரி - ஃபிளேவர் டெக்னாலஜி படிப்பில் வெறும் 18 இடங்களே உள்ளன. ஆனால், இந்தச் சிறிய எண்ணிக்கைக்காக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டியிடுவார்கள்.

இப்படிப்பில் சேர பி.டெக். அல்லது பி.இ. பட்டம் பெற்றிருப்பது அவசியம். அரசு நிறுவனம் என்பதால் ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.70,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

‘GATE’ தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றால் இப்படிப்பில் சேரலாம். இது வெறும் கல்வி நிலையமல்ல. இந்தியாவின் தொழில், அறிவியல், மருத்துவ வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர்களின் பயிற்சி மையம்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இங்கே வேதியியல் பொறியியல் படித்தவர். வேதியியல் பொறியியல் துறையின் முன்னோடிப் பேரா சிரியர் எம்.எம்.சர்மா போன்ற பலர் இந்நிறுவனத்துடன் தொடர்பு டையவர்கள்.

சுவாரசியமான பெர்ஃபியூ மெரி - ஃபிளேவர் டெக்னாலஜி துறையின் உலகளாவிய நிறுவனங்கள், முன்னணி பிராண்டுகள், சந்தை அளவு, வேலைவாய்ப்பு வாய்ப்புகள் பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; - ticf@indiacollegefinder.org