惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Engineering at Meta
Engineering at Meta
GbyAI
GbyAI
MongoDB | Blog
MongoDB | Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
腾讯CDC
U
Unit 42
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
M
MIT News - Artificial intelligence
人人都是产品经理
人人都是产品经理
Hugging Face - Blog
Hugging Face - Blog
MyScale Blog
MyScale Blog
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
N
Netflix TechBlog - Medium
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园 - Franky
Recent Announcements
Recent Announcements
A
About on SuperTechFans
Stack Overflow Blog
Stack Overflow Blog
The GitHub Blog
The GitHub Blog
D
Docker
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் கோயில் தரப்பில் உச்ச நீத...
செய்திப்பிரிவு · 2026-06-23 · via hindutamil

Updated on: 

மதுரை: ​திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீபம் வழக்​கில் இரு நீதிப​தி​கள் அமர்வு பிறப்பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு மனுத் தாக்​கல் செய்​யப்​பட்டு நிலு​வை​யில் உள்​ள​தாக உயர் நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் திருக்​கார்த்​திகை நாளான கடந்​தாண்டு டிச.3-ல் தீபம் ஏற்​றக்​கோரி மதுரை எழு​மலையை சேர்ந்த ராம ரவி​கு​மார் உள்பட பலர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்​தனர். இதை விசா​ரித்த தனி நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என டிச.1-ம் தேதி உத்​தர​விட்​டார்.

இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர் காவல் ஆணை​யர் மற்​றும் கோயில் செயல் அலு​வலர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. இதையடுத்து ஆட்​சி​யர், காவல் ஆணை​யர், செயல் அலு​வலர் ஆகியோர் நீதி​மன்​றத்​தில் ஆஜராகி நீதி​மன்ற தீர்ப்பை நிறைவேற்​றாததற்​காக வருத்​தம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் பிர​தான மனு மீதான தனி நீதிப​தி​யின் தீர்ப்​புக்கு எதி​ராக அரசு தரப்​பிலும், நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு எதி​ராக அதி​காரி​கள் தரப்​பிலும் மேல்​முறை​யீடு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன. இந்த மனுவை விசா​ரித்த முந்​தைய அமர்​வு, தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து ஒவ்​வொரு ஆண்​டும் திருக்​கார்த்​திகை நாளில் தீபத்​தூணிலும் கோயில் நிர்​வாகம் சார்​பில் தீபம் ஏற்ற வேண்​டும் என கடந்த ஜனவரி 6-ம் தேதி உத்​தர​விட்​டது. நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கையை அதி​காரி​கள் சந்​திக்​க​வும் நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.

இந்த மனுக்​கள் நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்​வில் விசா​ரணைக்கு வந்​த​போது, அதி​காரி​கள் மீதான நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்​கைக்கு தடை விதிக்​கப்​பட்​டது. இந்த மனுக்​கள் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தன. அப்​போது நீதிப​தி​கள், தனி நீதிப​தி​யின் உத்​தரவை இரு நீதிப​தி​கள் அமர்வு உறுதி செய்​துள்​ளது.

இந்த உத்​தர​வால் யாருக்​கும் எந்த பாதிப்​பும் இல்​லை. உத்​தரவை செயல்​படுத்​து​வ​தில் அரசுக்கு என்ன சிரமம் உள்​ளது. இந்த விவ​காரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​காமல், ஏன் இன்​னும் நீட்​டிக்க விரும்​பு​கிறீர்​கள், அனைத்து தரப்​பும் சமரச​மாகப் பேசி திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கலாம். திருப்​பரங்​குன்​றத்​தில் வசிக்​கும் மக்​களின் நலனை​யும் கருத்​தில் கொள்ள வேண்​டும்.

அவர்​கள் அங்​கு​தான் வசிக்​கின்​றனர். அவர்​களுக்​குத்​தான் கள நில​வரம் தெரி​யும். மதநல்​லிணக்​கம் முக்​கி​யம். இதனால் இருதரப்​பினரை​யும் ஒன்​றாக அமர்ந்து சமரசம் பேசி ஒரு தீர்வை எட்​டச் செய்​யுங்​கள். இதை ஏன் இருதரப்பு வழக்​கறிஞர்​களும் பரிசீலிக்​கக் கூடாது எனக் கேட்டனர். தமிழக அரசு தரப்​பில், உயர் நீதி​மன்ற தீர்ப்பை அமல்​படுத்​தக்கூடாது என்​பது நோக்​கம் அல்ல. நூறு ஆண்​டு​களுக்கு மேலாக நடை​முறை​யில் இருக்​கும் முறையை தொடர்​வ​தா புதிய முறையை தொடர்​வ​தா என முடி​வெடுக்க வேண்​டி​யுள்​ளது.

தனி நீதிப​தி​யின் உத்​தரவை உறுதி செய்து இரு நீதிப​தி​கள் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ராக கோயில் நிர்​வாகம் தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டுள்​ளது என்​றும், பிர​தான மனு​தா​ரர் தரப்​பில், இரு நீதிப​தி​கள் அமர்வு பிறப்​பித்த உத்​தர​வில் பக்​தர்​களின் உரிமை​களை பாதிக்​கும் வகை​யில் இருக்​கும் சில பகு​தி​களை நீக்​கக்​கோரியும் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்து நிலு​வை​யில் இருப்​ப​தாக​வும் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து விசா​ரணையை ஜூலை 27-க்கு தள்ளி வைத்​தும், நீதி​மன்ற அவம​திப்பு நவடிக்​கைக்​கான தடையை நீட்​டித்​தும் நீதிப​தி​கள் உத்​தர​விட்​டனர்.