惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
量子位
Recent Announcements
Recent Announcements
T
The Blog of Author Tim Ferriss
美团技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Help Net Security
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
宝玉的分享
宝玉的分享
大猫的无限游戏
大猫的无限游戏
V
Visual Studio Blog
博客园 - 聂微东
aimingoo的专栏
aimingoo的专栏
Microsoft Security Blog
Microsoft Security Blog
U
Unit 42
J
Java Code Geeks
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
腾讯CDC
L
LangChain Blog

hindutamil

​பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல் பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல்
தருமபுரி தொகுதியில் தடம் பதிப்பது யார்?
எஸ்.ராஜா செல்லம் · 2026-04-12 · via hindutamil

தமிழக சட்டப் பேரவை தொகுதிகள் வரிசைப் பட்டியலில் 59-வது தொகுதி தருமபுரி. 1951-ம் ஆண்டில் உருவான இந்த தொகுதியில் தருமபுரி, நல்லம்பள்ளி ஆகிய 2 ஒன்றியங்கள், தருமபுரி நகராட்சி மற்றும் 40-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

புகழ்பெற்ற தட்சிணகாசி காலபைரவர் கோயில் இந்த தொகுதியில் அதியமான்கோட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது. தருமபுரி நகரில் நெசவு, தீப்பெட்டி தயாரிப்பு, நெல் அரவை ஆலை, பட்டு நூல் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் உள்ளன. மேலும், புளி பதப்படுத்தும் தொழில் குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.

நகருக்கு அப்பாற்பட்ட பகுதி முழுவதும் விவசாய கிராமங்கள். இங்கு, சிறுதானியங்கள், கொண்டைக் கடலை, கரும்பு, நெல், வெற்றிலை, நிலக்கடலை, எள் உள்ளிட்ட பயிர்களும், சம்பங்கி, சாமந்தி, அரளி உள்ளிட்ட மலர் பயிர்களும், வாசனை திரவிய எண்ணெய் தயாரிப்புக்கான மூலப்பொருளான பார்ம்ரோஸ் தைலபுல் ஆகிய பயிர் சாகுபடிகளும் நடைபெறுகிறது.

பால் வளத்துக்காக பசுக்கள் வளர்ப்பு, வருமானத்துக்காக குரும்பை ஆடு உள்ளிட்ட இன ஆடுகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தொகுதியில் தொப்பூர் அருகே தொப்பையாறு அணை அமைந்துள்ளது.

இந்த அணை மூலம் தருமபுரி மாவட்டத்தில் 2,000 ஏக்கர் நிலமும், சேலம் மாவட்டத்தில் 3,200 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணை ஒருசில ஆண்டுகளில் மட்டுமே நிரம்புகிறது. இதர பகுதிகளில் ஏரி மற்றும் நிலத்தடி நீரின் மூலமே விவசாயம் நடைபெறுகிறது.

தொகுதியில் நிலவும் பிரச்சினைகள்

பாசன நீர்வளத்துக்காக ஏங்கும் தொகுதி தருமபுரி என்பதால் இங்குள்ள விவசாயிகள் ஒகேனக்கல் காவிரி உபரி நீரை நீரேற்றம் செய்து ஏரிகளில் நிறைக்கும் திட்டத்தை பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய’ கதையாக, தருமபுரி நகரின் இட நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஏ.ரெட்டிஅள்ளியில் அண்மையில் திறக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் மக்களுக்கு பல சிரமங்களை உருவாக்கி இருக்கிறது. முறையான கட்டமைப்புகள், முன்னேற்பாடுகள் போன்றவைகளில் கவனம் செலுத்த தவறியதே இப்பிரச்சினைகளுக்கு காரணம்.

மிக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை கோரிக்கைக்கு தற்போது தான் அரசு நிர்வாகம் முதல் செங்கல்லை தொட்டிருக்கிறது. இந்த கோரிக்கையில் படித்த இளையோர் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு அடங்கியிருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பிரிவுகள் மேம்படுத்தப்பட்டுள்ளபோதும் இதர பிரிவுகளையும் நவீனப்படுத்த வேண்டும், படுக்கைகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மலர் சாகுபடி விவசாயிகள் கிடைத்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். மலர் கொள்முதல் நிலையம் அமைத்து குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய அரசு முன்வராதா என்ற ஏக்கம் இவர்களிடம் அழுத்தமாக நிலவுகிறது.

பார்ம்ரோஸ் தைல புல்லில் இருந்து பிரித்தெடுக்கப்படும் வாசனை திரவிய எண்ணெய்யை இடைத்தரகர்கள் தலையீடின்றி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் அரசிடம் எதிர்நோக்குகின்றனர்.

அரசியல் வரலாறு

தருமபுரி சட்டப் பேரவை தொகுதி 18 முறை பொதுத் தேர்தலையும், 1965-ல் இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. கடந்த காலங்களில் காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வெங்கடேஸ்வரன் 1 லட்சத்து 5,630 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட தடங்கம் சுப்பிரமணி 78 ஆயிரத்து 770 வாக்குகள் பெற்றார்.

தற்போது இந்த தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக-வின் மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர், ஏற்கெனவே தருமபுரி நகராட்சி தலைவர், தருமபுரி எம்.எல்.ஏ, தருமபுரி எம்.பி ஆகிய பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை நழுவ விட்டவர்.

மருத்துவர் என்ற முறையில் மக்களிடம் பரிச்சயம், கூட்டணி கட்சிகளின் பலம் ஆகியவற்றுடன் அதிகாலையிலேயே உற்சாகத்துடன் பிரச்சாரத்தை தொடங்கி விடுகிறார். அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

தொகுதியில் அதிமுக-வும் பலம் மிக்க கட்சி. பாமக-வுக்கும் கணிசமாக தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது. இவைதவிர கூட்டணி கட்சிகளின் பலம், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் மனைவி என்ற அடையாளம் ஆகியவற்றுடன் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இவர்கள் தவிர, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தலட்சுமி, தவெக வேட்பாளர் சிவன், பாமக (ராமதாஸ் அணி) வேட்பாளர் சரவணன் ஆகியோரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், பிரதான கட்சிகளின் வேட்பாளர்களான இளங்கோவன், சவுமியா ஆகியோருக்கு இடையில் தான் வலுவான போட்டி நிலவுகிறது. இந்நிலையில் வாக்காளர்களின் தேர்வு மருத்துவர் இளங்கோவனா? மருத்துவர் அன்புமணியின் மனைவி சவுமியாவா? என்பதை அறிய மே-4 வரை காத்திருப்போம்.

வாக்காளர்கள் விவரம்

ஆண் - 1,30,664

பெண் - 1,30,003

மூன்றாம் பாலினத்தவர் - 84

மொத்த வாக்காளர்கள் - 2,60,751