惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

M
MIT News - Artificial intelligence
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
阮一峰的网络日志
阮一峰的网络日志
月光博客
月光博客
博客园 - Franky
腾讯CDC
T
Tailwind CSS Blog
Recent Announcements
Recent Announcements
V
V2EX
N
Netflix TechBlog - Medium
量子位
Jina AI
Jina AI
Y
Y Combinator Blog
The GitHub Blog
The GitHub Blog
G
Google Developers Blog
爱范儿
爱范儿
博客园 - 叶小钗
D
Docker
MongoDB | Blog
MongoDB | Blog
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘எரிவாயு விலை விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மலிவான அரசியல்...
2026-05-02 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: பாஜக அரசின் சாமர்த்திய, அசாத்திய நடவடிக்கைகளினால் மட்டுமே சமையல் எரிவாயு , பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கிறது என பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் வணிக சமையல் எரிவாயு விலை உயர்ந்து விட்டதாக சிலர் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஈரான்-அமெரிக்க யுத்ததையடுத்து இந்தியாவில் வீடுகளுக்கான சமையல் 14.2 கிலோ எரிவாயுவின் தற்போதைய விலை ரூபாய். 900-940 வரை உள்ளது. பிரதம மந்திரி எரிவாயு திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.500-600 வரை கிடைத்து வருகின்றது.

ஈரான் - அமெரிக்க போரையடுத்து வீடுகளுக்கான சமையல் எரிவாயுவின் விலை பல்வேறு நாடுகளில் கிடு கிடுவென உயர்ந்த நிலையில், இந்தியாவில் தான் வீடுகளுக்கான சமையல் எரிவாயு குறைவான விலையில் மக்களுக்கு கிடைக்கப் பெறுகிறது.

வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு, இந்தியாவில் ரூ.900-940 க்கு என்ற நிலையில், ரூபாய் மதிப்பில் அமெரிக்காவில் 1500-2200க்கும், பாகிஸ்தானில் ரூ.1100-1400 க்கும், சீனாவில் 1330-1700க்கும், இங்கிலாந்தில் 1800-2500 க்கும், ஜெர்மனியில் 3500-4500க்கும், ஜப்பான் மற்றும் நார்வேயில் 3500-6000 திற்கும் விற்கப்படுகிறது.

மேலும், மேற்குறிப்பிட்ட நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளை தவிர மற்ற நாடுகளில் கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது என்பதை எதிர்க்கட்சிகள் மறைக்கின்றன. விலையை விட தாராளமாக கிடைக்கிறதா என்பதே மிக முக்கியமானது என்பதை அறிவுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். அதோடு கூட, இந்தியாவில் 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் சமையல் எரிவாயு பயன்படுத்தப்படுகின்ற நிலையில், உலகத்திலேயே அதிக வீடுகளுக்கான சமையல் எரிவாயு இணைப்பை கொண்டுள்ள நாடு இந்தியா என்பதை மறந்து விடக்கூடாது.

இந்நிலையில், நேற்று வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை உயர்த்தப்பட்டது குறித்து கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றன எதிர்க்கட்சிகள். இந்தியாவில் தற்போது ரூபாய் 3000-3300 க்கு விற்கப்படுகிற நிலையில், இங்கிலாந்து- ஜெர்மனி போன்ற நாடுகளில் ரூ.4000-7000 திற்கும், ஜப்பானில் ரு.5000-8000 த்திற்கும், சீனாவில் ரூ.2000-4000 வரையிலும் விற்கப்படுகிறது.

கடந்த 2014 ம் ஆண்டு, இந்திய மக்கள்தொகையில் 11 கோடி குடும்பங்களுக்கு மட்டுமே எரிவாயு இணைப்பு இருந்த நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் தற்போது 33 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு (அதாவது இரு மடங்கு) அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல ஏழை எளிய மக்களை விறகு அடுப்பின், கரி அடுப்பின் கொடுமையிலிருந்தும் மீட்ட மாபெரும் சீர்திருத்தம்.

இந்திய அரசு தன் குடிமக்கள் மீதான சுமையை குறைக்க வீட்டு உபயோக எரிவாயு இணைப்புகளின் விலை சுமையை அரசு ஏற்றுக்கொண்டு சாமான்ய மக்களுக்கு அதிக முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம், உலகெங்கும் எரிவாயு உற்பத்தி நாடுகளை தவிர மற்ற நாடுகளில் கடும் தட்டுப்பாடு, அதிக விலையேற்றம் உள்ள நிலையில், இந்திய அரசு மிக நுணுக்கமாக, தெளிவாக திட்டமிட்டு செயல்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையால் குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக வீட்டு உபயோக எரிவாயுவின் விலை உயர்வை தவிர்த்ததோடு, தட்டப்பாடும் இல்லாத நிர்வாகத்தை அளித்துள்ளது இந்திய அரசு.

ஆனால், வணிக பயன்பாட்டிற்கான எரிவாயுவின் விலை அதிகரித்ததும் ஒட்டுமொத்தமான எரிவாயு விலை அதிகரித்து விட்டது போன்ற மாயையை உருவாக்குவது எதிர்க்கட்சிகளின் சதி மட்டுமல்ல, தீய உள்நோக்கமும் கூட. சாமான்ய மக்களின் துயர் துடைத்த பாஜக அரசின் முயற்சியை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை, ஆனால், உலகெங்கும் உள்ள பிரச்சினையை திறம்பட கையாண்டு வரும் அரசை விமர்சித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் மலிவான அரசியல் யுக்தி கடும் கண்டனத்திற்குரியது.

பாஜக அரசின் சாமர்த்திய, அசாத்திய நடவடிக்கைகளினால் மட்டுமே சமையல் எரிவாயு , பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தவிர்க்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு மற்ற நாடுகளில் உள்ள மக்கள் சந்தித்து வரும் மிகப் பெரும் இடர்பாட்டை, இன்னலை இந்திய மக்கள் சந்தித்திருப்பார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.