惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 司徒正美
Jina AI
Jina AI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 三生石上(FineUI控件)
宝玉的分享
宝玉的分享
MyScale Blog
MyScale Blog
I
InfoQ
爱范儿
爱范儿
Microsoft Security Blog
Microsoft Security Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Stack Overflow Blog
Stack Overflow Blog
T
Tailwind CSS Blog
D
DataBreaches.Net
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
The Blog of Author Tim Ferriss
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
月光博客
月光博客
雷峰网
雷峰网
Recent Announcements
Recent Announcements
量子位
B
Blog RSS Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சட்டப்பேரவையில் பெரும்பான்மையைப் பெற அதிமுக, காங்கிரஸுடன்...
2026-05-06 · via hindutamil

கே.சி.வேணுகோபால், லீமா ரோஸ் மார்ட்டின்

Updated on

2 min read

சென்னை: சட்டப்பேரவையில் பெரும்​பான்​மை​யைப் பெறு​வதற்​காக அதிமுக, காங்கிரஸுடன் தவெக தீவிர பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக 108 இடங்​களி​லும், திமுக கூட்​டணி 73 இடங்​களி​லும், அதி​முக கூட்​டணி 53 இடங்​களி​லும் வெற்றி பெற்​றுள்​ளன. ஆட்சி அமைக்​கத் தேவை​யான 118 இடங்​கள் தவெக​வுக்கு கிடைக்​க​வில்​லை.

தவிர, பெரம்​பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்ள விஜய் இதில் ஏதேனும் ஒரு தொகு​தி​யில் ராஜி​னாமா செய்ய வேண்​டும். இதனால், தவெக பலம் 107 ஆக குறை​யும். இந்த சூழலில், பெரும்​பான்​மையை நிரூபிக்க இன்​னும் 11 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவைப்​படு​வ​தால், அதி​முக​வுடன் தவெக தரப்பு தீவிர பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​வ​தாக தெரி​கிறது.

இதுகுறித்து விவரம் அறிந்த வட்​டாரங்​கள் கூறிய​தாவது: பெரும்​பான்​மையை நிரூபிக்க ஆதரவு கோரி முதலில் காங்கிரஸ் கட்​சி​யுடன்​தான் தவெக பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. அவர்​களிடம் 5 எம்​எல்​ஏக்​கள் மட்டுமே உள்ள நிலை​யில், முஸ்​லிம் லீக் மற்​றும் கம்​யூனிஸ்ட் கட்​சிகளை ஒருங்​கிணைக்க காங்​கிரஸ் முயன்​றது. ஆனால், திமுக கூட்​ட​ணி​யில் இருந்து வில​கி, தவெக​வுக்கு ஆதரவு அளிக்க இக்​கட்​சிகளில் ஒரு​மித்த கருத்து ஏற்​பட​வில்லை என்று கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, அதி​முக​வில் இருந்து 20 எம்​எல்​ஏக்​கள் தவெக​வுக்கு ஆதரவு அளிப்​பார்​களா என்று எஸ்​.பி.வேலுமணி​யிட​மும், பின்​னர் சி.​வி.சண்​முகத்​திட​மும் செங்​கோட்​டையன் தரப்​பில் பேச்​சு​வார்த்தை நடந்​த​தாககூறப்​படு​கிறது. அமைச்​சர் பதவி வழங்​கு​வ​தாக​வும் வாக்​குறுதி அளித்​த​தாக தெரி​கிறது.

இதை அறிந்த பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி தனது ஆதர​வாளர்​களு​டன் தீவிர ஆலோ​சனை​யில் ஈடு​பட்​டுள்​ளார். அதி​முக சார்​பாகவே நேரடி​யாக தவெக​வுக்கு ஆதரவு தரலாம் என்ற முடிவுக்கு அவர் வந்​துள்​ள​தாக கூறப்​படு​கிறது. ஆனால், பிரச்​சா​ரத்​தின்​போது பாஜகவை தங்​கள் கொள்கை எதிரி என்று விஜய் கூறிவந்​தார்.

அப்​படி இருக்க, பாஜக​வுடன் கூட்​ட​ணி​யில் இருந்​து​கொண்டே தவெகவை ஆதரிப்​பது சரி​யாக இருக்​காது என்​ப​தால், கட்​சி​யின் புதிய எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்தை பழனி​சாமி இன்று கூட்​டி​யுள்​ளார். தவெக​வுக்கு ஆதரவு தரு​வது தொடர்​பாக இக்​கூட்​டத்​தில் முக்​கிய முடிவு எடுக்​கப்​படும்​ என தெரிகிறது.

காங்கிரஸுடன் பேச்சு: இதற்​கிடையே, தமிழகத்​தில் ஆட்​சி​யமைக்க விஜய் தங்​களிடம் ஆதரவு கோரி​யுள்​ள​தாக அகில இந்​திய காங்​கிரஸ் அமைப்​புப் பொதுச் செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால் தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் ஆட்​சி​யமைக்க ஆதரவு கோரி இந்​திய தேசிய காங்​கிரஸிடம் தவெக தலை​வர் விஜய் கோரிக்கை விடுத்​துள்​ளார். தமிழகத்​தில் அரசி​யலமைப்பை அதன் உணர்​வின்​படி பாது​காக்க உறு​திபூண்ட ஒரு மதச்​சார்​பற்ற அரசாங்​கத்​துக்கே மக்​கள் அதி​காரம் அளித்​துள்​ளனர். இதில் காங்​கிரஸ் தெளி​வாக இருக்​கிறது.

எந்த வகை​யிலும் பாஜக​வும், அதன் கைப்​பாவை​களும் தமிழக அரசை நடத்​து​வதை காங்​கிரஸ் அனு​ம​திக்​காது என்​ப​தி​லும் உறு​தி​யாக உள்​ளது. அதன்​படி, தேர்​தல் தீர்ப்​பில் பிர​திபலித்​துள்ள மாநிலத்​தின் உணர்​வு​களைக் கருத்​தில் கொண்​டு, விஜய்​யின் கோரிக்கை மீது இறுதி முடிவு எடுக்​கு​மாறு தமிழக காங்​கிரஸ் கமிட்​டிக்கு காங்​கிரஸ் தலைமை உத்​தர​விட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

அதிமுகவுடன் பேச்சு: இந்த சூழலில், திருச்சி லால்​குடி தொகு​தி​யில் அதிமுக சார்பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மார்ட்​டின் சென்னையில் பழனி​சாமியை சந்​தித்து வாழ்த்து பெற்​றார். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் லீமா ரோஸ் கூறிய​தாவது: லால்​குடி​யில் நான் (அதி​முக), வில்​லி​வாக்​கத்​தில் எனது மரு​மகன் ஆதவ் அர்​ஜுனா (தவெக), புதுச்​சேரி காம​ராஜ் நகரில் எனது மகன் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் (லஜக) என்று ஒரே குடும்​பத்​தில் 3 பேர் வெற்றி பெற்று சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஆகி​யிருப்​பது மகிழ்ச்​சியை கொடுக்​கிறது.

இது இறைவன் கொடுத்த பரிசு ஆகும். எங்​கள் குடும்​பத்தை சேர்ந்த மூன்று பேரும் வெற்றி பெறு​வோம் என்று நாங்​கள் எதிர்​பார்க்​க​வில்​லை. இது எங்​களுக்கு இன்ப அதிர்ச்​சி​யாக அமைந்​துள்​ளது. தவெக​வுக்கு பெரும்பான்மை இல்​லாத​தால், ஆதரவு அளிப்​பது தொடர்​பாக அதி​முக - தவெக இடையே பேச்​சு​வார்த்தை நடை​பெற்று வரு​கிறது. விரை​வில் பேச்​சு​வார்த்தை நல்​லபடி​யாக முடி​யும் என்று நினைக்​கிறேன்.இவ்​வாறு அவர்​ கூறினார்.

அதிமுக ஆதரவு இல்லை? - இந்த நிலையில், பழனிசாமியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி. இந்த சூழலில் தவெக ஆட்சி அமைக்க அதிமுக ஆதரவு அளிக்காது’’ என்றார்.

பிரதமர், ராகுலுக்கு நன்றி: இதற்​கிடையே, தேர்​தல் வெற்​றிக்​காக வாழ்த்​திய தலை​வர்​களுக்கு விஜய் தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நன்றி தெரி​வித்​துள்​ளார். அதில் அவர் கூறி​யுள்​ள​தாவது: பிரதமர் மோடி​யின் வாழ்த்​துகளுக்கு நன்​றி. மக்​களின் நலனே எங்​களது ஒரே இலக்​கு.

அரசி​யல் வேறு​பாடு​களுக்கு அப்​பாற்​பட்​டு, தமிழகத்​தின் முன்​னேற்​றம் மற்​றும் தமிழக மக்​களின் நலனில் நாங்​கள் முழு கவனம் செலுத்​து​வோம். இந்த முயற்​சி​யில் மத்​திய அரசின் ஆதரவை நாங்​கள் எதிர்​நோக்​கு​கிறோம்.

மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்​தி​யின் தொலைபேசி அழைப்பு மற்​றும் அன்​பான வாழ்த்​துகளுக்கு எனது மனமார்ந்த நன்​றி. மக்​கள் சேவை​யில் சிறந்து விளங்​கு​வ​தி​லும், கூட்டு ஒத்​துழைப்பு அவசி​ய​மான நமது மாநிலத்​தின் பண்​பாட்டு விழு​மி​யங்​களைப் பாது​காப்​ப​தி​லும் உறு​தி​யுடன் இருப்​போம். அரசி​யலுக்கு அப்​பாற்​பட்​டு, தமிழக மக்​களின் நலனுக்கே நாங்​கள் முன்​னுரிமை அளிப்​போம். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.