惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
腾讯CDC
博客园 - 司徒正美
A
About on SuperTechFans
H
Help Net Security
J
Java Code Geeks
C
Check Point Blog
B
Blog RSS Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
MongoDB | Blog
MongoDB | Blog
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
MyScale Blog
MyScale Blog
V
Visual Studio Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
F
Fortinet All Blogs
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
GbyAI
GbyAI
博客园 - 【当耐特】
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு விஜய் அஞ்சலி
செய்திப்பிரிவு · 2026-05-07 · via hindutamil

Updated on: 

ராஜஸ்​தானில் கார் விபத்​தில் உயி​ரிழந்த பிரபல தயாரிப்​பாளர் ஆர்.பி.சவுத்​ரி​யின் உடல் சென்னை வந்​தது. அவருடைய இறு​திச் சடங்கு இன்று காலை நடக்​கிறது. சூப்​பர் குட் பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறு​வனம் சார்​பில் தமிழ், தெலுங்​கு, மலை​யாளம், கன்னடம், இந்​தி​யில் பல படங்​களைத் தயாரித்​தவர் ஆர்​.பி. சவுத்ரி. அவருடைய முழு பெயர் ரத்​தன் லால் பகத்​ராம் சவுத்​ரி.

இவர், தனது சொந்த ஊரான ராஜஸ்​தான் மாநிலம் உதய்​பூருக்கு அவ்​வப்​போது சென்று வரு​வது வழக்​கம். சமீபத்​தில் அங்கு சென்ற அவர், செவ்​வாய்க்​கிழமை காரில் சென்​று​கொண்​டிருந்த போது எதிர்​பா​ராத ​வித​மாக விபத்து ஏற்​பட்​டது. அதில் சிக்​கிய அவரை அக்கம்​பக்​கத்​தினர் மீட்டு உடனடி​யாக மருத்​து​வ​மனைக்​குக் கொண்டு சென்​றனர்.

அவருக்கு உடலில் எந்த காய​மும் ஏற்படவில்​லை. விபத்து ஏற்பட்ட அதிர்ச்​சி​யில் திடீரென மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் அவர் உயிரிழந்ததாக மருத்​து​வர்​கள் தெரி​வித்​தனர். இதையடுத்து அவருடைய உடல் நேற்று சென்​னைக்​குக் கொண்டு வரப்​பட்டு பொது​மக்​கள் மற்​றும் திரை​யுல​கினர் அஞ்​சலிக்​காக மயிலாப்பூரில் உள்ள அவருடைய இல்​லத்​தில் வைக்​கப்​பட்​டது.

அங்கு அவர் உடலைக் கண்டு குடும்​பத்​தினர் கதறி அழுதனர். நடிகரும் தவெக தலை​வரு​மான விஜய், மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தி​னார். நடிகர் ஜீவாவை கட்​டியணைத்து ஆறு​தல் கூறினார். பல்​வேறு நடிகர், நடிகைகள், இயக்​குநர்​கள் ஆர்.பி.சவுத்ரி உடலுக்கு நேரில் அஞ்​சலி செலுத்​தினர். நடிகர்​கள் ரஜினி​ காந்த், கமல்​ஹாசன் உள்பட பலர் இரங்​கல் தெரிவித்துள்ளனர்.

தமிழில், 1990-களில் ஏராள​மான புதிய இயக்​குநர்​களை​யும் நடிகர், நடிகைகளை​யும் அறி​முகப்​படுத்​தி​ய​வர் ஆர்​.பி.சவுத்​ரி. விக்​ரமன் அறி​முக​மான ‘புது​ வசந்​தம்’, கே.எஸ்​.ரவி​கு​மார் அறி​முக​மான ‘புரியாத புதிர்’, சரத்​கு​மார் நடித்த ‘சேரன் பாண்​டியன்’, ‘நாட்டாமை’, ‘சூர்​ய​ வம்​சம்’, விஜய் நடித்த ‘பூவே உனக்​காக’, ‘லவ் டுடே’, ‘துள்​ளாத மனமும் துள்​ளும்’, ‘திருப்​பாச்​சி’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்​களைத் தயாரித்​துள்​ளார்.

இப்​போது, விஷால் இயக்​கி, நடிக்​கும் ‘மகுடம்’ படத்​தைத் தயாரித்து வந்​தார். இந்​நிறு​வனத்​தின் 100-வது திரைப்​படத்தை விஜய் நடிப்​பில் தயாரிக்க இருப்​ப​தாக ஆர்​.பி.சவுத்ரி அறி​வித்​திருந்​தார். அது நடக்கவில்​லை. பின்​னர், ‘சூர்​ய ​வம்​சம்’ படத்​தின் 2-வது பாகத்​தைத் தயாரிக்க இருந்​தார்.

மறைந்த ஆர்​.பி.சவுத்​ரிக்கு சுரேஷ், ஜீவன், ஜித்​தன் ரமேஷ், ஜீவா ஆகிய மகன்​கள் உள்​ளனர். இதில் ஜித்​தன் ரமேஷ், ஜீவா ஆகியோர் படங்​களில் நடித்​து​ வருகின்​றனர். ஆர்​.பி.சவுத்​ரி​யின் இறு​திச் சடங்கு கிருஷ்ணாம்பேட்​டை​யில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.