惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
D
Docker
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
博客园 - Franky
B
Blog RSS Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
L
LangChain Blog
量子位
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
小众软件
小众软件
N
Netflix TechBlog - Medium
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Security Blog
Microsoft Security Blog
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேற்கு ஆசியாவில் கலையும் போர் மேகம் - எப்போது தீரும் எரிப...
வெற்றி மயிலோன் · 2026-06-15 · via hindutamil

Updated on: 

புது டெல்லி: ஈரான் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதற்கு அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், போர் மேகம் கலைந்தாலும் கூட கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் சிக்கல்கள் தீர இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சுமார் மூன்று மாத காலமாக நிலவி வந்த போர் முடிவுக்கு வருகிறது. இரு தரப்புக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது. வரும் வெள்ளிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதி ஒப்பந்தம் இறுதியான சூழலில் லெபனான் உள்ளிட்ட அனைத்து போர் முனைகளிலும் ராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக கப்பல் போக்குவரத்துக்கு திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டாலும், உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு எரிபொருள் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க சில மாதங்கள் ஆகலாம் என்று எரிசக்தி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணிப்பதில் இருக்கும் பாதுகாப்பு குறித்த சந்தேகங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் எண்ணெய் விநியோக போக்குவரத்து சீராக தாமதமாகும் எனத் தெரிகிறது.

உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள் பாரசீக வளைகுடாவில் மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தேங்கிக் கிடக்கின்றன. இந்தக் கப்பல்கள் முதல் கட்டமாக ஹார்முஸ் வழியாக பயணத்தை தொடங்கும்.

இதுகுறித்து எஸ்&பி குளோபல் எனர்ஜியின் எரிபொருள் மற்றும் சுத்திகரிப்பு ஆராய்ச்சிப் பிரிவின் உலகளாவிய தலைவர் டேனியல் எவன்ஸ் கூறும்போது, “ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராவதற்கும், எண்ணெய் நிறுவனங்கள் இயங்க தேவையான கட்டமைப்புகள் மற்றும் பணியாளர்கள் தயாராவதற்கும் சில காலம் எடுக்கும்.

கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கும்போது, ​​தேங்கிக் கிடக்கும் கப்பல்கள் முதல்கட்டமாக வெளியேறும். பின்னர் புதிய டேங்கர் கப்பல்கள் உள்ளே வந்து எண்ணெயை ஏற்றிக்கொள்ளும். ஒரு கப்பலை உள்ளே கொண்டு வருவதற்கும், சரக்கு ஏற்றுவதற்கும், வெளியே கொண்டு செல்லுதலுக்கும் போதுமான கால அவகாசம் தேவை.

எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மெதுவாகவே நகரும். எனவே, ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து தொலைதூர நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்த நாடுகளின் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கச்சா எண்ணெயை விநியோகித்து, பின்னர் எரிபொருள் மக்களிடம் சென்றடைய சில மாதங்கள் ஆகும்" என்று கூறினார்.

அமெரிக்க - ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு திங்கட்கிழமை காலை கச்சா எண்ணெய் விலை சரிந்தது. 'பிரெண்ட்' கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 3.45 டாலர் குறைந்து 83.89 டாலராகவும், அமெரிக்காவின் முக்கிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 4.03 டாலர் குறைந்து 80.85 டாலராக இருந்தது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை சுமார் 70 டாலர் அளவில் இருந்தது.

இந்நிலையில், தற்போது மேற்கு ஆசியாவில் போர் மேகம் கலைந்தாலும் கூட, மீண்டும் 70 டாலருக்கு கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு சில மாதங்கள் ஆகக் கூடு என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.