惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

美团技术团队
B
Blog RSS Feed
博客园_首页
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Google DeepMind News
Google DeepMind News
D
Docker
Blog — PlanetScale
Blog — PlanetScale
M
MIT News - Artificial intelligence
C
Check Point Blog
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
大猫的无限游戏
大猫的无限游戏
量子位
The GitHub Blog
The GitHub Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 【当耐特】
Vercel News
Vercel News
P
Proofpoint News Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
V
V2EX
博客园 - 司徒正美

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கரூரில் மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த இளைஞர் சென்...
2026-04-30 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: கரூரில் மூதாட்டியை கொன்​று, நகைகளை திருடி ரயி​லில் தப்​பிய இளைஞர் சென்னை சென்ட்​ரலில் ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர்.

கரூர் மாவட்​டம், வெள்​ளியணை காவல் நிலைய எல்​லைக்​குட்​பட்ட சாலைப்​பட்​டி​யில் தனி​யாக வசித்து வந்​தவர் தாயாரம்​மாள் (79). கடந்த 26-ம் தேதி, திண்​டுக்​கல் மாவட்​டம், குஜிலி​யம்​பாறை லந்​தக்​கோட்​டை​யில் வசிக்​கும் தனது மகள் மனோரஞ்​சிதத்​துடன் செல்​போனில் பேசி​விட்​டு, திண்​ணை​யில் கட்​டிலில் படுத்து தூங்​கி​னார்.

மறு​நாள் காலை, மூதாட்​டி​யின் உறவினர் அருணாச்​சலம் அந்த வழி​யாக சென்​றார். அதி​காலை 4 மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளை செய்​யும் தாயாரம்​மாள் காலை 6.45 மணி ஆகி​யும் எழாத​தால் சந்​தேகம் அடைந்​தார்.

இதையடுத்​து, வீட்டு வாசல் கேட்டை திறந்து உள்ளே சென்று பார்த்​த​போது, கை, கால்​கள், வாய் ஆகியவை துணி​யால் கட்​டப்​பட்டு இறந்த நிலை​யில் தாயாரம்​மாள் கிடந்​தார்.

இதுகுறித்​து, தாயாரம்​மாளின் மகள் மனோரஞ்​சிதத்​துக்கு அருணாச்​சலம் தகவல் தெரி​வித்​தார். மனோரஞ்​சிதம் சாலப்​பட்​டிக்கு விரைந்து வந்​து, தாயாரின் சடலத்தை பார்த்து அதிர்ச்​சி​யடைந்​தார்.

மேலும், அவர் அணிந்​திருந்த அரை சவரன் தோடு மற்​றும் கால் சவரன் மூக்​குத்தி ஆகிய​வற்றை காண​வில்​லை. இந்த கொலை தொடர்​பாக மனோரஞ்​சிதம், வெள்​ளி​யானை காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தார்.

இதன்​பேரில், போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தி, செல்​போன் சிக்​னல்​களை ஆய்வு செய்​த​தில் மதுரை மாவட்​டம், திருப்​பரங்​குன்​றத்தை சேர்ந்த பாண்​டீஸ்​வரன் (19) என்​பவர் தான் கொலை செய்து விட்டு தப்​பியது தெரிந்​தது.

அவரது செல்​போன் எண்ணை ஆய்வு செய்த போது, கேரள மாநிலம் ஆலப்​புழா​வில் இருந்​து, ஜார்​கண்ட் மாநிலம் தன்​பாத் செல்​லும் விரைவு ரயி​லில் பயணம் செய்​வது தெரிய​ வந்​தது.

இதையடுத்​து, கரூர் மாவட்ட போலீஸார், சென்னை சென்ட்​ரல் ரயில்வே போலீ​ஸாருக்கு தகவல் அளித்​தனர். அதன்​பேரில், தன்​பாத் விரைவு ரயில் நேற்​று​முன்​தினம் இரவு 10 மணிக்கு சென்ட்​ரலுக்கு வந்​தவுடன், உரிய அடை​யாளம் மற்​றும் போட்​டோவை வைத்​து, பாண்​டீஸ்​வரனை ரயில்வே போலீ​ஸார் கைது செய்​தனர்.

தொடர்ந்​து, வெள்​ளியணை போலீ​ஸாருக்கு தகவல் தெரி​வித்​தனர். சென்​னைக்கு விரைந்த வெள்​ளியணை போலீ​ஸார்​, கொலை​யாளி பாண்டீஸ்வரனை கைது செய்து விசாரணைக்காக கரூர் அழைத்துச் சென்றனர்.