惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
H
Help Net Security
腾讯CDC
宝玉的分享
宝玉的分享
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
L
LangChain Blog
爱范儿
爱范儿
T
The Blog of Author Tim Ferriss
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
MyScale Blog
MyScale Blog
Engineering at Meta
Engineering at Meta
N
Netflix TechBlog - Medium
D
Docker
V
V2EX
Last Week in AI
Last Week in AI
G
Google Developers Blog
IT之家
IT之家
C
Check Point Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
人人都是产品经理
人人都是产品经理
博客园 - 叶小钗
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இன்று பலப்பரீட்சை: தோல்வியில் ...
2026-05-03 · via hindutamil

Updated on

2 min read

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகம​தா​பாத்​தில் உள்ள நரேந்​திர மோடி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் - பஞ்​சாப் கிங்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி 8 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, ஒரு தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 13 புள்​ளி​களை குவித்து பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளது. தொடர்ச்​சி​யாக வெற்​றிகளை குவித்து வந்த பஞ்​சாப் அணிக்கு கடந்த ஆட்​டத்​தில் ராஜஸ்​தான் அணி முட்​டுக்​கட்டை போட்​டிருந்​தது.

இந்த ஆட்​டத்​தில் 223 ரன்​கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் அணி 4 பந்​துகளை மீதம் வைத்து வெற்றி கண்​டிருந்​தது. இதன் மூலம் பஞ்​சாப் அணி​யின் பந்து வீச்சு பலவீனங்​கள் வெளிப்​பட்​டன. நடப்பு சீசனில் பஞ்​சாப் அணி​யின் பந்​து​வீச்​சு, அந்த அணி​யின் பேட்​டிங்​கிற்கு இணை​யாக சீரான தன்​மை​யுடன் இல்​லை. அணியின் ஆக்​ரோஷ​மான பேட்​டிங் அணுகுமுறை பல நேரங்​களில் பந்​து​வீச்​சுப் பிரி​வின் பலவீனங்​களை மறைத்​தது.

வெற்​றிகளை பெற்ற ஆட்​டங்​களில் கூட, பஞ்​சாப் அணி​யின் பந்​து​வீச்​சாளர்​கள் சில நேரங்​களில் எதிரணி​களைத் தாராள​மாக ரன்​கள் குவிக்க அனு​ம​தித்​தனர். சமீபத்​திய தோல்​வி​யானது அந்த பலவீனங்​களை மீண்​டும் ஒரு​முறை அம்​பலப்​படுத்​தி​யுள்​ளது.

இன்​னிங்​ஸின் இறுதி ஓவர்​களில் சிறப்​பாகச் செயல்பட முடி​யாத அவர்​களின் பலவீனம், பேட்​ஸ்​மேன்​களுக்​குக் கூடு​தல் அழுத்​தத்​தைக் கொடுத்​துள்​ளது. இதனால் அவர்​கள் அடிக்​கடி பெரிய இலக்​கு​களைத் துரத்த வேண்​டிய நிலை உரு​வாகிறது. அதேவேளை​யில் முதலில் பேட் செய்​தால் சராசரிக்​கும் அதி​க​மான ரன்​களை குவிக்க வேண்​டிய நிலைக்​குத் தள்​ளப்​படு​கிறார்​கள். இதனால் பஞ்​சாப் அணி பந்​து​வீச்​சில் இன்​னும் துல்​லிய​மான செயல்​பாடு​களை​யும் தெளி​வான திட்​டங்​களை​யும் கொண்​டிருக்க வேண்​டும்.

பஞ்​சாப் அணி​யின் ஃபீல்​டிங்​கும் கவலைக்​குரிய​தாக மாறி உள்​ளது. ஏராள​மான கேட்​சுகளைத் தவற​விடு​வது மற்​றும் ஃபீல்​டிங்​கில் செய்​யும் தவறுகள் அணிக்கு பின்​னடை​வாக அமை​கின்​றன. இதனால் இந்த விஷ​யத்​தில் அந்த அணி கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும்.

அதேவேளை​யில் பேட்​டிங் என்​பது பஞ்​சாப் அணி​யின் மிகப்​பெரிய பலமாகத் தொடர்​கிறது. தொடக்க ஆட்​டக்​காரர்​களான பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன் சிங் ஆகியோர் அணிக்கு வலு​வான அடித்​தளத்தை அமைத்​துக் கொடுக்​கின்​றனர். நடு​வரிசை​யில் கூப்​பர் கானொலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பெரிய இலக்​கு​களை நிர்​ண​யிக்​க​வும் அல்​லது கடின​மான இலக்​கு​களைத் துரத்தி வெற்றி பெற​வும் தேவை​யான மட்​டைவீச்சை வழங்கி வரு​கின்​றனர். இவர்​கள் மீண்​டும் ஒரு முறை எதிரணி​யின் பந்து வீச்​சாளர்​களுக்கு நெருக்​கடி கொடுக்​கக்​கூடும்.

ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி 9 ஆட்​டங்​களில் விளை​யாடி 5 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 10 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 5-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி கடைசி​யாக ஆர்​சிபி அணியை 4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. இந்த ஆட்​டத்​தில் ஆர்​சிபி அணி​யின் பேட்​டிங் வரிசையை குஜ​ராத் அணி​யின் பந்​து​வீச்​சாளர்​கள் பெரிய அளவில் ரன் குவிக்​க​வி​டா​மல் கட்​டுப்​படுத்​தி​யிருந்​தனர்.

ஆர்​சிபி அணியை 155 ரன்​களுக்​குள் மட்​டுப்​படுத்தி கட்​டுப்​கோப்​பாக செயல்​பட்டு இருந்​தனர். பந்​துகளின் நீளத்தை சரி​யாகக் கணித்து வீசுவ​தி​லும், முக்​கிய​மான நேரங்​களில் திட்​டங்​களைச் செயல்​படுத்​து​வ​தி​லும் முன்​னேற்​றம் கண்​டிருந்​தனர். இந்த வகை​யில் இன்​றைய ஆட்​டத்​தி​லும் பஞ்​சாப் அணி​யின் பேட்​டிங் வரிசைக்கு குஜ​ராத் அணி​யின் பந்​து​வீச்​சாளர்​கள் நெருக்​கடி கொடுக்க முயற்​சிக்​கக்​கூடும்.

பேட்​டிங்கை பொறுத்​தவரை​யில் குஜ​ராத் அணி பெரும்​பாலும் சாய் சுதர்​சன், ஷுப்​மன் கில், ஜாஸ் பட்​லர் ஆகியோரை சார்ந்தே உள்​ளது. வாஷிங்​டன் சுந்​தர் நடு​வரிசை​யில் நம்​பிக்கை அளிக்​கும் வகை​யில் விளை​யாடி வரு​கிறார். ஆனால் ஷாருக்​கான், ராகுல் டெவாட்​டியா போன்ற ஃபினிஷர்​கள் இன்​னும் நிலை​யான தாக்​கத்தை ஏற்​படுத்​த​வில்​லை.

அதேவேளை​யில் கடந்த ஆட்​டத்​தில் ஆல்​ர​வுண்​ட​ரான ஜேசன் ஹோல்​டர் பந்​து​வீச்​சில் சிறப்​பாக செயல்​பட்டு வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். ஆர்​சிபி அணிக்கு எதி​ராக அவர், 4 ஓவர்​களை வீசி 29 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து 2 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யிருந்​தார். மேலும் பீல்​டிங்​கில் 3 முக்​கிய கேட்ச்​களை எடுத்​திருந்​தார். அவரிடம் இருந்து மேலும் ஓர் உயர்​மட்ட செயல்திறன் வெளிப்​படக்​கூடும்​.