惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
IT之家
IT之家
Recent Announcements
Recent Announcements
B
Blog
D
Docker
V
V2EX
GbyAI
GbyAI
L
LangChain Blog
博客园 - Franky
U
Unit 42
T
The Blog of Author Tim Ferriss
A
About on SuperTechFans
博客园 - 【当耐特】
Google DeepMind News
Google DeepMind News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Vercel News
Vercel News
博客园_首页
D
DataBreaches.Net
人人都是产品经理
人人都是产品经理
Y
Y Combinator Blog
量子位
Blog — PlanetScale
Blog — PlanetScale
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சமனில் முடிந்த கத்தார் - சுவிட்சர்லாந்து ஆட்டம் | FIFA WC...
செய்திப்பிரிவு · 2026-06-15 · via hindutamil

Updated on: 

சான் பிரான்சிஸ்கோ: உலகக் கோப்பை கால்பந்து போட்​டி​யின் பி பிரி​வில் கத்தார், சுவிட்சர்லாந்து அணி​கள் மோதிய ஆட்​டம் டிரா​வில் முடிவடைந்​தது.

இந்த ஆட்​டம் சான்​பி​ரான்​சிஸ்​கோ​விலுள்ள லெவிஸ் மைதானத்​தில் நேற்று அதி​காலை 12.30 மணிக்கு நடை​பெற்​றது. ஆட்​டம் தொடங்​கிய 17-வது நிமிடத்​திலேயே சுவிட்​சர்​லாந்து வீரர் பிரீல் எம்​போலா பெனால்டி வாய்ப்பு மூலம் கோலடித்து அணியை 1-0 என்ற கணக்​கில் முன்​னிலை பெறச் செய்​தார்.

சுவிட்​சர்​லாந்து வீரர் ரெமோ ஃபுரூலரிடம், கத்​தார் கோல்​கீப்​பர் மமூத் அபு​னாடா செய்த ஃபவுல் காரண​மாக பெனல்டி வாய்ப்பு சுவிட்​சர்​லாந்​துக்​குக் கிடைத்​தது. இதை அரு​மை​யாக பயன்​படுத்தி கோலடித்​தார் பிரீல் எம்​போலா.

முதல் பாதி வரை 1-0 என்ற கணக்​கில் சுவிட்​சர்​லாந்து முன்னிலையிலேயே இருந்​தது. 2-வது பாதி​யில் கத்​தார் அணி வீரர்​கள் கோலடிக்க தீவிர முயற்சி செய்​தனர். ஆனால் அவர்​களது முயற்சி வெற்றி பெற வில்​லை. 2-வது பாதி முடிவடைந்த நிலையில் காயங்​களால் ஏற்​பட்ட இழப்​பீடுக்கு வழங்​கப்​பட்ட கூடுதல் நேரத்​தில் கத்​தார் கேப்​டன் பவுலேம் கவுக்கி கோல் வலை அருகே வந்​தார்.

அப்​போது கத்​தா​ரின் ஹோம் அல் அமீன் கிராஸ் செய்து கொடுத்த பந்தை தலை​யால் முட்டி கோலாக்க கவுக்கி முயன்றார். ஆனால், அவருக்கு முன் இருந்த சுவிட்​சர்​லாந்து வீரர் மிரோ முஹைமின் தலை​யில் பந்து பட்டு சுய கோலாக மாறியது. மிரோ முஹைம் அடித்த சுய கோலால் ஆட்​டம் 1-1 என்​ற கணக்கில்​ டிரா​வில்​ முடிவடைந்​தது.