惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Y
Y Combinator Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园_首页
量子位
V
Visual Studio Blog
博客园 - Franky
宝玉的分享
宝玉的分享
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 【当耐特】
罗磊的独立博客
小众软件
小众软件
V
V2EX
GbyAI
GbyAI
B
Blog RSS Feed
博客园 - 三生石上(FineUI控件)
大猫的无限游戏
大猫的无限游戏
有赞技术团队
有赞技术团队
月光博客
月光博客
Recent Announcements
Recent Announcements
雷峰网
雷峰网
F
Fortinet All Blogs
M
MIT News - Artificial intelligence

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பாஜக அரசின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மே. வங்கத்துக்கு...
2026-04-28 · via hindutamil

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், பரக்பூரில் நேற்று நடைபெற்ற பாஜக பிரச்சார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது வழிநெடுக ஏராளமானோர் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Updated on

2 min read

கொல்கத்தா: ​​பாஜக அரசின் பதவி​யேற்பு விழா​வில் பங்​கேற்க மேற்​கு​வங்​கத்​துக்கு திரும்பி வரு​வேன் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார்.

மேற்​கு​வங்​கத்​தில் இரு கட்​டங்​களாக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. கடந்த 23-ம் தேதி முதல் கட்​டத் தேர்​தல் நடை​பெற்​றது. நாளை 2-ம் கட்ட தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி மேற்​கு​வங்​கம் முழு​வதும் 16-க்​கும் மேற்​பட்ட பொதுக்​கூட்​டங்​களில் பங்​கேற்று தீவிர பிரச்​சா​ரம் செய்​துள்​ளார்.

தேர்​தல் பிரச்​சா​ரத்​தின் இறுதி நாளான நேற்று மேற்​கு​வங்​கத்​தின் வடக்கு 24 பர்​கானா மாவட்​டம், பரக்​பூரில் நடை​பெற்ற பாஜக பொதுக்​கூட்​டத்​தில் அவர் பேசி​ய​தாவது: மேற்​கு​வங்​கத்​தின் பல்​வேறு பகு​தி​களில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டேன். எனது பிரச்​சார பயணம், சாலை ஊர்​வலம் ஆகியவை புதிய யாத்​திரை போன்றே அமைந்​தது.

கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி​யில் அயோத்​தி​யில் ராமர் கோயில் திறக்​கப்​பட்​டது. அப்​போது 11 நாட்​கள் விரதம் இருந்து தென்​னிந்​தியா உட்பட பல்​வேறு கோயில்​களில் வழி​பாடு நடத்​தினேன். தற்​போது அதே உணர்​வுடன் மேற்​கு​வங்​கத்​தில் பிரச்​சா​ரத்தை நிறைவு செய்​கிறேன். பண்​டைய காலத்​தில் அங்கா (பிஹார்), பங்கா (மேற்​கு​வங்​கம்), கலிங்கா (ஒடி​சா) ஆகியவை நமது நாட்​டின் 3 முக்​கிய பிரதேசங்​களாக இருந்​தன.

தற்​போது வளர்ச்​சி​யடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இந்த 3 மாநிலங்​களும் முக்​கிய பங்​களிப்பை வழங்க வேண்​டியது அவசி​யம். பிஹார், ஒடி​சா​வில் பாஜக ஆட்சி நடத்தி வரு​கிறது. இதே​போல மேற்​கு​வங்​கத்​தில் அதிக இடங்​களைக் கைப்​பற்றி பாஜக ஆட்சி அமைக்​கும். புதிய பாஜக அரசின் பதவி​யேற்பு விழா​வில் பங்​கேற்க மீண்​டும் மேற்​கு​வங்​கத்​துக்கு திரும்பி வரு​வேன்.

மேற்​கு​வங்​கத்​தில் 15 ஆண்​டு​களாக திரிண​மூல் காங்​கிரஸ் ஆட்சி நடத்தி வரு​கிறது. ஆனால் மாநிலம் இன்​ன​மும் பின்​தங்​கிய நிலை​யிலேயே இருக்​கிறது. பாஜக ஆட்சி அமைக்​கும்​போது மாநிலத்​தின் பொருளா​தார வளர்ச்சி வேகம் பெறும். மாநில அரசு ஊழியர்​களுக்கு 7-வது ஊதிய கமிஷன் பரிந்​துரைகள் அமல் செய்​யப்​படும். மாநில அரசு துறை​களில் காலி​யிடங்​கள் வெளிப்​படைத்​தன்​மை​யுடன் நிரப்​பப்​படும்.

மாநிலம் முழு​வதும் வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கப்​படும். குறிப்​பாக வேலை​வாய்ப்பை அதி​கரிக்க அறி​வாற்​றல் சார்ந்த துறை​களுக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படும். இதன்​மூலம் மேற்​கு​வங்க இளைஞர்​கள் வேலை தேடி வெளி​மாநிலங்​களுக்கு செல்ல வேண்​டிய அவசி​யம் இருக்​காது. அரசு நிர்​வாகத் திறன் மேம்​படுத்​தப்​படும். தலைநகர் கொல்​கத்தா மெட்ரோ ரயில் வழித்​தடம் விரி​வாக்​கம் செய்​யப்​படும். மாநிலத்​தின் உள்​கட்​டமைப்​பு​கள் மேம்​படுத்​தப்​படும்.

மேற்​கு​வங்​கத்தை சேர்ந்த மறைந்த மூத்த தலை​வர் ஷியாம பிர​சாத் முகர்​ஜி​யின் கனவை மத்​தி​யில் ஆளும் பாஜக அரசு நிறைவேற்றி உள்​ளது. அவரது விருப்​பப்​படி 370-வது சட்​டப்​பிரிவு (காஷ்மீர் சிறப்பு அந்​தஸ்​து) நீக்​கப்​பட்​டது. மேற்​கு​வங்​கத்​தின் சட்​டம், ஒழுங்கு கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. மாநில அரசின் அனைத்து துறை​களி​லும் ஊழல் வியாபித்து பரவி​யிருக்​கிறது. வன்​முறை இல்​லாத, ஊழல் இல்​லாத மேற்​கு​வங்​கத்தை உரு​வாக்க மக்​கள் தயா​ராகி விட்​டனர். இந்த வாக்​குறு​தியை பாஜக கண்​டிப்​பாக நிறைவேற்​றும்.

பெண்​களின் கல்​வி, வரு​வாய், சுகா​தா​ரம், பாது​காப்​பை, கண்​ணி​யத்தை பாது​காக்க பல்​வேறு திட்​டங்​கள் நிறைவேற்​றப்​படும். குறிப்​பாக மத்​திய அரசின் அனைத்து திட்​டங்​களும் மேற்​கு​வங்​கத்​தில் முழு​மை​யாக அமல்​படுத்​தப்​படும். வன்​முறை, ஊழல்​, ஊடுரு​வல்​, வேலை​வாய்​ப்​பின்​மை ஆகிய​வற்​றில்​ இருந்​து முழு​மை​யாக விடுபட ​பாஜக​வுக்​கு ​வாக்​களிக்​க வேண்​டு​கிறேன்​. இவ்​​வாறு பிரதமர் மோடி பேசி​னார்​.