惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
J
Java Code Geeks
博客园 - 【当耐特】
宝玉的分享
宝玉的分享
腾讯CDC
D
DataBreaches.Net
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
V
V2EX
F
Fortinet All Blogs
MyScale Blog
MyScale Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
T
Tailwind CSS Blog
Jina AI
Jina AI
GbyAI
GbyAI
大猫的无限游戏
大猫的无限游戏
A
About on SuperTechFans
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
爱范儿
爱范儿
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
U
Unit 42
B
Blog
M
MIT News - Artificial intelligence
N
Netflix TechBlog - Medium

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
105 தொகுதிகளில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக கூட்டணி
2026-05-06 · via hindutamil

Updated on

1 min read

சேலம் / சென்னை: அதி​முக கூட்​ட​ணி, இந்தத் தேர்​தலில் 105 தொகு​தி​களில் 3-வது இடம் தள்​ளப்​பட்டு மோச​மான பின்​னடைவைச் சந்​தித்​தது.

ஆளும்​கட்​சி​யாக இருந்த திமுக எதிர்க்​கட்சி வரிசைக்கு தள்​ளப்​பட்​டுள்​ளது. அதி​லும், அக்​கட்​சி​யின் தலை​வ​ர் ஸ்​டா​லின் உள்பட அமைச்​சரவை சகாக்​கள் பலரும் தோல்​வியை சந்​தித்​துள்​ளனர். மேலும் பெரும்​பாலான இடங்​களில் அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​கள் 3-ம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டனர்.

கொளத்​தூரில் அதி​முக வேட்​பாளர் சந்​தான கிருஷ்ணன், சேப்​பாக்​கம் திரு​வல்​லிக்​கேணியில் அதி​முகவின் ஆதி​ராஜா​ராம் ஆகியோர் 3-ம் இடத்​துக்கு தள்​ளப்​பட்​டனர். சைதாப்​பேட்டை தொகு​தி​யில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் 52,691 வாக்​கு​கள் மட்​டுமே பெற்று 2-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார். இங்கு தவெக வேட்​பாளர் அருள் பிர​காசம் 81,205 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். இங்கு அமமுக வேட்​பாளர் செந்​தமிழன் 3-ம் இடம் பிடித்தார்.

அதோல் ஆவடி​யில் நாசர் 1,04,073 வாக்​கு​கள் பெற்ற நிலை​யில், தவெக வேட்​பாளர் ரமேஷ்கு​மார் 1,80,384 வாக்​கு​கள் பெற்​றதுடன் 76,311 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி​யும் பெற்​றார். அங்கு பாஜக வேட்​பாளர் ராஜசிம்ம மகேந்​திரன் 39,605 வாக்​கு​கள் பெற்​று, 3-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்​டார்.

திரு​வெறும்​பூர் தொகு​தி​யில் அமைச்​சர் அன்​பில் மகேஸ் 81,132 வாக்​கு​கள் பெற்று 2-வது இடத்​துக்கு தள்​ளப்​பட்ட நிலை​யில், தவெக வேட்​பாளர் விஜய் 89,837 வாக்​கு​கள் பெற்​றதுடன் 8,705 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். அங்கு அதி​முக வேட்​பாளர் குமார் 29,473 வாக்​கு​களை மட்​டுமே பெற்​று, 3-வது இடத்​துக்கு பின்​தங்​கி​னார்.

இதே​போல், திருப்​பத்​தூர் தொகு​தி​யில் கே.ஆர்.பெரிய கருப்​பன் 1 வாக்கு வித்​தி​யாசத்​தில் தோல்​வி​யுற்​றார். அங்கு தவெக வேட்​பாளர் சீனி​வாசசேதுபதி வெற்​றி பெற்​றார். ஆனால், பாஜக வேட்​பாளர் திருமாறன் 29,054 வாக்​கு​களுடன் 3-வது இடம் தள்​ளப்​பட்டார். இதுத​விர அமைச்​சர்​கள் துரை​முரு​கன், மூர்த்​தி, பழனிவேல் தியாக​ராஜன், கீதா ஜீவன், காந்​தி, அன்​பரசன், முத்​து​சாமி, ராஜேந்​திரன், மதிவேந்​தன் உள்​ளிட்​டோரும் தோல்வி அடைந்தனர். இவ்வாறு 105 தொகு​திகளில் அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​கள் 3-வது இடம் தள்​ளப்​பட்​டனர்.