惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
F
Fortinet All Blogs
Martin Fowler
Martin Fowler
M
MIT News - Artificial intelligence
G
Google Developers Blog
P
Proofpoint News Feed
Recent Announcements
Recent Announcements
MyScale Blog
MyScale Blog
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
月光博客
月光博客
爱范儿
爱范儿
罗磊的独立博客
腾讯CDC
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 叶小钗
Vercel News
Vercel News
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog
C
Check Point Blog
美团技术团队
宝玉的分享
宝玉的分享
Microsoft Security Blog
Microsoft Security Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதல்’ - வணிக சிலிண்டர் ...
2026-05-02 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: “வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது, உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதலாகும்” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் சாடியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதியன்று ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து எரிபொருள் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டணியின் அடாவடி தாக்குதலால் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட கடுமையான பதற்ற நிலை தொடர்கிறது.

இதனால், இந்தியாவின் எரிபொருள் சந்தை வரலாறு காணாத நெருக்கடிக்கு நெட்டித் தள்ளப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, இந்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் வணிக எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) ஒன்றுக்கு தலா ரூ.993 உயர்த்தியுள்ளது. இதனால், வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3,237 ஆக உயர்ந்து, சிறு, குறு வணிகர்களின் கைகளுக்கு எட்டாப் பொருளாகிவிட்டது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான உணவகங்கள், தேநீர் உள்ளிட்ட பலகாரக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் செயலிழந்து வரும் துயரம் தீவிரமாகி வருகின்றது. இதன் விளைவாக கடுமையான விலை உயர்வுச் சுமை மக்கள் தலையில் ஏற்றப்பட்டுள்ளது.

தேநீர் தொடங்கி அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 20 முதல் 50 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. அத்துடன், சிலிண்டர் தேவைக்கு பெறுகிற நிலை தடுக்கப்பட்டு, ஊரகப் பகுதிகளில் 45 நாட்களுக்கு ஒரு முறையும், நகரப் பகுதிகளில் 25 நாட்களுக்கு ஒரு முறையும் தான் பதிவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

மக்கள் நலனை பேணுவதாக வாயில் நுரை தள்ள பேசி வரும் பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும், ஒன்றிய அரசும் அமெரிக்க அரசின் தலைவர் ட்ரம்ப் அனுமதி கேட்டு காத்துக் கிடப்பது வெட்கக்கேடானது. நாட்டின் பாரம்பரியம் மிக்க அணிசேரா அயலுறவுக் கொள்கைக்கு எதிரானது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு எரிபொருள் ஏற்றுமதி செய்யும் பெரும் குழும நிறுவனங்களுக்கு ஆதரவாக கலால் வரியை குறைத்துள்ளது.

ஆனால் உள்நாட்டில் சாமானிய மக்களின் வீட்டு உபயோக, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இது உழைக்கும் மக்களுக்கு எதிரான தாக்குதலாகும். இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.