惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
H
Help Net Security
云风的 BLOG
云风的 BLOG
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
D
Docker
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Blog — PlanetScale
Blog — PlanetScale
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
GbyAI
GbyAI
博客园 - Franky
B
Blog RSS Feed
Stack Overflow Blog
Stack Overflow Blog
L
LangChain Blog
量子位
V
Visual Studio Blog
Y
Y Combinator Blog
小众软件
小众软件
N
Netflix TechBlog - Medium
博客园 - 三生石上(FineUI控件)
Microsoft Security Blog
Microsoft Security Blog
雷峰网
雷峰网

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்​றில் எஞ்சியுள்ள ஓரிடத்​துக்கு மோதும...
2026-05-20 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: நடப்பு ஐபிஎல் கிரிக்​கெட் சீசனில் பிளே ஆஃப் சுற்றில் காலி​யாக உள்ள ஓரிடத்​துக்கு 5 அணி​கள் மோதுகின்​றன. கடந்த ஆண்​டு​களைக் காட்​டிலும் நடப்பு ஐபிஎல் சீசன் மிக​வும் விறு​விறுப்​பாக நடை​பெற்று வரு​கிறது. இந்த சீசனில் மும்பை இந்தி​யன்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயன்ட்ஸ் ஆகியவை ஏற்​கெ​னவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளி​யேறி​விட்​டன.

அதே​நேரத்​தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்களூரு (18 புள்​ளி​கள்) அணி, முதல் அணி​யாக பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற்​றது. நேற்று முன்​தினம் சென்​னை​யில் நடைபெற்ற லீக் ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி சென்னை சூப்​பர் கிங்​ஸ்​ (சிஎஸ்​கே) அணியை வீழ்த்​தி​ய​தால் 16 புள்​ளி​களைப் பெற்று பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறி​விட்​டது. அது​மட்​டுமல்​லாமல் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணி​யும் 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெற்​று​விட்​டது.

தற்​போது பிளே ஆஃப் சுற்​றில் எஞ்​சிய ஓர் இடத்​துக்கு 5 முக்​கிய அணி​கள் மல்​லுக்​கட்​டு​கின்​றன. இது​வரை 63 ஆட்​டங்​கள் ​(நேற்று நடை​பெற்ற ராஜஸ்​தான்​-லக்னோ ஆட்​டத்தை சேர்க்​காமல்) முடிந்துள்​ளன. தற்​போது பஞ்​சாப் கிங்ஸ் அணி 13 புள்​ளி​களு​டன் உள்​ளது. அந்த அணி கடைசி லீக் ஆட்​டத்​தில் லக்​னோவை வரும் 23-ம் தேதி சந்​திக்க உள்​ளது. இந்த ஆட்​டத்​தில் பஞ்​சாப் அணி வெற்றி பெற்​றால் 15 புள்​ளி​களை பெற்​று​விடும்.

அதே​நேரத்​தில் மற்ற அணி​களின் வெற்​றி, தோல்​வியைப் பொறுத்தே பஞ்​சாப் அணி, பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறுமா என்​பது தெரி​யும்.அதே​போல் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணிக்கு இன்னும் 2 ஆட்​டங்​கள் மீத​முள்​ளன. 12 புள்​ளி​களு​டன் இருக்​கும் அந்த அணி லக்னோ அணி​யை​யும், வரும் 24-ம் தேதி மும்பை இந்தி​யன்ஸ் அணி​யை​யும் எதிர்​கொள்​கிறது. இந்த இரண்டு போட்டிகளி​லும் ராஜஸ்​தான் வெற்றி பெற்​றால் 16 புள்​ளியை எட்டி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்​யும். ஒரு வேளை ஒரு போட்​டி​யில் மட்​டும் தோல்வி கண்​டால், மற்ற அணி​களின் வெற்றி, தோல்விக்​காக அந்த அணி காத்​திருக்க நேரிடும்.

12 புள்​ளி​களு​டன் இருக்​கும் சென்னை சூப்​பர் கிங்​ஸ்​(சிஎஸ்​கே) தனது கடைசி ஆட்​டத்​தில் குஜ​ராத் அணி​யுடன் மோதுகிறது. இதில் சிஎஸ்கே கண்​டிப்​பாக வெற்றி பெற வேண்​டும். அப்​படி வெற்றி பெற்​றால் சிஎஸ்கே அணி 14 புள்​ளி​களைப் பெற்று மற்ற அணிகளின் வெற்​றி, தோல்விக்​காக காத்​திருக்க வேண்​டிய நிலை ஏற்​படும். ஆனாலும், சிஎஸ்​கேவுக்கு பிளே ஆஃப் சுற்​றுக்​கான வாய்ப்பு மிக​வும் குறை​வாகவே காணப்​படு​கிறது.

ஒரு​வேளை கடைசி ஆட்​டத்​தில் சிஎஸ்கே தோல்வி கண்​டால், அந்த அணி போட்​டியி​லிருந்து வெளி​யேறி விடும். சிஎஸ்கே அணி​யைப் போலவே, டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யும் 12 புள்​ளி​களு​டன் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி​யைச் சந்​திக்​கிறது. கொல்​கத்தா நைட்​ரைடர்ஸ் அணிக்கு இன்​னும் 2 ஆட்​டம் பாக்கி உள்​ளது. 11 புள்​ளி​களு​டன் இருக்​கும் அந்த அணி இன்று (மே 20) மும்​பையை​யும், 24-ம் தேதி டெல்லியையும் எதிர்​கொள்​கிறது.

இதில் இரண்​டிலும் வென்​றால் 15 புள்​ளி​களை கொல்​கத்தா அணி எட்​டும். அப்​படியே வெற்றி பெற்​றாலும், மற்ற அணி​களின் முடிவுகளைப் பொறுத்தே அந்த அணி​யின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு அமை​யும். ஒரு​வேளை ஒரு போட்​டி​யில் தோல்வி கண்டால் கூட அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்​து​விடும். இந்த ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் சுற்​றுக்கு ஒரேயொரு இடம் எஞ்சி​யுள்ள ஒரேயொரு அந்த இடத்​துக்​காக 5 அணி​கள் மோதவுள்ளது போட்​டி​யில் சுவாரஸ்​யத்தை அதிகப்படுத்தியுள்ளது.