























Updated on
:
1 min read
துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள வெப் தொடர், ‘எக்ஸாம்’. சற்குணம் இயக்கியுள்ள இதை வால்வாட்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், புஷ்கர் மற்றும் காயத்ரி இணைந்து உருவாக்கியுள்ளனர். 7 எபிசோடுகள் கொண்ட இத்தொடர், மே 15-ல் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.
தமிழில் வெளியாகும் இத்தொடர், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்டும் ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப் டைட்டில்களுடனும் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குநர் ஏ.சற்குணம் பேசும்போது, “சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர்.
போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்குத் தொடுப்பதற்காகச் சென்று இறுதியில் வக்கீலாக மாறிய ஒருவர் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காகப் பயிற்சி பெற்ற பல நண்பர்களை எனக்குத் தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்க முதல் காரணம். நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு அரசு பணிக்கான தேர்வு.
அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல், அதை த்ரில்லர் பாணியில் பரபரப்பாகச் சொல்லி இருக்கிறோம்” என்றார். நடிகை அதிதி பாலன் பேசும்போது, `இதில், மரமல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்துக்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது. சண்டைக் காட்சிகளுக்காக நிறைய ஒத்திகையும் பயிற்சியையும் மேற்கொண்டோம். முதல் முறையாக ஆக் ஷன் காட்சியில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。