惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
J
Java Code Geeks
小众软件
小众软件
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Hugging Face - Blog
Hugging Face - Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
C
Check Point Blog
人人都是产品经理
人人都是产品经理
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - Franky
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
G
Google Developers Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
The GitHub Blog
The GitHub Blog
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
大猫的无限游戏
大猫的无限游戏
量子位
M
MIT News - Artificial intelligence
Last Week in AI
Last Week in AI
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பணம், சாதி, தனி நபர் லாபி... - காங்கிரஸை கவலைக்கிடம் ஆக்க...
குள.சண்முகசுந்தரம் · 2026-06-01 · via hindutamil

Updated on: 

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொகு​தி​கள் மற்​றும் வேட்பாளர் தேர்​வில் மிகப்​பெரிய அளவில் முறை​கேடு நடந்திருப்பதாக காங்​கிரஸ் எம்​.பி. ஜோதி​மணி எடுத்து வீசிய குண்டு, காங்​கிரஸ் வட்​டாரத்​தில் கலகத்தை வெடிக்க வைத்திருக்கிறது.

திமுக கூட்​ட​ணி​யில் 28 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது காங்​கிரஸ். இதில் 13 தொகு​தி​களில் சிட்​டிங் எம்​எல்​ஏக்​களே களம் கண்​ட​தால் அங்​கெல்​லாம் சிக்​கல் இல்​லை. எஞ்​சிய 15-ல்​தான் இஷ்டத்​துக்கு ‘எல்​லா’ அத்​து​மீறல்​களும் நடந்​திருப்​ப​தாகச் சொல்​கிறார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய தமிழக காங்​கிரஸ் நிர்​வாகி​கள் சிலர், “வேட்​பாளர்​களை தேர்வு செய்​து​விட்டு தொகு​தி​களைத் தேடினார்கள் என்ற ஜோதி​மணி​யின் கூற்று முற்​றி​லும் உண்​மை. தனது கரூர் மக்​கள​வைத் தொகு​தி​யில் ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகு​தி​யில் காங்​கிரஸ் போட்​டி​யிட வேண்​டும் என வலி​யுறுத்​தி​னார் ஜோதி​மணி.

ஆனால், அவரது கோரிக்​கையை நிராகரித்​து​விட்​டார்​கள். வேட்பாளர் தேர்வு தொடர்​பாக நான்கு நாட்​கள் ஸ்கிரீனிங் கமிட்டி மீட்​டிங் ஸூம் வழியே நடந்​தது. அப்​போது, “காங்​கிரஸ் கட்​சி​யில் அருந்​த​தி​யருக்கு ஏன் வாய்ப்பு அளிப்​பதே இல்​லை?” என்று கேள்வி எழுப்​பி​னார் ஜோதி​மணி. மேலும், காங்​கிரஸ் போட்​டி​யிடும் தொகு​தி​கள் எவை என்​றும் கேட்​டார். ஆனால், “அதையெல்​லாம் இப்​போது சொல்​ல​முடி​யாது” என்று பதில் சொன்​னார் செல்​வப்​பெருந்​தகை. இதை ஜீரணிக்க முடி​யாமல் பாதி​யிலேயே எழுந்து போய்​விட்​டார் ஜோதி​மணி.

மாநில எல்​லை​யில் இருக்​கும் தனித் தொகுதி ஒன்​றில் பிரபல இருசக்கர வாகன கம்​பெனி ஒன்று தனது உற்​பத்தி யூனிட்டை திறக்​கப் போகிறது. அவர்​கள் அங்கு தொழிலா​ளர் பிரச்​சினை​கள் வந்​தால் அதை சமாளிக்​கும் வகை​யில் தங்​களுக்​குத் தோதான ஒரு​வரை எம்​எல்​ஏ​வாக வைத்​துக் கொள்ள நினைக்​கிறார்​கள்.

அப்​படி​யான ஒரு நபரை அவர்​களே தேர்வு செய்து அவருக்கு சீட் கொடுப்​ப​தற்​காக காங்​கிரஸ் கட்​சி​யின் முக்​கிய தலை ஒரு​வருக்கு ரூ. 4 கோடி கைமாற்றி விடு​கிறார்​கள். தேர்​தல் செல​வை​யும் தாங்​களே பார்த்​துக் கொள்​வ​தாக​வும் சொன்​ன​தால் அவர்​கள் சொன்ன நபருக்கே சீட்டை ஒதுக்​கி​னார்​கள்.

துறையூர் (தனி) தொகு​தி​யில் நிறுத்​தப்​பட்ட அகில இந்​திய இளைஞர் காங்​கிரஸ் செய​லா​ளர் விச்சு லெனின் பிர​சாத்தை ‘பெருந்​தன்​மையோடு’ வேட்​பாள​ராக்​கி​விட்​டார் பெருந்​தகை. இதனால் திருச்​சிக்​குள் தொகு​தியை எதிர்​பார்த்​துக் கொண்​டிருந்த அடைக்​கல​ராஜ் மகன் லூயிஸ் ஏமாந்து போனார். லெனின் பிர​சாத்​தால் மாநில இளைஞர் காங்​கிரஸ் தலை​வர் பதவிக்கு கொண்​டு​வரப்​பட்​ட​வர்​தான் சூரியபிர​காஷ். அந்த பாசத்​தில் செல்​வப்​பெருந்​தகை மூலம் சூரிக்கு கவுண்​டம்​பாளை​யத்தை உறு​திப்​படுத்​தி​னார் லெனின்.

இதில் என்ன வேடிக்கை என்​றால், முதல்​கட்ட தேர்​வில், “நீ இப்​போது​தான் பொறுப்​புக்கு வந்​திருக்​கிறாய்” என்று சொல்லி கிரிஷ் சோடங்​க​ரால் ஒதுக்​கப்​பட்​ட​வர் சூரியபிர​காஷ். அதன்​பிறகும், அவருக்கு சீட்டை உறுதி செய்​திருக்​கிறது லாபி. கோவை மாவட்​டத்​தில் மயூரா ஜெயக்​கு​மாரை தலை​தூக்​க​விடக் கூடாது என நினைத்​தவர்​கள், சூரியபிர​காஷுக்​கும் கமல் கட்​சி​யில் இருந்து வந்த ஸ்ரீநிதி நாயுடு​வுக்​கும் (சிங்​காநல்​லூர்) சீட் ஒதுக்க ரொம்​பவே மெனக்​கிட்​டார்​கள். இப்​போது, ஸ்ரீநிதி காங்​கிரஸ் கட்​சியை விட்டே போய்​விட்​டார்.

இதே​போல, பென்​னாகரம் தொகு​தியை காங்​கிரஸ் முதலில் கேட்​கவே இல்​லை. பாமக​வின் ஜி.கே.மணி கேட்​டுக் கொண்​ட​தால் அந்த தொகு​தியை திமுக​தான் காங்​கிரஸ் பட்​டியலில் சேர்த்​தது. எம்​எல்ஏ சீட்​டுக்​காகவே கட்​சி​யில் சேர்ந்த ஜி.கே.மணி​யின் மகன் தமிழ்க்​குமரனுக்கு ஒரே வாரத்​தில் பென்​னாகரம் சீட்டை உறுதி செய்​தது காங்​கிரஸ். இது​வும் ‘சும்​மா’ நடந்​திருக்​காது.

இதே​போல, கேரள​வாசி​யான பிர​வீனை விளவங்​கோட்​டில் கொண்டு வந்து நிறுத்​தி​ய​தில் கே.சி.வேணுகோ​பாலின் கைங்​கர்​யம் இருக்​கிறது. மயி​லாடு​துறை​யில் சிட்​டிங் எம்​எல்​ஏ​வான சு.​ராஜகு​மாரை, வயதை காரணம் காட்டி மாவட்​டத் தலை​வர் பதவி​யில் இருந்து தூக்​கி​னார்​கள். இம்​முறை தேர்​தலிலும் அவரை ஓரங்​கட்​டி​விட்டு தஞ்​சை​யில் இருந்து வேட்​பாளரை இறக்​குமதி செய்​தார்​கள்.

இதற்கு நடு​வே, விஜய் கட்​சி​யுடன் கூட்​டணி வைக்க காங்​கிரஸ் தரப்​பில் ஒரு மூவ் நடந்​தது. சில பல கோடிகளை டெல்லி வரைக்​கும் ‘டி​ரான்​ஸ்ஃபர்’ செய்து அந்த நகர்​வை​யும் தடுத்து நிறுத்தி திமுக கூட்​ட​ணிக்கு பங்​கம் வராமல் பார்த்​துக் கொண்​டதும் இங்​குள்ள காங்​கிரஸ்​காரர்​கள்​தான். ஆக, காங்​கிரஸ் வேட்​பாளர் பட்​டியலில், பணம், சாதி, தலை​வர்​கள் லாபி என அனைத்​தும் இம்​முறை வேலை செய்​திருக்​கிறது.

இப்​போது கிரிஷ் சோடங்​கர் வரைக்​கும் குற்​றம்​சாட்டி உள்​ளார் ஜோதி​மணி. ஆனால், கூட்​டணி ஆட்​சி, விஜய்​யுடன் கூட்​டணி என்​ப​தில் உறு​தி​யாக நின்ற சோடங்​கர் அதை சாதித்​தும் காட்​டி​விட்​டார். அதற்​கான அங்​கீ​கார​மாக அவரை கோவா மாநிலத் தலை​வ​ராக நியமித்​து​விட்​டது காங்​கிரஸ் தலை​மை. அதேசம​யம், திமுக​வின் கிளைக் கழக​மாகவே தமிழக காங்​கிரஸை வழிநடத்தி வேட்​பாளர் தேர்​வில் இத்​தனை முறை​கேடு​களுக்கு வழி​விட்ட செல்​வப்​பெருந்​தகையை இன்​ன​மும் தலை​வர் பொறுப்​பில் வைத்​திருக்​கிறார்​களே என்ற ஆதங்​கத்​தில்​தான் வெடித்​துச் சிதறி இருக்​கிறார் ஜோதி​மணி” என்​றார்​கள்.

இன்​னும் சிலரோ, “தலைப்​புச் செய்​தி​களில் வரவேண்​டும் என்​ப​தற்​காக இப்​படி எல்​லாம் பேசும் ஜோதி​மணி, “தூத்​துக்​குடி​யில் காங்​கிரஸ்​காரர் மீது தி​முக​வினர் தாக்​குதல் நடத்​தி​யது குறித்​தும், சீர்​காழி​யில் ராகுல் காந்​தி​யின் உருவ பொம்மையை கொளுத்​தி​ய தி​முக​வினர்​ குறித்​தும்​ எது​வும்​ பேசாமல்​ இருப்​ப​து ஏன்​?” என்​று கொக்​கி போடுகிறார்​கள்​.