惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
J
Java Code Geeks
I
InfoQ
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
腾讯CDC
L
LangChain Blog
博客园 - 司徒正美
量子位
Y
Y Combinator Blog
C
Check Point Blog
T
Tailwind CSS Blog
D
DataBreaches.Net
Blog — PlanetScale
Blog — PlanetScale
N
Netflix TechBlog - Medium
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
F
Fortinet All Blogs
云风的 BLOG
云风的 BLOG
A
About on SuperTechFans
B
Blog RSS Feed
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
大猫的无限游戏
大猫的无限游戏
V
V2EX
阮一峰的网络日志
阮一峰的网络日志

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திமுக உறவை முறித்தது காங்கிரஸ்: தவெகவுக்கு நிபந்தனையுடன் ...
செய்திப்பிரிவு · 2026-05-07 · via hindutamil

Updated on: 

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையுடன் நேற்று ஆதரவு கடிதம் வழங்கியது காங்கிரஸ். காங்கிரஸ் தமிழக மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் விஜய்யிடம் ஆதரவு கடிதத்தை வழங்கினார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை. விஜய் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய உள்ளார். மேலும் ஒருவர் சட்டப்பேரவைத் தலைவராக நியமிக்கப்படுவார். இதனால், தவெகவின் பலம் 106 ஆக குறையும். அதனால் தவெக ஆட்சி அமைக்க இன்னும் 12 எம்எல்ஏ.க்களின் ஆதரவு தேவை.

இந்த தேர்தலில் காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. கிள்ளியூர் தொகுதியில் செ.ராஜேஷ்குமார், மதுரை மேலூர் தொகுதியில் பெ.விஸ்வநாதன், மயிலாடுதுறை தொகுதியில் ஜமால் முகமது யூனுஸ், குளச்சல் தொகுதியில் தாரகை கத்பர்ட், விளவங்கோடு தொகுதியில் பிரவீன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த சூழலில் காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரியிருந்தார். அதனைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ், தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று சென்னை வந்தார். ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், கே.வி,தங்கபாலு, அகில இந்திய காங்கிரஸ் தரவு பகுப்பாய்வுக் குழுத் தலைவர், அகில இந்தியச் செயலாளர்கள் சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இக்கூட்டத்தில் சட்டப் பேரவைக் காங்கிரஸ் தலைவராக செ.ராஜேஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் தவெகவுக்கு காங்கிரஸ் நிபந்தனை ஆதரவு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில், செல்வப்பெருந்தகை, செ.ராஜேஷ்குமார் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்றனர். அவர்களை தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

பின்னர், காங்கிரஸ் நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய்க்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்போது தவெக ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து 5 காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் கையெழுத்திட்ட அதிகாரப்பூர்வ கடிதத்தை விஜய்யிடம் கிரிஷ் சோடங்கர் வழங்கினார்.

ஆதரவுக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஜய் நன்றி தெரிவித்தார்.

கிரிஷ் சோடங்கர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழக மக்களின் ஜனநாயக தீர்ப்பை மதிப்பது, காப்பது எங்கள் பொறுப்பு. அதன்படி, தமிழகக் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு, தவெகவுக்கு முழு ஆதரவை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆதரவு, அரசியலமைப்புச் சட்டத்தில் நம்பிக்கை இல்லாத, எந்தச் சமூக விரோத சக்திகளும் இந்த கூட்டணியில் இடம்பெறக் கூடாது என்ற நிபந்தனையுடன் வழங்கப்படுகிறது. இந்த கூட்டணி உள்ளாட்சி, மக்களவை, மாநிலங்களவை தேர்தலிலும் தொடரும்’’ என்று கூறியுள்ளார்.

விசிக, கம்யூனிஸ்ட்கள் திடீர் தயக்கம்: தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவையும் விஜய் கோரியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவில்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால், நாளை 8-ம் தேதி செயற்குழுக் கூட்டம் கூடி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விசிக மற்றும் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் 6 இடங்களும் பாமகவிடம் 4 இடங்களும் உள்ளன. பாமக ஆதரவு அளித்தால் விசிகவின் ஆதரவு கிடைக்காது. கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவும் கிடைக்காமல் போகும். பாமகவை சேர்க்கும் பட்சத்தில் இன்னும் 2 இடங்களை யாரிடம் பெறுவது என்ற கேள்வி எழும்.

இதற்கிடையில் ஆதரவு அளிப்பது குறித்து விசிக.வும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆலோசனை நடத்த உள்ளன. கடைசியில் அவர்கள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த 2 கட்சிகளும் ஆதரவு அளிக்க முடிவெடுத்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதே முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.