惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
大猫的无限游戏
大猫的无限游戏
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 叶小钗
月光博客
月光博客
Last Week in AI
Last Week in AI
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
人人都是产品经理
人人都是产品经理
阮一峰的网络日志
阮一峰的网络日志
罗磊的独立博客
IT之家
IT之家
美团技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
博客园 - Franky
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Jina AI
Jina AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The Cloudflare Blog
博客园 - 司徒正美
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிளே ஆஃப் சுற்​றுக்கு பெங்களூரு அணி தகுதி: 23 ரன்​கள் வித...
2026-05-18 · via hindutamil

Updated on

2 min read

தரம்​சாலா: ஐபிஎல் தொடரில் நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் ராயல் சேலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்​சிபி) 23 ரன்​கள் வித்தியாசத்தில் பஞ்​சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்​தி​யது. இதையடுத்து பிளே ஆஃப் சுற்​றில் முதல் அணி​யாக பெங்களூரு அணி நுழைந்துள்​ளது.

இமாச்சல பிரதேச மாநிலம் தரம்​சாலா​விலுள்ள இமாச்​சல் பிரதேச கிரிக்​கெட் சங்க மைதானத்​தில் இந்த ஆட்​டம் நேற்று பிற்​பகல் 3.30 மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய பெங்களூரு அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட் இழப்​புக்கு 222 ரன்கள் குவித்​தது. தொடக்க ஆட்​டக்​காரர்​களாக ஜேக்​கப் பெத்​தேலும், விராட் கோலி​யும் களமிறங்​கினர். அதிரடி​யாக விளையாட முயன்ற ஜேக்​கப் பெத்​தேல், ஹர்​பிரீத் பிரார் பந்துவீச்சில் போல்​டா​னார். அவர் 7 பந்​துகளில் 11 ரன்​கள் மட்டுமே சேர்த்​தார்.

இதையடுத்து விராட் கோலி​யுடன், தேவ்​தத் படிக்​கல் இணைந்தார். இரு​வரும் அதிரடி​யாக விளை​யாடி சிக்​ஸர்​களும், பவுண்​டரி​களு​மாக விளாசித் தள்​ளினர். அதிரடி​யாக விளையாடிக் கொண்​டிருந்த தேவ்​தத் படிக்​கல் ஹர்​பிரீத் பிரார் பந்​து​வீச்​சில் ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். அவர் 25 பந்​துகளில் 4 பவுண்​டரி, 3 சிக்​ஸர்​களு​டன் 45 ரன்கள் குவித்​தார். இதன் பின்​னர் விராட் கோலி​யுடன் வெங்​கடேஷ் ஐயர் இணைந்​தார். இரு​வரும் தொடர்ந்து அதிரடி​யாக விளை​யாட ஸ்கோர் விறு​விறு​வென உயர்ந்​தது.

இந்​நிலை​யில் அரை சதத்​தைக் கடந்து விளை​யாடிக் கொண்டிருந்த விராட் கோலி, சாஹல் பந்​து​வீச்​சில் பிரியன்ஷ் ஆர்யா​விடம் கேட்ச் கொடுத்து அவுட்​டா​னார். அவர் 37 பந்​துகளில் 4 பவுண்​டரி, 3 சிக்​ஸர்​களு​டன் 58 ரன்​கள் குவித்​தார்.வெங்​கடேஷ் ஐயர் சிக்​ஸரும், பவுண்​டரி​களு​மாக விளாசித் தள்​ளி​னார். 20-வது ஓவரின் கடைசி பந்​தில் டிம் டேவிட் அவுட்​டா​னார். அவர் 12 பந்துகளில் 28 ரன்​கள் எடுத்​தார். வெங்​கடேஷ் ஐயர் 40 பந்​துகளில் 8 பவுண்​டரி​கள், 4 சிக்​ஸர்​களு​டன் 73 ரன்​கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்​தார்.

இதைத் தொடர்ந்து 223 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்​சாப் அணி விளை​யாடத் தொடங்​கியது. பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன் சிங் ஆகியோர் தொடக்க ஆட்​டக்​காரர்​களாக களமிறங்​கினர். முதல் ஓவரிலேயே பிரியன்ஷ் ஆர்யாவை வெளி​யேற்றி அதிர்ச்சி வைத்​தி​யம் கொடுத்​தார் புவனேஷ்வர் குமார். ரன் கணக்​கைத் தொடங்​காமலேயே ஆட்டமிழந்​தார் ஆர்​யா. அவரைத் தொடர்ந்து கூப்​பர் கானொலி களத்​துக்​குள் புகுந்​தார்.

ஆனால் 3-வது ஓவரில் மற்​றொரு தொடக்க வீர​ரான பிரப்​சிம்​பரன் சிங் ஆட்​ட​மிழந்​தார். புவனேஷ்வர் குமார் வீசிய பந்தை அடிக்க முயன்​ற​போது அது பேட்​டில் பட்டு தேவ்​தத் படிக்​கல்​லிடம் கேட்ச் ஆனது. இதன் பின்​னர் வந்த கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் ஒரு ரன் எடுத்த நிலை​யில் ரஷிக் சலாம் தர் பந்​தில் ஜிதேஷ் சர்​மா​விடம் கேட்ச் கொடுத்து ஆட்​ட​மிழந்​தார். இதனால் பஞ்​சாப் அணி 19 ரன்களுக்கு 3 விக்​கெட்​களை இழந்து தத்​தளித்​தது.

கூப்​பர் கானொலி 37, ஸ்டாய்​னிஸ் 37, சஷாங்க் சிங் 56 பந்​துகளில் 56, அஸ்​மத்​துல்லா ஓமர்​சாய் 14 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழந்​தனர். ஹர்​பிரீத் பிரார் 5 ரன்​கள் எடுத்து ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தார். முடி​வில் பஞ்​சாப் அணி​யால் 20 ஓவர்​களில் 8 விக்​கெட் இழப்​புக்கு 199 ரன்​கள் மட்​டுமே எடுத்​தது. இதையடுத்து 23 ரன்​கள் வித்தியாசத்​தில் ஆர்​சிபி அணி வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணி​யாக நுழைந்​தது. அந்த அணி 13 போட்டிகளில்​ விளை​யாடி 9 வெற்​றி, 4 தோல்​வி​களு​டன்​ 18 புள்ளிகளைப்​ பெற்​றுள்​ளது. அதே​நேரத்​தில்​ பஞ்​​சாப்​ அணிக்​கு இது 6-வது தொடர்​ தோல்​வி​யாக அமைந்​தது. வெங்​கடேஷ் ஐயர்​ ஆட்​ட​நாயக​னாக அறிவிக்​கப்​பட்​​டார்​.

100 போட்டிகளுக்கு கேப்டன்

தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டம், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் ஸ்ரேயஸ் ஐயருக்கு கேப்டனாக 100-வது போட்டியாகும். ஸ்ரேயஸ் ஐயர் இதுவரை டெல்லி அணிக்கு 41 போட்டிகளுக்கும், கொல்கத்தா அணிக்கு 29 போட்டிகளுக்கும், பஞ்சாப் அணிக்கு 30 போட்டிகளுக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.

தொடர்ச்​சி​யாக 6-வது தோல்வி

ஐபிஎல் தொடரின் முதல் பாதி​யில் அபார​மாக விளை​யாடிய பஞ்சாப் அணி 8 ஆட்​டங்​களில் 7 வெற்​றிகளைப் பெற்று தோல்வியே காணாத அணி​யாக இருந்​தது. இதில் ஒரு ஆட்​டம் மட்டும் மழை​யால் கைவிடப்​பட்டது. ஆனால் 2-வது பாதி​யில் பஞ்சாப் அணி வரிசை​யாக தோல்வி​களைப் பெற ஆரம்​பித்​தது. தற்​போது அந்த அணி 13 புள்​ளி​களை மட்​டுமே பெற்​றுள்​ளது.

அந்த அணிக்கு இன்​னும் ஒரே ஒரு போட்டி மட்​டுமே பாக்கியுள்ளது. லக்​னோ அணி​யுட​னான அந்த ஆட்​டம் வரும் 23-ம் தேதி லக்​னோ​வில் நடை​பெறவுள்​ளது. இதில் வெற்றி பெற்​றாலும் அந்த அணி மற்ற அணி​களின் வெற்​றி, தோல்​வியைப்​ பொறுத்​தே பிளே ஆஃப்​ சுற்​றில்​ நுழையு​மா, நுழை​யா​தா என்​பது தெரியும்.