惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
博客园 - 聂微东
雷峰网
雷峰网
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学
Hugging Face - Blog
Hugging Face - Blog
S
SegmentFault 最新的问题
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
博客园 - 三生石上(FineUI控件)
V
Visual Studio Blog
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
月光博客
月光博客
阮一峰的网络日志
阮一峰的网络日志
博客园_首页
博客园 - 【当耐特】
Jina AI
Jina AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
大猫的无限游戏
大猫的无限游戏
小众软件
小众软件
人人都是产品经理
人人都是产品经理
V
V2EX

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
போட்டி நடைபெறும் நாட்களில் தோனி ஏன் களத்துக்கு வருவதில்லை...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி சேப்​பாக்​கத்​தில் இன்று நடை​பெறும் ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டத்​தி​லும் தோனி களமிறங்​கு​வதற்​கான வாய்ப்​பு​கள் இல்​லை. நடப்பு சீசனில் கணுக்​காலில் காயம் அடைந்துள்ள அவர், இது​வரை களமிறங்​க​வில்​லை. பேட்​டிங் மற்றும் விக்​கெட் கீப்​பிங் பயிற்​சி​யில் தோனி தீவிரம் காட்டி வருகிறார்.

அதேவேளை​யில் ரன்​கள் ஓடு​வ​தில் தோனி சிரமத்தை சந்​தித்து வரு​வ​தாக தெரி​கிறது. இதன் காரண​மாகவே தோனி களமிறங்குவது தள்​ளிப் போகிறது. போட்​டிக்கு முந்​தைய நாட்களில் களத்​தில் பயிற்​சி​யில் ஈடுபடும் தோனி, சக அணி வீரர்களுக்கு அறி​வுரைகளை​யும் வழங்கி வருகிறார். எனினும் போட்டி நடை​பெறும் நாட்​களில் தோனி மைதானத்​துக்கு வருவதை தவிர்த்து விடு​கிறார்.

இதுதொடர்​பாக நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்திப்பின் போது சிஎஸ்கே அணி​யின் பேட்​டிங் பயிற்​சி​யாள​ரான மைக்​கேல் ஹஸ்ஸி கூறிய​தாவது: தோனி எப்​போதும் அணி​யின் நலனை விரும்​பும் வீரர். அவர், மைதானத்​துக்கு வந்​தால், அது மற்ற வீரர்​களின் கவனத்தை திசை​திருப்​பக்​கூடும் என்று கவலைப்​படு​கிறார். தோனி மைதானத்​துக்கு வந்​தால் கண்டிப்பாக கேம​ராக்​கள் அவர் மீதே இருக்​கும், ரசிகர்​கள் அவருக்​காக ஆரவாரம் செய்​வார்​கள். இதுவே தோனி போட்டி நடை​பெறும் நாட்​களில் மைதானத்​துக்கு வராமல் இருப்​ப​தன் பின்​னணி​யில் உள்ள காரணம்.

நிச்​சய​மாக அவர் ஹோட்​டல் அறை​யில் இருந்​த​படி போட்​டிகளை மிக நெருக்​க​மாக கவனித்து வரு​கிறார். தனிப்​பட்ட முறை​யில் அவர், ஓய்​வறை​யில் எங்​களு​டன் இருப்​பதை நான் மிக​வும் விரும்பு​கிறேன். தனது அனுபவங்​களை வீரர்​களுக்கு வழங்குகிறார். ஆனால், மற்ற வீரர்​களுக்கு தான் ஒரு கவனச்சிதறலாக இருக்​கக்​கூ​டாது என்​ப​தற்​காகவே, போட்டி நாளில் மட்​டும் தள்ளி இருக்க முடிவு செய்​துள்​ளார்.

தோனி களமிறங்​கு​வது மும்பை அணிக்கு எதி​ரான போட்​டியா அல்​லது அதற்கு அடுத்த போட்​டியா என்று எனக்​குத் தெரியவில்லை, ஆனால் காயத்​தில் இருந்து அவர் வேகமாக மீண்டு வருகிறார். தோனி​யின் பேட்​டிங் மற்​றும் விக்​கெட் கீப்பிங் திறன்​களின் மீது எங்​களுக்கு முழு நம்​பிக்கை இருக்​கிறது. ஆனால், ஒரு இன்​னிங்​ஸின் கடைசி கட்​டத்​தில் மிக வேக​மாக ஓடி எடுக்க வேண்​டிய ரன்​களுக்கு தேவை​யான வலிமை அவரிடம் இருப்​பதை உறுதி செய்ய வேண்​டியது உள்​ளது.

தனது கெண்​டைக்​கால் தசை மீது அவருக்கு முழு நம்​பிக்கை வந்தவுடன், அவர் விளை​யாடு​வதற்​குச் சம்​மதம் தெரி​விப்​பார் என்​ப​தில் நான் உறு​தி​யாக இருக்​கிறேன். தற்​போது நாங்​கள் அவரது முடி​விற்​காகவே காத்​திருக்​கிறோம். ஒட்​டுமொத்த சென்​னை​யும் காத்​திருக்​கிறது. அனைத்து ரசிகர்​களும் அவர் வரு​வார் என்று நம்பிக் காத்​திருக்​கிறார்​கள்​. இவ்​வாறு அவர் கூறி​னார்.