惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Jina AI
Jina AI
Vercel News
Vercel News
H
Help Net Security
Martin Fowler
Martin Fowler
美团技术团队
云风的 BLOG
云风的 BLOG
Y
Y Combinator Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
MyScale Blog
MyScale Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
MongoDB | Blog
MongoDB | Blog
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
T
Tailwind CSS Blog
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
70 ஆண்டுகளை நிறைவு செய்த அமலாக்கத் துறை: 94% குற்றங்கள் ந...
2026-05-03 · via hindutamil

Updated on

1 min read

புதுடெல்லி: மத்​திய அரசின் கீழ் செயல்​படும் அமலாக்​கத் துறையின் 70-வது நிறுவன தின விழா டெல்​லி​யில் நடை​பெற்​றது. இதில் மத்​திய நிதித் துறை இணை அமைச்​சர் பங்​கஜ் சவுத்​ரி, வருவாய்த் துறைச் செயலர் அரவிந்த் ஸ்ரீவஸ்​த​வா, கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் எஸ்​.​வி.​ராஜு, அமலாக்​கத் துறை மூத்த அதி​காரி​கள் பங்​கேற்​றனர்.

நிகழ்ச்​சி​யில் அமலாக்​கத் துறை இயக்​குனர் ராகுல் நவீன் அறிக்கை சமர்ப்​பித்​தார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: இந்த நிகழ்ச்சி கொண்​டாட்​டத்​துக்கு மட்​டுமல்​லாமல், சுய பரிசோதனை செய்​ய​வும் எதிர்​காலத்​துக்​கான பாதையை வகுக்கவும் முக்​கிய​மானது. வங்கி மோசடிகள், நிறுவன முறைகேடு​கள், ரியல் எஸ்​டேட் மோசடிகள் போன்​றவற்​றின் மீதே அமலாக்​கத் துறை​யின் கவனம் உள்​ளது.

தற்​போது, கிரிப்டோ மோசடி, சைபர் குற்​றம், தீவிர​வாதத்​துக்கு நிதி​யளித்​தல் மற்​றும் போதைப்​பொருள் கடத்​தல் போன்ற புதிய சவால்​கள் உரு​வெடுத்​துள்​ளன. இந்த குற்​றங்​களை எதிர்​கொள்ள அமலாக்​கத் துறை தனது அணுகு​முறையை மாற்றி அமைத்​துள்​ளது. குறிப்​பாக போதைப் பொருள் கடத்​தல் வலைப் பின்​னல்​களைப் பொருளா​தார ரீதி​யாக முடக்​கு​வ​தில் அதிக கவனம் செலுத்தி வரு​கிறது.

உதா​ரண​மாக, செங்​கோட்டை குண்​டு​வெடிப்பு வழக்​கில், தீவிர​வாதம் மற்​றும் உளவு நடவடிக்​கைகளு​டன் அதன் தொடர்​புடைய பண மோசடி வழக்​கு​களில் அமலாக்​கத் துறை விரை​வான மற்​றும் கடுமை​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. 2025-26 நிதி​யாண்​டில் அமலாக்​கத் துறை 155 கூடு​தல் புகார்​கள் உட்பட மொத்​தம் 812 குற்​றப்​பத்​திரி​கைகளைத் தாக்​கல் செய்​துள்​ளது. இது அதற்கு முந்​தைய ஆண்டைவிட 2 மடங்கு அதிகம்.

அமலாக்​கத் துறை பதிவு செய்த வழக்​கு​களில், இது​வரை 94 சதவீதக் குற்​றங்​கள் நிரூபண​மாகி உள்​ளன. தற்​போது சுமார் 2,400 வழக்​கு​கள் நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்​ளன. இவற்​றின் மீதான தீர்ப்​பு​கள் விரை​வில் வெளி​யாகும். இது​வரை மொத்​தம் ரூ.2,36,017 கோடி மதிப்​பிலான சட்​ட​விரோதச் சொத்​துக்​கள் முடக்​கப்​பட்​டுள்​ளன. கடந்த நிதி​யாண்​டில் மட்​டும் ரூ.81,422 கோடி மதிப்​பிலான சொத்​துக்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இது முந்​தைய ஆண்டை விட 170 சதவீதம் அதி​கம்.

மேலும், வங்​கி​கள், முதலீட்​டாளர்​கள் மற்​றும் வீடு வாங்​கு​வோர் போன்ற பாதிக்​கப்​பட்ட தரப்​பினருக்கு ரூ.63,142 கோடி திரும்ப ஒப்​படைத்​துள்​ளது. பிஏசிஎல் லிமிடெட் மோசடி வழக்​கில், முதலீட்​டாளர்​களுக்கு ரூ.15,581 கோடி திரும்ப வழங்​கப்​பட்​டுள்​ளது. உதய்​பூரைச் சேர்ந்த மற்​றொரு ரியல் எஸ்​டேட் வழக்​கில், இருநூற்​றுக்​கும் அதி​க​மான வீடு​களை வாங்​கு​வோருக்கு அவர்​களின் சொத்​துக்​கள் திரும்ப ஒப்​படைக்​கப்​பட்​டன.

இது​வரை, எப்​இஒஏ (தப்பி ஓடிய பொருளா​தா​ரக் குற்​ற​வாளி​கள் சட்​டம்) கீழ் 54 நபர்​களுக்கு எதி​ராக நடவடிக்​கைகள் தொடங்​கப்​பட்​டுள்​ளன. அவர்​களில் 21 பேர் ‘தப்பி ஓடிய குற்​ற​வாளி​கள்’ என்று அறிவிக்​கப்​பட்​டு, ரூ.2,178 கோடி மதிப்​பிலான சொத்​து​கள் கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.