惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

MongoDB | Blog
MongoDB | Blog
V
V2EX
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
有赞技术团队
有赞技术团队
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
罗磊的独立博客
月光博客
月光博客
爱范儿
爱范儿
D
Docker
U
Unit 42
P
Proofpoint News Feed
I
InfoQ
腾讯CDC
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
L
LangChain Blog
V
Visual Studio Blog
IT之家
IT之家
Vercel News
Vercel News
G
Google Developers Blog
M
MIT News - Artificial intelligence
美团技术团队
The GitHub Blog
The GitHub Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் தவறு இழைக்க...
2026-05-09 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: கோ​யில் சொத்​துகளை பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும், கடமை​யும் உள்ள அதி​காரி​கள் அதில் தவறு இழைக்​கக்​கூ​டாது என அறநிலை​யத்​துறைக்கு உயர் நீதி​மன்​றம் அறி​வுரை வழங்​கி​யுள்​ளது.

இதுதொடர்​பாக திருத்​தொண்​டர் அறக்​கட்​டளை தலை​வ​ரான சேலம் ஏ.ரா​தாகிருஷ்ணன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘சென்னை மயி​லாப்​பூரில் உள்ள கபாலீஸ்​வரர் கோயி​லில் ஆண்​டு​தோறும் நடத்​தப்​படும் அறு​பத்து மூவர் உலா மற்​றும் பிரம்​மோற்​சவம் போன்ற திரு​விழாக்​களின் வரவு - செலவு கணக்கு விவரங்​களை இந்து சமய அறநிலை​யத்​துறை​யின் தணிக்கை பிரிவு அதி​காரி​கள் தணிக்கை செய்து அறிக்கை அளித்​துள்​ளனர்.

அதில் கோயில் நிர்​வாகத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​துள்​ள​தாக குற்​றச்​சாட்​டு​கள் சுமத்​தப்​பட்​டுள்​ளது. இந்த குற்​றச்​சாட்​டு​கள் தொடர்​பாக பலமுறை புகார் அனுப்​பி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

எனவே, இதுதொடர்​பாக உரிய விசா​ரணை நடத்த அறநிலை​யத்துறைக்கு உத்​தரவிட வேண்​டும்’ என கோரி​யிருந்​தார். இந்த வழக்கு நீதிபதி எம்​.தண்​ட​பாணி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது, மனு​தா​ரரின் புகார் பரிசீலிக்​கப்​பட்டு சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும், என அறநிலை​யத்​துறை தரப்​பில் உறு​தி​யளிக்​கப்​பட்​டது. அதையடுத்து நீதிப​தி, ‘‘அறநிலை​யத்​துறை​யின் தணிக்கை குழு கோயில் நிர்​வாகத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் நடந்​துள்​ளது என குற்​றச்​சாட்டை சுமத்​தி​யுள்​ளது.

அந்த குற்​றச்​சாட்​டு​களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டியது அறநிலை​யத்​துறை ஆணை​யரது கடமை. குற்​றச்​சாட்​டு​களின் மீது நடவடிக்கை எடுக்​காமல் இருப்​பது சட்​டப்​பூர்வ கடமையை துறப்​ப​தற்கு சமம்.

கோயில் சொத்​துகளை பாது​காக்க வேண்​டிய பொறுப்​பும், கடமை​யும் உள்ள அதி​காரி​கள் அதில் தவறு இழைக்​கக்​கூ​டாது. எனவே, மனு​தா​ரரின் புகாரை 12 வார காலத்​துக்​குள் பரிசீலித்து சட்​டப்​படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என அறி​வுறுத்​தி, வழக்கை முடித்​து வைத்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.