惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

F
Fortinet All Blogs
罗磊的独立博客
IT之家
IT之家
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
月光博客
月光博客
博客园 - Franky
博客园 - 聂微东
博客园_首页
爱范儿
爱范儿
量子位
博客园 - 三生石上(FineUI控件)
G
Google Developers Blog
Martin Fowler
Martin Fowler
小众软件
小众软件
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Y
Y Combinator Blog
Vercel News
Vercel News
腾讯CDC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
The Cloudflare Blog
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மாநிலங்களவையை வழிநடத்த 6 பேர் கொண்ட குழு நியமனம்
செய்திப்பிரிவு · 2026-04-17 · via hindutamil

அதி​முக எம்​.பி. தம்பிதுரை

Updated on: 

புதுடெல்லி: ​மாநிலங்​களவை தலை​வர், துணைத் தலை​வர் இல்லாத நிலை​யில் வழி நடத்​தும் குழு​வுக்கு அதி​முக எம்​.பி. தம்பிதுரை உட்பட 6 பேர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

மாநிலங்​களவை எம்​.பி.​யாக இருந்த ஹரிவன்​ஷின் பதவிக்காலம், கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி​யுடன் நிறைவடைந்​தது. இதைத் ​தொடர்ந்து அந்த அவை​யின் எம்​.பி.​யாக ஹரிவன்ஷை குடியரசுத் தலை​வர் நியமித்த நிலை​யில், கடந்த 10-ம் தேதி அவர் நியமன எம்​பி-​யாக பதவி​யேற்​றுக் கொண்​டார். இந்​நிலை​யில், மாநிலங்​களவை துணைத் தலை​வர் பதவிக்​கான தேர்​தல் டெல்லியில் இன்று நடை​பெற உள்​ளது. அந்​தப் பதவியை ஏற்கெனவே தொடர்ந்து 2 முறை ஹரிவன்ஷ் வகித்த நிலை​யில், அப்​ப​தவிக்கு அவர் மீண்​டும் தேர்வு செய்​யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதனிடையே மாநிலங்​கள​வைத் தலை​வர் துணைத் தலை​வர் இல்லாத வேளை​களில், அந்த அவையை வழி நடத்​தும் குழுவை குடியரசு துணைத் தலை​வரும், மாநிலங்​கள​வைத் தலை​வரு​மான சி.பி.​ரா​தா கிருஷ்ணன் நேற்று முன்​தினம் மாற்​றியமைத்​தார். அதில் 6 பேர் இடம்​பெற்​றுள்​ளனர்.

அந்​தக் குழு​வில், அதி​முக எம்பி தம்​பிதுரை, பாஜக எம்​பிக்​கள் தினேஷ் சர்​மா, பாங்​னோன் கோன்​யாக், கன்​ஷி​யாம் திவாரி, பிஜு ஜனதா தள கட்சி எம்​.பி. சஸ்​மித் பத்​ரா, காங்​கிரஸ் எம்​.பி. ஃபுலோ தேவி நேதாம் ஆகியோர் இடம்​பெற்​றுள்​ளனர். மாநிலங்களவை பொதுச் செயலர் பி.சி.மோடி வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் இது தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.