惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

IT之家
IT之家
博客园_首页
S
SegmentFault 最新的问题
罗磊的独立博客
博客园 - 【当耐特】
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker
雷峰网
雷峰网
Google DeepMind News
Google DeepMind News
博客园 - 司徒正美
V
V2EX
大猫的无限游戏
大猫的无限游戏
V
Visual Studio Blog
腾讯CDC
宝玉的分享
宝玉的分享
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
人人都是产品经理
人人都是产品经理
T
Tailwind CSS Blog
Vercel News
Vercel News
H
Help Net Security
博客园 - Franky
D
DataBreaches.Net
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026
முனைவர் கே.பி.வித்யாதரன் · 2026-06-20 · via hindutamil

Updated on: 

மேஷம்: குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் தரும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்: தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். புதிய பங்குதாரர், பணியாட்களின் ஆதரவை பெறுவீர்.

மிதுனம்: சந்தர்ப்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிட்டும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும். வங்கியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

கடகம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர். தாயாருடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.

சிம்மம்: அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்தவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கன்னி: அடுக்கடுக்காக இருந்து வந்த செலவு குறையும். சவாலான காரியங்களையும் திட்டமிட்டு முடிப்பீர்கள். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

துலாம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வர். பதவியில் இருப்பவர்கள் உதவுவர். அலுவலகத்தில் அடுத்தவருக்கு ஆலோசனை கூறுவதை நிறுத்திக் கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்றம் உண்டு.

விருச்சிகம்: நேர்மறை சிந்தனைகள் உற்சாகத்தை தரும். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரரீதியாக நண்பர்களை சந்திப்பீர். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்பீர். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறாதீர்கள்.

தனுசு: மனதுக்கு இதமான செய்திகள் வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பேச்சில் கம்பீரம் இருக்கும். தாய்வழி உறவினரால் ஆதாயமுண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

மகரம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. தாயார், மனைவியின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரரீதியாக பயணம் செல்வீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

கும்பம்: தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்பட்டு சில பிரச்சினைகளை முடிப்பீர். தம்பதிக்கு இடையே இருந்த சந்தேகம் விலகும். பிள்ளைகள் அன்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிட்டும். நம்பிக்கைக்கு உரியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அலுவலகப் பணிகள் விரைந்து முடியும். வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல உழைப்பீர்கள்.