惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

罗磊的独立博客
U
Unit 42
N
Netflix TechBlog - Medium
人人都是产品经理
人人都是产品经理
Hugging Face - Blog
Hugging Face - Blog
腾讯CDC
小众软件
小众软件
V
Visual Studio Blog
T
Tailwind CSS Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 叶小钗
GbyAI
GbyAI
爱范儿
爱范儿
雷峰网
雷峰网
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
D
DataBreaches.Net
博客园_首页
D
Docker
A
About on SuperTechFans
G
Google Developers Blog
I
InfoQ
T
The Blog of Author Tim Ferriss
V
V2EX
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம்; பதவிக்காக அரசியலுக்கு வரவ...
அ.முன்னடியான் · 2026-05-31 · via hindutamil

Updated on: 

புதுச்சேரி: "எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஆனால், அமைச்சர்களை முதல்வர் விரைந்து நியமனம் செய்ய வேண்டும்" என்று லட்சிய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம், அவர்களுக்கு இலாகா ஒதுக்குவது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் தான் தேர்தலை நடத்தியுள்ளோம். எனக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்றும், அதற்காக ரூ.100 கோடி வரை பேரம் பேசப்படுகிறது என்றும் சில சர்ச்சைகள் வெளியே வந்தது. அமைச்சர்கள் நியமனம் செய்வது என்னாலோ அல்லது என்னைச் சார்ந்தவர்களாலோ தாமதம் ஏற்பட்டால் அந்த தாமதத்தை விலகச் செய்ய வேண்டும்.

எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் பதவிக்காக அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்துள்ளேன். எம்எல்ஏவாக இருந்து என்ன முடியுமோ அதனைக்கொண்டு என்னுடைய காமராஜ் நகர் தொகுதியை மாதிரி தொகுதியாக மாற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. அந்தப் பணியை நான் தொடங்க உள்ளேன். அதனால் எனக்கு பதவி வேண்டாம். என்னால் தான் தாமதம் என்றால், என்னை விடுத்து விரைவாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக் கோரி துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.

பக்கத்து மாநிலமான தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ளது. அவர்கள் உடனடியாக அமைச்சர்களை நியமித்து பணிகளை செய்ய ஆரம்பித்துவிட்டனர். அனுபவம் இல்லாதவர்கள் கூட அவரவர் துறைகளுக்கு சென்று பணிகளை செய்கின்றனர். ஆனால் பல ஆண்டுகள் அரசியலில் நின்று மிகப்பெரிய அனுபவத்துடன் இருந்தும் அமைச்சரவையை அமைக்க தாமதப்படுத்துவது மக்களுக்கு நல்லதல்ல.

வரும் காலம் மழைக் காலம். வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வார வேண்டும். குறிப்பாக உப்பனாறு, வெள்ளவாரி வாய்க்கால் மழையால் பாதிப்பு ஏற்படும். அந்த வாய்க்கால் தூர்வாரப்படாததால் சமீபத்தில் பெய்த மழையில் காமராஜ் நகர் தொகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதனை எந்த அமைச்சரிடம் சென்று கேட்பது. அரசு அதிகாரிகளிடம் கேட்டால் கடந்த முறை மழைக் காலத்தில் வேலை செய்ததற்கே பணம் கொடுக்கவில்லை. அதனால் எங்களால் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். இதனால் நாங்கள் எங்கள் சொந்த செலவில் அதனை சரி செய்தோம். 8 டிராக்டர் அளவில் குப்பைகள் அள்ளப்பட்டன. இதையெல்லாம் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டால் தான் அனைத்தையும் விரைந்து செய்ய முடியும். எனவே விரைவாக அமைச்சர்களை நியமிக்க வேண்டும், என்றார்.

தொடர்ந்து அவர் கூறும்போது, புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று கூறினேன். சிங்கப்பூரில் இருந்து இன்று ஒரு குழுவினர் புதுச்சேரி, காரைக்காலை பார்வையிட வருகின்றனர். சில மாதிரிகளை அவர்கள் கொடுத்துள்ளனர். அது தொடர்பாக பேச உள்ளோம். காமராஜ் நகரை மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்று சொல்லி வருகின்றேன். அதற்கான பணிகளை தொடங்கிவிட்டேன். கூடிய விரைவில் அது மாறிவிடும். தமிழகத்தில் தவெகவை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

காலச்சூழ்நிலைக்கு ஏற்ப ஒவ்வொன்றும் மாறும். இன்று இளைஞர்கள் நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வருகின்றோம். யாரும் பதவிக்கோ, பணம் சம்பாதிக்கவோ வரவில்லை. அதனால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். எங்கள் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றோம். தமிழகத்திலும் எங்களின் கட்சியை தொடங்கியுள்ளோம்.” என்று தெரிவித்தார்.