惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
大猫的无限游戏
大猫的无限游戏
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
Jina AI
Jina AI
博客园 - 聂微东
T
The Blog of Author Tim Ferriss
宝玉的分享
宝玉的分享
L
LangChain Blog
M
MIT News - Artificial intelligence
Blog — PlanetScale
Blog — PlanetScale
腾讯CDC
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
H
Help Net Security
B
Blog RSS Feed
J
Java Code Geeks
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
S
SegmentFault 最新的问题

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
முதல்வர் விஜய்யுடன் எச்டி ஹூண்டாய் நிறுவனத்தினர் சந்திப்ப...
செய்திப்பிரிவு · 2026-06-18 · via hindutamil

Updated on: 

சென்னை: தூத்துக்குடியில் ரூ.38ஆயிரம் கோடி முதலீட்டில் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அமைக்கப்படும் அதிநவீன கப்பல் கட்டுமானத் திட்டம் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன், எச்டி கேஎஸ்ஓஇ நிறுவன அலுவலர்கள் சந்தித்தனர்.

தென் கொரியாவைத் தலைமையகமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனம் எச்டி ஹுண்டாய். இந்நிறுவனம் தூத்துக்குடியில் அதிநவீன கப்பல் கட்டுமானத் தொகுதி ஒன்றை அமைக்க, தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இங்கு திட்டமிடப்பட்டுள்ள மிகப் பெரிய கப்பல் கட்டுமானத் தள திட்டத்தின் செயல்பாட்டு நிலைகள் குறித்து, இந்நிறுவனத்தின் உலகளாவிய வணிகப் பிரிவு இயக்குநர் யங் ஹூன் குவான் தலைமையிலான உயர்மட்ட அலுவலர்கள் நேற்று முதல்வர் விஜய்யை தலைமைச்செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தியாவில் புதிதாக உருவாகவுள்ள இந்தக் கப்பல் கட்டுமானத் திட்டத்தில் ரூ.38,000 கோடி முதலீடு செய்யப்பட உள்ளது. இதன் மூலம், 15 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

மேலும், துணைத் தொழில்கள் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி மூலம் மாநிலத்தில், மேலும் பல வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இத்திட்டத்துக்காக, சிப்காட் மற்றும் வ.உ.சி. துறைமுக ஆணையம் ஆகியவை இடையில் தமிழ்நாடு தேசிய கப்பல் கட்டுமானம் மற்றும் கனரக தொழிற்சாலைகள் பூங்கா (NSHIPTN) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது.

இக்கப்பல் கட்டுமானத் தொகுதியை நிறுவ முதல் கொள்கை அளவிலான ஒப்புதலை, இந்திய அரசின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து இந்நிறுவனம் பெற்றுள்ளது. முதல்வருடனான சந்திப்பின் போது, இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து நிறுவனத்தின் உயர்மட்ட அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், தூத்துக்குடியில் இத்திட்டத்தை செயல்படுத்து வதில் நிறுவனத்தின் உறுதியான ஆர்வத்தையும் தெரிவித்தனர். அப்போது முதல்வர் விஜய், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டம் தூத்துக்குடியில் விரைவாக செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும் என்றும், திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் முழுமையான நிர்வாக ஆதரவும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, எச்டி ஹுண்டாய் நிறுவனத்தினர் கப்பல் கட்டும் தளத்தை விரைவில் தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனர்.

நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் ச.கீர்த்தனா, தலைமைச்செயலர் மு.சாய்குமார், தொழில்துறை செயலர் ச. விஜயகுமார், டிட்கோ தலைவர் தா.கார்த்திகேயன், சிப்காட் மேலாண்மை இயக்குநர் சி.அ. இராமன், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் தீபக் ஜேக்கப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வாழ்த்து:

மேலும், தலைமைச்செயலகத்தில், அமைச்சர் கீர்த்தனா, தொழில்துறை செயலர் விஜயகுமார், டிட்கோ தலைவர் கார்த்திகேயன் ஆகியோர், முதல்வர் விஜய்யை சந்தித்து, தமிழக அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN- SPACe) இணைந்து தூத்துக்குடி மாவட்டம் அல்லிகுளத்தில் உருவாக்கப்பட உள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் ‘ விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் ’ அமைக்க கடந்த ஜூன் 11ம் தேதி கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.