惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

N
Netflix TechBlog - Medium
I
InfoQ
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
Recent Announcements
Recent Announcements
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
D
Docker
Microsoft Security Blog
Microsoft Security Blog
宝玉的分享
宝玉的分享
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
GbyAI
GbyAI
博客园 - Franky
博客园 - 聂微东
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
B
Blog RSS Feed
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
月光博客
月光博客
罗磊的独立博客

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
துனீசியாவை துவம்சம் செய்தது சுவீடன்: 5-1 என்ற கோல் கணக்கி...
செய்திப்பிரிவு · 2026-06-16 · via hindutamil

Updated on: 

மொன்டெர்ரி: பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் மெக்​சிகோ​வின் மொன்​டெர்​ரி​யில் உள்ள எஸ்​டாடியோ மைதானத்​தில் நேற்று ‘எஃப்’ பிரி​வில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் சுவீடன் - துனீசியா அணி​கள் மோதின.

7-வது நிமிடத்​தில் சுவீடன் முதல் கோலை அடித்​தது. லிண்​டெலோஃப் நடு​ப்பகு​தி​யில் இருந்து தூக்கி அடித்த பந்தை துனீசிய கோல்​கீப்​பர் சமாக் தனது இடத்தை விட்டு தாண்டி வெகுதூரம் முன்​னேறி வந்து தடுக்க முயன்​றார். ஆனால் பந்தை அவர், சரிவர தடுக்​க​வில்​லை. இதனால் அரு​கில் நின்ற விக்​டர் கியோகெரெஸ் தனது வலு​வான ஷாட் வாயி​லாக கோல் அடிக்க முயற்சி செய்தார், ஆனால் கோல் வலை​யின் முன் நின்ற துனீசிய டிஃபெண்​டர் தால்பி அதைத் தடுத்​தார்.

தால்பி மீது பட்டு திரும்பி வந்த பந்தை யாசின் அயாரி அற்புதமாக கட்​டுப்​படுத்தி மின்​னல் வேகத்​தில் உதைக்க பந்து கோல் வலை​யின் மேல் கார்​னரை துளைத்​தது. இதனால் சுவீடன் 1-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது. 30-வது நிமிடத்தில் சுவீடன் 2-வது கோலை அடித்​தது. விக்​டர் கியோகெரெஸ் உதவி​யுடன் பந்தை பெற்ற அலெக்​சாண்​டர் இசாக், இடது புறத்​தில் தாழ்​வாக அடித்த ஷாட் கோலாக மாறியது. இதனால் சுவீடன் 2-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது.

43-வது நிமிடத்​தில் துனீசியா அணி தனது முதல் கோலை அடித்தது. துனீசியா அணி​யின் வீரர் ஹன்​னி​பால் மெஜ்ப்​ரி​ அடித்த கிராஸை பெற்ற ஒமர் ரெகிக் தலை​யால் முட்டி கோல் அடித்​தார். முதல் பாதி ஆட்​டத்​தில் சுவீடன் 2-1 என்ற கோல் கணக்கில் முன்​னிலை​யில் இருந்​தது. 59-வது நிமிடத்​தில் பாக்ஸ் பகு​திக்கு முன்​ன​தாக துனீசி​யா​வின் எலி​யாஸ் ஸ்கிரி, சுவீடன் வீரர் அலெக்​சாண்​டர் இசாக்​கிடம் பந்தை பறி​கொடுத்​தார்.

பந்தை தட்​டிப்​பறித்த இசாக் சமயோசித​மாகச் செயல்​பட்டு அருகில் நின்ற விக்​டர் கியோகெரெஸிடம் தட்​டி​விட்​டார். அதை வாங்​கிய கியோகெரெஸ், மின்​னல் வேகத்​தில் கோல் வலைக்​குள் திணித்​தார். இதனால் சுவீடன் 3-1 என்ற கோல் கணக்​கில் முன்னிலை பெற்​றது. தொடர்ந்து 84-வது நிமிடத்​தில் மத்​தி​யாஸ் ஸ்வன்​பெர்க்​கும், கா​யங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 6-வது நிமிடத்​தில் யாசின் அயாரி​யும் கோல் அடிக்க சுவீடன் அணி 5-1 என்​ற கோல்​ கணக்​கில்​ அபார வெற்​றி பெற்​றது.

ஆரவாரம் செய்யாத அயாரி

துனீசியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சுவீடன் அணியின் யாசின் அயாரி 2 கோல்கள் அடித்து அசத்தினார். யாசின் அயாரியின் தந்தை துனீசியா நாட்டைச் சேர்ந்தவர். இதற்கு மதிப்பு அளிக்கும் வகையில் முதல் கோலை அடித்ததும் அதனை யாசின் அயாரி பெரிய அளவில் ஆரவாரம் செய்து கொண்டாடவில்லை.