



















Updated on
:
1 min read
நடிகர் அஜித்குமார், குட் பேட் அக்லி படத்துக்குப் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறார். அப்படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் அவர் இப்போது ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற சொந்த அணியை வைத்துள்ளார். இதன் மூலம் பல்வேறு நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார். சில போட்டிகளில் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
அவரது ரேஸிங் தொடர்பாக ஆவணப் படம் ஒன்று உருவாகி வருகிறது. அதற்கு கிளாடியேட்டர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்த ஆவணப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
விரைவில் வெளிவர இருக்கும் இந்த ஆவணப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。