





















அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on:
வாஷிங்டன்: ஜி-7 உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அமெரிக்க அதிபரின் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஸ்லோவேக்கியா ஆகிய ஐரோப்பிய நாடுகளில் 6 நாட்கள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பிரான்ஸ் பயணம் 2 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் ஸ்லோவேக்கியாவில் பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடி தனது முதல்கட்ட பிரான்ஸ் பயணத்தில் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் நீஸ் நகரில் இன்று (ஜூன் 14) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதன் பின்னர் ஸ்லோவேக்கியா நாட்டுக்கு பயணிக்கிறார். பின்னர் மீண்டும் பிரான்ஸ் திரும்பும் பிரதமர் மோடி, ஜூன் 16, 17 ஆகிய தேதிகளில் எவியான் நகரில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த உச்சி மாநாட்டுக்கு இடையே, உலகத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ஜி-7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இது இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தையாக இருக்கும் என தகவல். மேலும், இந்த சந்திப்பின் போது உலக நாடுகளில் நிலவும் சூழல், போர் குறித்து இரு தலைவர்களும் பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தொடர்ந்து நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றும் பிரதமர் என்ற அங்கீகாரத்தை பெட்ரா பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த வாரம் தனது வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.
“இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமராக பணியாற்றியவர் என்ற சாதனையை படைத்துள்ள எனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். அவர் மிகச்சிறந்த பிரதமர்! அவர் வலிமையான, ஆரோக்கியமான மற்றும் ஞானம் கொண்டவர். அவர் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றுவார்” என்று ட்ரூத் சோஷியல் சமூக வலைதள பதிவில் அவர் கூறியிருந்தார். இருவரும் பொதுவெளியில் பரஸ்பரம் நட்பு பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக ட்ரம்ப்பின் வாழ்த்து அமைந்திருந்தது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。