惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
阮一峰的网络日志
阮一峰的网络日志
IT之家
IT之家
A
About on SuperTechFans
量子位
Engineering at Meta
Engineering at Meta
B
Blog
The Cloudflare Blog
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
Y
Y Combinator Blog
J
Java Code Geeks
D
DataBreaches.Net
aimingoo的专栏
aimingoo的专栏
T
Tailwind CSS Blog
H
Help Net Security
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அதிமுகவை மெல்ல மெல்லக் கரைக்கும் தவெக - ஜெயலலிதாவின் வாக்...
குள.சண்முகசுந்தரம் · 2026-05-30 · via hindutamil

Updated on: 

தமிழகத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி, 4 முறை பிரதான எதிர்க்கட்சி என தமிழக அரசியலில் கோலோச்சிய அதிமுக-வை மெல்ல மெல்ல கரைத்துக் கொண்டிருக்கிறது புதிதாக முளைத்திருக்கும் இன்னொரு நடிகரின் கட்சியான தவெக. “கணிசமான அதிமுக தொண்டர்களும் தவெக-வில் இணையத் தயாராகி விட்டார்கள். இன்னும் 6 மாதத்தில் ஒட்டுமொத்த அதிமுக முக்கிய நிர்வாகிகளும் தவெக-வில் இணைவார்கள்” என்று அடித்துச் சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.

தேர்தலுக்கு முன்பே கூட்டணி வைக்க தவெக-வும் அதிமுக-வும் பரஸ்பரம் விரும்பின. அது நடந்திருந்தால் இன்றைக்கு நிலைமையே வேறாக இருந்திருக்கும். ஆனால், இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே, ‘நானே முதல்வர்' என்று ஆளுக்கொரு பக்கம் நர்த்தனம் ஆடியதால் அந்த எண்ணம் கைகூடாமல் போனது. இருப்பினும், ‘பின்னால் தேவைப்படலாம்’ என்ற ‘மனக்’ கணக்கு இருந்ததாலேயே பிரச்சாரத்தில் இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் அதிகம் சாடிக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகள், இரண்டு கட்சிகளுக்கும் அப்படியான ஒரு நகர்வை நோக்கிச் செல்லவும் வழிகாட்டின.

ஆனால் ஈகோ இடம் தராததால், அதிமுக-விடம் ஆதரவு கோராமல் காங்கிரஸ் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் பக்கம் வண்டியைத் திருப்பினார் விஜய். அவர் அழைத்தாலும் தனக்கு முதல்வர் நாற்காலி நிச்சயமில்லை என்பதால் பழனிசாமியும் தவப்புதல்வரின் பேச்சைக் கேட்டு திமுக தயவில் அரியணை ஏறும் ‘தற்கொலை’ திட்டத்துக்கு தலையாட்டினார்.

இந்த நிலையில், பழனிசாமியின் இந்த நகர்வையே காரணம் காட்டி சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் விஜய் அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள். தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் ஒரு கோஷ்டி எப்படி விஜய்க்கு ‘ஜே’ போட்டதோ அதேபோல் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக-விலும் ஒரு கோஷ்டி விஜய் பக்கம் சாய்ந்தது.

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த அமைச்சர் செங்கோட்டையன், புதிதாக கட்சிக்குள் வந்த லீமா ரோஸ் மூலமாகத்தான் அதிமுக-வை உடைக்கும் இந்த ‘வேலைகள்’ நடப்பதாகவும், செங்கோட்டையன் தனது பழைய பந்தங்கள் மூலம் இதையெல்லாம் ‘முடிப்பதாகவும்’, வாரியம், உள்ளாட்சி உள்ளிட்ட பதவிகளைத் தருவதாகச் சொல்லி அமைச்சர் ஆதவ் இந்த ‘அசைன்மென்ட்களை’ செய்வதாகவும் தினுசு தினுசாக செய்திகளைத் திணிக்கிறார்கள். இந்த வேலைகள் எல்லாம் யார் சொல்லி, எதற்காக, யாரால் நடத்தப்படுகிறதோ தெரியவில்லை. ஆனால், “அரசியலுக்கு புதியவராக இருந்தாலும் ராஜதந்திரமாகச் செயல்படுகிறார்” என எல்லாப் புகழையும் விஜய் தலையில் தூக்கி வைக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் வெளியானதுமே, பாஜக உடனான கூட்டணி முடிந்துவிட்டதாக பட்டு கத்தரித்ததுபோல் அறிவித்துவிட்டது அதிமுக. அடுத்த தேர்தலுக்கு அதிமுக கமலாலயத்தின் கதவுகளைத் தட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அதனால் அதிமுக தனித்துக் களமிறங்க தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

2026 தேர்தலில் திமுக-வோடு நின்ற கட்சிகளில் தேமுதிக, மமக, மதிமுக உள்ளிட்ட சிறு கட்சிகளை தவிர பிரதானக் கட்சிகள் எல்லாம் தவெக பக்கம் ‘தந்திரமாக’ ஒதுங்கிவிட்டன. எனவே, 2029 தேர்தலை திமுக-வும் தனித்தே சந்திக்க வேண்டும் அல்லது பாஜக கூட்டணியை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில் ‘தனித்துப் போட்டி’ என்றதும் வேட்பாளர்கள் கிடைக்காமல் அல்லாடிப் போனது அதிமுக. விளைவு, 9 தொகுதிகளில் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்ட அந்தக் கட்சி, 7 தொகுதிகளில் காப்புத் தொகையையும் காவுகொடுத்தது.

இந்த நிலையில், 2029 மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுக தனித்துப் போட்டியிட்டால் நிலைமை என்னாகும்... அதற்கு முன்னதாக வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகராட்சித்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி வாக்குப் பதிவு நடக்கலாம் என்று வரும் செய்திகளும் அதிமுக வட்டாரத்தை ஆனந்தப்பட வைத்திருக்கிறது. அப்படி வந்தால் ‘விசில்’ பலத்தில் நிச்சயம் உள்ளாட்சிப் பதவிகளை கைப்பற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் பலரும் தற்போது தவெக-வை நோக்கி நகரத் தயாராகி வருகிறார்கள். இதை மனதில் வைத்தே, அந்த 6 மாத கெடுவை வைத்திருக்கிறார் அமைச்சர் ஆதவ்.

அதிமுக-வை மெல்ல மெல்லக் கரைக்கும் அமைச்சர் ஆதவ்வின் திட்டத்தை விமர்சித்திருக்கும் ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார், “யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளும் வேலையைச் செய்கிறார் ஆதவ். ஆள் பிடிக்கும் வேலைகளை இனியும் அவர் செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என கர்ஜித்திருக்கிறார். “எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காகவே இயங்கும்” என்ற ஜெயலலிதாவின் வாக்கு பொய்த்துப் போய்விடுமா?